தொடர்ச்சியாக திணிக்கப்பட்ட ஒரு கட்டாய ஓய்வுக்குப் பின்னர், ஒரு முழு மூச்சுடன் வாசிப்பில நான் இறங்கியபோது தீவிர இலக்கிய இதழ்கள் மீது பெரும் காதலுடன் தான் அவற்றை அணுகினேன். தொடர்ச்சியான வாசகர் ஆதரிப்பில் தமிழில் ஓரளவு நிலைத்துவிட்ட தீவிர இலக்கிய இதழ்கள் என்ற நிலையை காலச்சுவடு, உயிர்மை இதழ்கள் அடைந்திருந்தாலும் காலச்சுவடை என்னளவில் ஒரு மாற்றாந்தாய் மனப்பாங்குடனேயே அணுக முடிந்தது. இதற்கு நான் வாசிப்பில் இறங்கிய அந்த நாட்களில் கண்ணன் தலைமையில் காலச்சுவடு செய்த சில இலக்கியத்துக்கு... Continue Reading →
தேர்தல் கூட்டணி: ஈழத்தமிழன், திமுக, அதிமுக மற்றும் ஞாநி
வரலாற்றுப் பெருமைகளை தொடர்ந்து பேசிப் பேசியே வரலாற்றில் தன் இடத்தை இழந்து கொண்டு வருகின்றான் தமிழன். கனக விசயனின் முடியினை… என்று தொடங்கி தம்புகழ் பாடி, புற நானூற்று வீரம் என்றெல்லாம் பழையதையே மீண்டும் மீண்டும் பேசி மீண்டும் மீண்டும் தமிழனின் தலையில் மிளகாய் அரைத்து வளர்ந்தவர்கள் அடுத்த தேர்தலுக்கு புதிய கூட்டணிகளுடனும், புதிய (கு)யுக்திகளுடனும் மக்களை ஏமாற்ற தயாராகிவிட்டனர். திமுக, அதிமுக என்கிற பெரிய முதலைகள் குழப்புகிற குட்டையில் குதித்து மருத்துவர் ராமதாஸ், கலிங்கப்பட்டி வீரன் வைகோ,... Continue Reading →
உண்மைக்கு நெருக்கமாக: அ. முத்துலிங்கம்
குழந்தைகளாக பிறக்கின்றபோது நாம் நூறு வயதுடன் பிறக்கின்றோம். அதன் பின்னர் வாழ்க்கை வெள்ளம் இழுத்துச் செல்ல செல்ல அதன் திசையிலும், அதை எதிர்த்தும் பயணித்து ஒதுக்கப்பட்ட ஆண்டுகள் மெல்ல கழிந்து செல்ல ஆயுள் கரைந்து இறந்து போகின்றோம். எல்லா மனிதர்களும் பால்யத்தில் ஒரே சாயலான வாழ்வையே வாழ்கின்றனர். அதனால் தான் அந்த வயதில் பொறாமையுணர்வும், ஏற்றத்தாழ்வுகளும் மனதில் குடியேறுவதில்லை. நாட்கள் போக போக, திறந்து வைத்த கற்பூரம் போல பால்யம் கரைந்து செல்ல பொய்மையும் கசடும் குடியேறி... Continue Reading →
புலம்பெயர் ஊடகங்களும் குளறுபடிகளும்
எந்த விதத்திலும் அழகியலுடன் ஒன்றிக்க முடியாத அளவுக்கு குரூரத்தை எம் வாழ்வுடன் பிணைத்து எம்மை அழைத்துச் செல்லுகின்றது நாம் வாழும் தலைமுறை. ஒரு கொலை நடந்தாலும் பதைக்கின்ற மனம் போய் 10, 20 என்றாகி பின் ஐம்பது, நூறாகி இப்போது இதெல்லாம் சாதாரணம் என்று வாழப் பழகிவிட்டது எம் தலைமுறை. கொத்து கொத்தாக இன அழிப்பு நடந்தாலும், தம் தினசரி வாழ்வை அப்படியே வாழப்பழகி விட்டது ஒரு சமூகம். இத்தனை கொலையும் கண்டு, இத்தனை சதைப்பிடங்களையும், அவை... Continue Reading →
வெண்ணிலா கபடிக்குழுவும் யாழ்ப்பாணத்துச் சாதித் திமிரும்
சாதி என்ற கண்ணோட்டத்தை இந்துகளின் மனதில் ஆழமாகப் பதிய வைத்திருக்கிற இந்து மதமே தவறானது என்று நான் கருதுகிறேன். நீங்கள் வீழ்த்த வேண்டிய எதிரி சாதியைக் கடைப்பிடிக்கும் மக்களல்ல. சாதிகளின் மதமான இந்து மதத்தை மக்களுக்குக் கற்றுத் தந்திருக்கிற சாத்திரங்களே உங்களின் பயங்கர எதிரி. சமபந்தி விருந்தில் கலந்து கொள்ளாதவர்களையும் கலப்புமணம் செய்யாதவர்களையும் விமர்சிப்பதும் கேலி செய்வதும் அல்லது எப்போதாவது சில சமயங்களில் சமபந்தி விருந்தை நடத்துவதும் கலப்பு மணவிழாவைக் கொண்டாடுவதும் வீண் வேலையாகும். - அம்பேத்கார்வெகுதாமதமாக... Continue Reading →
திமிர்
சாதி என்ற கண்ணோட்டத்தை இந்துகளின் மனதில் ஆழமாகப் பதிய வைத்திருக்கிற இந்து மதமே தவறானது என்று நான் கருதுகிறேன். நீங்கள் வீழ்த்த வேண்டிய எதிரி சாதியைக் கடைப்பிடிக்கும் மக்களல்ல. சாதிகளின் மதமான இந்து மதத்தை மக்களுக்குக் கற்றுத் தந்திருக்கிற சாத்திரங்களே உங்களின் பயங்கர எதிரி. சமபந்தி விருந்தில் கலந்து கொள்ளாதவர்களையும் கலப்புமணம் செய்யாதவர்களையும் விமர்சிப்பதும் கேலி செய்வதும் அல்லது எப்போதாவது சில சமயங்களில் சமபந்தி விருந்தை நடத்துவதும் கலப்பு மணவிழாவைக் கொண்டாடுவதும் வீண் வேலையாகும். - அம்பேத்கார்வெகுதாமதமாக... Continue Reading →
உலக ரட்சகர் ஒபாமாவும் உளுத்துப்போன தமிழர்களும்
அலுவலகத்தில் அவ்வப்போது கிடைக்கும் ஓய்வு நேரங்களிலும், ஓய்வு நேரங்களில் நூலகங்களுக்கு செல்லும்போதும் The new york times, Time, Macleans, The Economist என்கிற சில ஆங்கில இதழ்களை சற்று புரட்டிப்பார்ப்பது எனது அண்மைக்கால வழக்கம். இந்த நிலையில் பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதை தொடர்ந்து வந்த சில இதழ்களை பார்த்தபோது கட்டுக்கடங்காத அளவு கோபமே வந்தது. எந்த ஒரு இதழிலும் அதன் அட்டைப்பட செய்தி ( cover story ) பெரும் கவனத்தை பெறுவது... Continue Reading →
சுஜாதா இல்லாமல் ஓராண்டு
தோற்றம் - மே 3, 1935 - - - - மறைவு - பெப்ரவரி 27, 2008நாம் கற்றதெல்லாம் உன்னிடத்தில் பெற்றதுநாம் பெற்றதெல்லாம் உன்னை கற்றதால் வந்தது(எழுத்தாளர் சுஜாதாவின் மறைவை முன்வைத்து கலைஞர் முதல் கையெழுத்து பிரதி எழுத்தாளர்கள் வரை அஞ்சலிகளையும் அவரது படைப்புகள் பற்றிய ஆய்வுகளையும் எழுதி விட்ட நிலையில் அவரது பிறந்ததினமான இன்று (மே 3 1935) என்மீதான சுஜாதவின் பாதிப்புகள் பற்றி).சுஜாதாவின் மறைவை ஒட்டி சில பத்திரிகைகளும் நபர்களும் அவர் ஒரு... Continue Reading →
மாற்றம் தேவை : சே குவேரா மற்றும் Slum Dog Millionaire
1சில ஆண்டுகளுக்கு முன்னர் சூரியா நடித்த ஸ்ரீ திரைப்படம் வெளியாகியிருந்த நேரம் அப்படத்தின் இயக்குனர் புஷ்பவாசகன் பத்திரிகை பேட்டி ஒன்றில் ”சே குவேரா, ஹோசிமின், பிரபாகரன் போன்ற புரட்சியாளர்களை பார்த்து நாம் வியந்திருக்கிறோம், ஆனால் அவர்கள் எப்படி, எதன் தூண்டலால் புரட்சியாளர் ஆனார்கள் என்று நாம் யோசிப்பதில்லை. உலக புரட்சியாளார்கள் எப்படி உருவானார்கள் என்று இப்படம் சொல்லும்” என்று சொல்லியிருந்தார். புது இயக்குணர் வேறு. சூர்யா கூட அப்போதுதான் நந்தாவில் நடித்து முடித்து பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தார்.... Continue Reading →
ஈழப்பிரச்சனை – பாகம் 2
ஈழப்பிரச்சனை கொழுந்துவிட தொடங்கிய நாட்கள் முதலாக பலவிதமான விமர்சனங்கள் அதன் மீது எழுத போதும் அதை பற்றிய எதிர்வினைகளை நான் தவிர்த்தே வந்தேன். நேற்று சாருவின் வலைப்பக்கத்தில் அந்த கடிததத்தை பார்த்ததும் அதை பற்றிய எதிர்வினையாக நேற்றைய பதிவை எழுதினேன். இந்த கடிதம் மீது நான் வைக்கின்ற மிக முக்கியமான விமர்சனம் என்னவென்றால், விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துகளை கூறும்போது தமக்கான கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகின்றது என்று கவலைப்படுபவர் தனது கருத்து சுதந்திரத்தை இலங்கை அரசாங்கம் மீது... Continue Reading →