ஒக்ரோபர் 2023 முகநூல் குறிப்புகள்

ஒக்ரோபர் 16, 2023 பலஸ்தீனத்தில் தற்போது நடந்துகொண்டிருக்கின்ற இனப்படுகொலை பற்றிய வரலாற்றுப் பின்னணியை சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்தச் சந்திப்பில் மீநிலங்கோ வெளிப்படுத்துகின்றார். பார்க்கவேண்டியதோர் காணொலி.  பலஸ்தீனத்தில் இந்தச் சந்திப்பில்  மீநிலங்கோ இரண்டு புத்தகங்களைப் பரிந்துரைத்திருப்பார்.  அதுபோல சில ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர் பிரகாஷ் வெங்கடேசன் புத்தகமொன்றினை எனக்குப் பரிசாகக் கொடுத்தனுப்பியிருந்தார்.  மூன்று புத்தகங்களையும் ஆர்வமுள்ளவர்களுக்காக இங்கே பகிர்ந்துகொள்கின்றேன். https://www.youtube.com/watch?v=MxMOTkzgqX4&si=VaAeLUaym2NVtGNN&fbclid=IwAR1INog1zHZzruY98JrG_dFdSvromOAKGHr81Bexq9O34WucYHuPkzuDJwM ஒக்ரோபர் 21, 2023 தமிழ் இலக்கியத்தில் அறம் என்கிற தலைப்பிலான ஜெயமோகனின் உரை ஒன்று தமிழ் இலக்கியத்... Continue Reading →

இயல் விருது விழா – 2015

2014ஆம் ஆண்டிற்குரிய இயல் விருது மற்றும் கனேடிய இலக்கியத் தோட்டத்தின் விருதுகள் வழங்கும் நிகழ்வு, ஜூன் 13ஆம் திகதி ரொரன்றோ றடிசன் ஹோட்டலில் இடம்பெற்றது.  2014ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது எழுத்தாளர் ஜெயமோகனுக்கு வழங்கப்பட்டது. அத்துடன், புனைவுக்கான நாவல் பரிசு தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’, குணா. கவியழகனின் ‘நஞ்சுண்டகாடு’ ஆகிய இரு நாவல்களுக்கும், அபுனைவு நூலுக்கான பரிசு மு. நித்தியானந்தனின் ‘கூலித்தமிழ்’,  ஜெயராணியின் ‘ஜாதியற்றவளின் குரல்’ ஆகிய இரு நூல்களுக்கும், கவிதைக்கான பரிசு கதிர்பாரதியின் ‘மெசியாவிற்கு மூன்று... Continue Reading →

எஸ்பொவுடனான சந்திப்பும் இயல் விருதுக் குழப்பங்களும்

எஸ்பொ நனவிடை தோய்தல்இயல்விருது பெறுவதற்காக கனடா வந்திருந்த எஸ்பொவுடனான விருது வழங்கும் விழாவிற்கு அடுத்த நாள் நடைபெற்ற காலம் செல்வம் ஒழுங்கு செய்திருந்த “எஸ்பொ நனவிடை தோய்தல்” என்கிற சந்திப்பொன்றிற்குச் சென்றிருந்தேன்.  நிறைய எழுத்தாளர்கள் அவர்கள் எழுத்தினூடாக அவர் எப்படி இருப்பார் என்று தோன்றுகின்ற விம்பம் போல இருப்பதில்லை.  ஆனால் எஸ்போ, அவர் எழுத்துகளூடாகத் தெரிவது போன்ற கலகம் செய்யும் இயல்புடையவராகவே தெரிந்தார்.  சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு, தமிழ் தேசியம், மகாவம்சம் என்று நிறைய விடயங்களைத்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑