ஐ. சாந்தனின் “காலங்கள்”

எனது சிறிய வயதில் நான் நேரடியாகக் கண்டறிந்துகொண்ட முதல் எழுத்தாளர் என்று ஐ. சாந்தனையே சொல்ல முடியும்.  அவரது கிராமத்தையே நானும் சேர்ந்தவன் என்பது அதற்கான வாய்ப்பினையும் எனக்கு நல்கியது எனலாம்.  அப்போது நான் படித்துக்கொண்டிருந்த சிறுவர் பாடசாலையின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் 1987ல் நடைபெற்றன.  அந்நிகழ்வுகளின் போதோ அல்லது அதனைத் தொடர்ந்து வந்த  ஒருசில ஆண்டுகளிலோ இடம்பெற்ற ஏதோ ஒரு பாடசாலை விழாவில் சாந்தன் அவர்களின் இயக்கத்தில் “சுப்பன்ணாவும் சோமன்ணாவும்” என்றொரு நாடகம் அரங்கேற்றப்பட்டது.  அந்த... Continue Reading →

மீசை என்பது வெறும் மயிர் | சிறுவர் நூல்கள் | “தழும்பு” குறும்படம்

மீசை என்பது வெறும் மயிர் புனைவு நூலொன்றின் புனைவு எதில் இருந்து தொடங்குகின்றது? என்பதைக் கேள்வியாக எழுப்பி, புனைவு நூலொன்றின் புனைவு அதன் அட்டையில் இருந்தே தொடங்குகின்றது என்று நந்தஜோதி பீம்தாஸ் கூறுவதாக “மீசை என்பது வெறும் மயிர்” என்கிற நூலில் வருகின்றது.  என்ன சுவாரசியம் என்றால் புனைவினை அதன் முன்னட்டையில் இருந்து பின்னட்டை வரை புனைவாகவே கொண்டமைந்த நூல் என்று மீசை என்பது வெறும் மயிரே அமைகின்றது. யார் இந்த நந்தஜோதி பீம்தாஸ்? நாடு திரும்பாத... Continue Reading →

தேவகாந்தனின் கனவுச்சிறை : அறிமுக உரை

ஈழத்துப் படைப்பாளிகளில் மிக நீண்டகாலமாகவும், தொடர்ச்சியாகவும் இயங்கிக்கொண்டிருப்பவர்கள் அரிது.  மிக அருமையான படைப்பிலக்கியங்களை ஆக்கிய பலர் இள வயதிலேயே மரணித்துள்ளார்கள்.  இன்னும் பலர் மிகச் சில படைப்புகளுடன் தம் எழுத்துகளை மட்டுப்படுத்திக்கொண்டுவிட்டார்கள்.  இந்த நிலையில், நீண்டகாலமாகவும், தொடர்ச்சியாகவும் எழுதிக்கொண்டிருக்கின்ற காத்திரமான படைப்பாளிகளுள் ஒருவர் தேவகாந்தன். “எங்கள் குடும்பம் அடிஅடியாக தமிழ்ப் புலவர் பரம்பரையில் வந்தது என்று என் தாயார் சொல்லக் கேட்டிருக்கிறேன்” என்று மின்னம்பலத்துக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தேவகாந்தன் குறிப்பிட்டிருக்கின்றார்.  தனது எழுத்துலகப் பிரவேசம் குறித்த... Continue Reading →

அ. யேசுராசாவின் “தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்”

“தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்” என்கிற அ. யேசுராசவின் சிறுகதைத் தொகுப்பினை சென்ற ஆண்டளவில் வாசித்து இருந்தேன்.  அப்போது அது பற்றி எழுதவேண்டும் என்று நினைத்திருந்த சிறு குறிப்பும், வழமைபோலவே “எழுத நினைத்த விடயங்கள் பட்டியலில்” சென்று புதைந்துவிட்டது.   சில நாட்களின் முன்னர் யேசுராசா அத்தொகுப்புப் பற்றி நினைவுக்குறிப்பு ஒன்றினை முகநூலில் பகிர்ந்திருந்தார்; அதனை வாசித்தவுடன் மீண்டும் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தொகுப்பினை எடுத்து வாசித்தேன்.   அண்மைக்காலத்தில் உணர்வுரீதியாக மிக நெருக்கமாக உணர்ந்த தொகுப்பாக அந்த... Continue Reading →

குறும்படப் பயிற்சிப் பட்டறை : சர்க்கரைப் பந்தலிற் தேன்மழை

ஈழத்தமிழர்கள் தம்மை ஒரு தேசிய இனமாக உணர்வது போல தமக்கான தனியான பண்பாட்டு வெளிப்பாடுகளையும் பேணவேண்டும் என்பது எனது உறுதியான நிலைப்பாடு.  துரதிஸ்டவசமாக, பெரும்பாலும் நாம் எம்மை தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளங்களுடன் கலந்தே அடையாளப்படுத்தி வருகின்றோம்.  இது எமக்கான தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களை அழித்துவிடுவதுடன், தேச உருவாக்கத்திலும் எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றது.  எளிய உதாரணமாக, புலம்பெயர் நாடுகளில் நடக்கின்ற திருமண விழாக்கள் போன்ற சடங்குகளில் தமிழகத்து, வட இந்திய பாணியினது செல்வாக்குகள் அதிகரித்து வருவதை அவதானிக்கலாம். தவிர, புலம்பெயர்... Continue Reading →

சாம்பல் பறவைகள் குறுநாவலை முன்வைத்து

ஒப்பீட்டளவில் குறைவாகவே படைப்பிலக்கியங்கள் வெளியாகும் கல்முனையில் இருந்து எஸ். அரசரெத்தினம் எழுதிய சாம்பல் பறவைகள் என்ற குறுநாவலை வாசிக்கமுடிந்தது.  இக்குறுநாவல் 2009ல் ஈழப்போரில் தொடர்ச்சியாக அகப்பட்டு, கடுமையான இழப்புகளைச் சந்தித்த ஒரு குடும்பத்தைப் பற்றியும், அதன் கதாபாத்திரங்கள் ஊடாக எம்முடனான உரையாடல்களையும், விமர்சனங்களையும் மேற்கொள்ளுவதால் முக்கியமான ஒன்றாக அமைகின்றது. வன்னியைச் சேர்ந்த பவானிக்கும்  வவுனியாவைச் சேர்ந்த ஆனந்தனுக்கும் அவர்கள் வவுனியாவில் ஆசிரியர்களாகப் பணியாற்றிக்கொண்டு இருக்கின்றபோது காதல் உருவாகின்றது.  பெரும் செல்வந்தரான ஆனந்தனின் தந்தை தனது எதிர்ப்பைத் தெரிவிப்பதோடு,... Continue Reading →

எஸ்பொவுடனான சந்திப்பும் இயல் விருதுக் குழப்பங்களும்

எஸ்பொ நனவிடை தோய்தல்இயல்விருது பெறுவதற்காக கனடா வந்திருந்த எஸ்பொவுடனான விருது வழங்கும் விழாவிற்கு அடுத்த நாள் நடைபெற்ற காலம் செல்வம் ஒழுங்கு செய்திருந்த “எஸ்பொ நனவிடை தோய்தல்” என்கிற சந்திப்பொன்றிற்குச் சென்றிருந்தேன்.  நிறைய எழுத்தாளர்கள் அவர்கள் எழுத்தினூடாக அவர் எப்படி இருப்பார் என்று தோன்றுகின்ற விம்பம் போல இருப்பதில்லை.  ஆனால் எஸ்போ, அவர் எழுத்துகளூடாகத் தெரிவது போன்ற கலகம் செய்யும் இயல்புடையவராகவே தெரிந்தார்.  சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு, தமிழ் தேசியம், மகாவம்சம் என்று நிறைய விடயங்களைத்... Continue Reading →

நான் ஒரு படைப்பாளியல்ல; பாணன் – எஸ். பொ

ஈழத்துப் படைப்பாளிகளும் முக்கியமானவர்களுல் ஒருவரும் எனக்குப் பிடித்தவருமான எஸ் பொவிற்கு இவ்வாண்டு இயல் விருது வழங்கப்படவிருப்பதாக அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.  இயல்விருது பற்றிய விமர்சனங்கள் நிறைய இருந்தபோதும் இவ்வாண்டுக்குரிய இயல்விருது எஸ்பொவிற்கு வழங்கப்பட்டிருப்பதன் காரணமாக எஸ்பொவை காணும் வாய்ப்புக் கிட்டியிருப்பது குறித்தும் மகிழ்ச்சியே.  ஈழத்துப் படைப்பாளிகளில் எஸ்பொவையும், மு. தளையசிங்கத்தையும் முழுவதும் தொடர்ச்சியாகவும், விரிவாகவும் வாசிக்கவேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் நிறையத் தடவைகள் காலந்தாழ்த்தியே வந்துள்ளேன்.  அண்மையில் எஸ்பொ கனடா வருகின்றார் என்று அறிந்ததும் அதற்கிடையில் அவரை முழுமையாக... Continue Reading →

செழியனின் நூல் மற்றும் காலம் இதழ் வெளியீடு

விதிக்கப்பட்ட வாழ்க்கையும் வீழ்ந்து சென்ற நம்பிக்கைகளும் – தேவகாந்தனின் விதி நாவல் பற்றிய சில அனுபவங்கள்

விதி என்றால் விதிக்கப்பட்டது என்று எமக்கும் பத்தாம் ஆண்டில் படிப்பிக்கப்பட்டிருக்கின்றது. அதே பத்தாம் ஆண்டில் தான் 'நாடென்ப நாடா வளத்த, நாடல்ல நாட வளம் தரும் நாடு' என்பதும் படிப்பிக்கப்பட்டிருந்தது.  ஆனால் தேவகாந்தன் தனது விதி நாவலில், நாடியும் வளம் தந்து விடாத நாடொன்றில் பிறந்து வளர்ந்தவர்களின் கதையைச் சொல்லுவதன் மூலம் புதிய விதி பற்றிச் சொல்லுகின்றார். "ஒரு காலத்தில கடவுளால படைக்கப்பட்டது விதி என்ற ஒரு கருத்து இருந்தது.  பிறகு ஒவ்வொருவரும் தாங்கள் தாங்கள் செய்கிற... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑