பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரான கொழும்புப் பயணம் என்பது எத்தனையோ ஆச்சரியங்களுடனும், சலிப்புகளுடனும், சந்தோசங்களுடனும் மெல்ல முடிவடைந்தது. தாய்நாடு பற்றிய ஏக்கமும், நனவிடை தோய்தல்களும் சராசரிக்கு சற்று அதிகமாகவே நிரம்பிய எனக்கு இது போன்ற உணர்வுகளின் சங்கமம் எதிர்பார்ககூடிய ஒன்றே.-1-தலதா மாளிகையை பார்வையிட குடும்பத்துடன் சென்றிருந்தோம். புத்தரின் புனிதப் பல் இருப்பதாக நம்பப்படும் பழம் சிறப்புடையது தலதா மாளிகை. தலதா மாளிகையில் முதலில் எம்மை வரவேற்றதே ஒரு தமிழ்ப் படுகொலைதான். அதன் வாசல் ஒன்றில் “உட் பேகவாண்டாம்” என்றூ... Continue Reading →
கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகிவரும் கோயில்கள்
”நான் கோயில்களை இருக்கக் கூடாது என்று சொல்லவில்லை, கோயில்கள் கொடியவர்களின் கூடாரங்களாக இருக்கக் கூடாது என்றுதான் சொல்கிறேன்” என்ற வசனம் கிட்டத் தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பராசக்தி திரைப்படத்தில் கருணாநிதியால் எழுதப்பட்டது. தமிழகம் எங்கும் பரபரப்பாக பேசப்பட்ட பராசக்தி வசனங்களுல் முக்கிய வசனங்களுள் இதுவும் ஒன்று. (கால ஓட்டத்தில் இந்த வ்சனம் பேசி நடித்த நடிகர் திருப்பதி கணேசா திரும்பிப் போ என்று கழகத் தோழர்களால் கேலி செய்யப்பட்டதும் கருணாநிதி “நான் நாத்திகன், நான் நாத்திகன்”... Continue Reading →
சாரு நிவேதிதா சொல்லும் கேரளமும், சக்கரியா சொல்லும் தமிழ்நாடும்
அரபிக்கடலோரம் என்ற சக்கரியா எழுதி சுகுமாரன் மொழி பெயர்த்த பத்திகளின் தொகுப்பை கொழும்பு பூபாலசிங்கம் புத்தக நிலையத்தில் வாங்கினேன். பத்தி எழுத்துகளை வாசிப்பவர்களுக்கும், தீவிர வாசகர்களுக்கும் சக்கரியா பற்றிய அறிமுகம் அவசியமில்லை. முக்கியமான மலையாள எழுத்தாளர். பத்திரிகையாளர், ஊடக ஆலோசகர், பத்தியாளர், விவசாயி, சினிமா, சிறுகதை – நாவல் எழுத்தாளர் என்ற பல தளங்களில் செயல்படுபவர் சக்கரியா. தொடர்ச்சியாக ஆங்கிலம், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் எழுதுகிறார். காலச்சுவடு இதழுக்காக பிரத்தியேகமாக இவர் எழுதிய பத்திகளே இந்தத்... Continue Reading →
நடிகர் விஜயின் அரசியல் | தலைமறைவான எழுத்தாளர்கள் | புதிய வரவுகள்
- 1 - நடிகர் விஜய் இதோ அரசியலுக்கு வருகிறார், காங்கிரஸ் கட்சியில் சேரப் போகிறார், சேர்ந்தே விட்டார், என்ற செய்திகள் எல்லாம் மெல்லக் கரைந்து போய், அவரது வேட்டைக்காரன் திரைப்படம் தான் வரப் போகிறது என்பது மெல்ல உறுதியாகி இருக்கின்றது. பரபரப்புச் செய்திகளை அள்ளிக் குவித்து, மோசமான வியாபாரம் செய்து கொண்ட பத்திரிகைகளும், இதழ்களும் மெல்ல மெல்ல இப்போது "விஜய் சொன்ன நோ, சூர்யாவுக்கு வலை வீசும் காங்கிரஸ்" என்று அடுத்த சரவெடியை பற்ற... Continue Reading →
சடங்கு நாவல் மற்றும் 1999 திரைப்படம்
-1 – சடங்கு என்கிற எஸ். பொ எழுதிய நாவலை சென்ற வாரம் மீண்டும் ஒரு முறை வாசித்தேன். கலாசாரம், புனிதம் என்றெல்லாம் கட்டியமைக்கப்பட்டு, கட்டியழுது கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தில், அதிலும் யாழ்ப்பாணச் சமூகம் பற்றிய இந்நாவலுக்குரிய சாத்தியம் பேரதிசயம் தான். அதிலும் குடும்பம் என்ற கட்டி எழுப்பப்பட்ட ஓர் அமைப்பை முதன்மைப்படுத்தி, தனி நபர் ஆசாபாசங்களை முக்கியப்படுத்தாமல் தியாகம், விட்டுக் கொடுத்தல், புனிதம் என்றெல்லாம் பேசப்படும் சமூகங்களில், குடும்ப உறவுகளைப் பேணவும், குடும்பத்தை நிலைப்படுத்தவும் (முக்கியமாக... Continue Reading →
நூலகம் – உன்னதம் – விழாக்கள் : சில எண்ணங்கள்
யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு 28 ஆண்டுகளாகிவிட்டன. சில வருடங்களின் முன்னர் எரியும் நினைவுகள் என்ற பெயரில், இப்போது பார்த்தாலும் நெஞ்சை உலுக்கும் அந்த நினைவுகளை சோமிதரன் ஆவணப்படுத்தியிருந்தார். இந்த நூலக எரிப்புப் பற்றி அதிகம் பேசும் பலர் கூட இந்த ஆவணப் படத்தைப் பார்க்கவில்லை என்று பலருடன் பேசியபோது தெரிந்து கொண்டேன். 'யாழ்ப்பாணம் எரிகிறது', '24 மணி நேரம்' ஆகிய இரண்டு நூல்களிலும் யாழ்ப்பாண எரிப்புப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. சுஜாதா “ஒரு லட்சம் புத்தகங்கள்” என்ற பெயரில்... Continue Reading →
பதிவுலக நண்பர்களும் அனுபவங்களும் மற்றும் புல்லட் உடனான என் மீண்ட நட்பு
-1- அது 2006ம் ஆண்டு. கனேடிய புலம்பெயர் வாழ்வு தன் கோர முகத்தைக் காட்டத் தொடங்கியிருந்த காலம் அது வரை கொண்டாடிய உறவுகளும், நட்புக்களும், நம்பிக்கைகளும் தம் கோரமான சுய முகத்தைக் காட்டி என்னைக் கேலிபேசிக் கொண்டிருந்த காலம். புலம்பெயர முன் ஈழத்தில் கிடைக்கப் பெற்று, உலகெல்லாம் சிதறிக் கிடந்த சில நட்புக்களும், ஓரிரு உறவுகளும், எப்போதும் நான் நேசித்த புத்தகங்களும், திரைப்படங்களும் மட்டுமே எனக்கு துணை வந்து கொண்டிருந்தன. எப்போதும் கூட இருந்த இருபதுக்கு மேற்பட்ட... Continue Reading →
வடலி வெளியீடுகள் மற்றும் எழுத்தாளனும் பதிப்பகங்களும்
1என் முன்னைய பதிவொன்றில் நண்பர் ஒருவர் குறிப்பிட்டது போலவே வாசிப்பதற்கு உரிய மன நிலை முன்னெப்போதையும் விட அதிகமாகிவிட்டது போலவே தோன்றுகின்றது. அதிகம் வாசித்தேன் என்பதைவிட பரந்து பட்ட அளவில் வாசித்தேன் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கின்றது. இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு கடந்த சில மாதங்களாக குடிக் கலாச்சாரம், மாற்றுப் பாலினர் தொடர்பான பதிவுகள் முன்வைக்கப்படுகின்றன. காலச்சுவடில் சுகிர்தராணி கவிஞர்கள் சந்திப்பை முன்வைத்து குடிக் கலாச்சாரம் பற்றிய ஒரு கட்டுரையை எழுத அதில் இருக்கும் உள்குத்து,... Continue Reading →
ஈழப் போராட்டம் பற்றிய சில கட்டுரைகள் |கனவுப் புத்தகம் | சுப்ரமணியபுரம்
பெரும்பாலும் வாரம் ஒன்றில் ஏழு நாட்களும் வேலை என்பதாகவே திணிக்கப்பட்ட வாழ்வில் எப்போதாவது கிடைக்கின்ற ஓய்வு நாட்களும் சலிப்புடனேயே கடந்து செல்லுகின்றன. கொடுக்கப்பட்ட குறுகிய சில மணித்தியால ஓய்வுகளையே கொண்டாடிப் பழகிய மனதிற்கு அரிதாகவே கிடைக்கின்ற முழு ஓய்வு நாட்களை கொண்டாட தெரியவில்லையோ தெரியாது. சுதந்திரம் கிடைக்காதவர்களை விட கிடைத்த சுதந்திரத்தை அனுபவிக்கத் தெரியாதவர்களே அதிகம் என்று ஏனோ தோன்றுகின்றது. சில நாட்களாகவே மையம் கொண்டிருக்கும் வெறுமை வலைப்பதிவில் கூட கடந்த சில வாரங்களாக எழுதுவதற்கு அனுசரிக்கவில்லை.... Continue Reading →
மறக்க முடியவில்லை. மறக்க முடியவில்லை
தமிழ் சினிமா புதிய பாதையில் செல்கின்றது என்பதை அண்மையில் வெளியான இரண்டு படங்கள் சிறப்பாக காட்டியுள்ளன. இதில் ஒன்றின் போக்கு பயமுறுத்தி இருக்கின்ற அதே வேளை மற்றைய திரைப்படம் மனதை மயில் இறகால் தடவியது போல சுகமளித்திருக்கின்றது. ஒன்று “இது காதல் வரும் பருவம்” மற்றையது “வெயில்”. தான் இயக்கிய படங்களில் தனது நாயகனை சராசரிக்கு பெரியவனாக காட்டிய ஷங்கரின் ரசனை இன்னும் அவரது கை கூடாத கனவான “அழகிய குயிலே” ஆக தான் இருக்கின்றது என்பதை... Continue Reading →