சிறுவர் இதழ்களை வாசிப்பதால் ஏற்பட்ட வாசிப்பின் அறிமுகம் அதிலிருந்து வெகுஜன இதழ்களை நோக்கிச் சென்றபோது கல்கண்டில் பொது அறிவுத் துணுக்குகள், ஒரு பக்கக் கட்டுரைகள், சங்கர்லால் துப்பறியும் தொடர்கதைகள் போன்றவற்றைப் போலவே அதில்வரும் தமிழ்த் திரைப்பட விமர்சனங்களும் விருப்பத்துக்குரியனவாக அமைந்திருந்தன. திரைப்படம் என்பது அப்போது எனக்குத் தமிழ்த் திரைப்படங்களாகவே இருந்தது. திரைப்படங்களைப் பார்ப்பது போலவே திரைப்படங்கள் குறித்த இதழ்களை வாசிப்பதிலும், திரை விமர்சனங்களை வெவ்வேறு இதழ்களில் வாசிப்பதிலும் சிறுவயதில் ஆர்வம் இருந்தது. அந்த இதழ்களிலும் சினிமா பற்றிய... Continue Reading →