தாயகக் கனவுகள் நூல்வெளியீடு – தீபன் சிவபாலனின் தொகுப்பும் உரையும்

“தாயகக் கனவுகள்: பிரதிகளை முன்வைத்து ஓர் உரையாடல்” என்கிற தலைப்பில் வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்நூலின் வெளியீட்டு நிகழ்வு சனிக்கிழமை, ஒக்ரோபர் 08, 2022 அன்று கனடாவின் ஸ்கார்பரோ நகரில் இடம் பெற்றது. நிகழ்வில் தீபன் சிவபாலன் ஆற்றிய உரை. https://www.youtube.com/embed/UQc-VZlR5IA நன்றி - வடலியின் யூட்யூப் தளம்

நூல்தேட்டப் பதிவு

நூல்தேட்டப் பதிவு 894.8(64)சமகால இலக்கிய ஆய்வுகள், கட்டுரைகள் தாயகக் கனவுகள்: பிரதிகளை முன்வைத்து ஓர் உரையாடல். அருண்மொழிவர்மன் (இயற்பெயர்: சுதர்சன்ஸ்ரீநிவாசன்).கனடா: வடலி வெளியீடு, இல. 35, Long Meadow Road, Brampton, Ontario L6P 2B1;,1வது பதிப்பு, தை 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).xix, 122 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21.5x14 சமீ.,ISBN : 978-1-7779375-1-5. ஈழப்போராட்டம், அது குறித்த நூல்கள், அவற்றின் வாசிப்பு அனுபவங்கள் ஆகிய பரப்புக்களில்அருண்மொழிவர்மன் எழுதிய கட்டுரைகளின் தொகுதி... Continue Reading →

தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல் : விமர்சன உரை

தமிழ்நதியின் பார்த்தீனியம் நூல்பற்றிய விமர்சன உரையை ஆற்றுமாறு நான் இங்கே கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றேன்.  கொடுக்கப்பட்ட கால இடைவெளிக்குள் சொல்லவேண்டிய விடயங்களைச் சொல்லிமுடிப்பது என்பது சவாலானது.  எனக்குத் தரப்பட்டிருக்கின்ற கால இடைவேளைக்குள் இந்நாவல் பற்றி ஆவணப்படுத்தல், வராலாற்றெழுதியல் என்பவற்றில் அக்கறைகொண்டிருப்பவன் என்கிற பின்னணியுடன் கூடிய எனது விமர்சனத்தை இங்கே பகிர இருக்கின்றேன்.  அந்த அளவில் இந்த “விமர்சனமானது” முழுமையான விமர்சனமாக அமையாமல் இருக்கக்கூடும் என்பதை முற்குறிப்பாக கூறிக்கொள்ளுகின்றேன். இந்நாவலானது ஈழப்போராட்டத்தில், பெருமளவு இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இணைந்துகொள்ளத் தொடங்கிய 80களின்... Continue Reading →

“ராஜீவ் காந்தி படுகொலை – வெளிவராத மர்மங்கள்” புத்தகம்.

கட்டுரையை வாசிக்கும் முன்னரான சிறு குறிப்பு:  ராஜீவ் காந்தி படுகொலை பற்றி முன்பொருமுறை திருச்சி வேலுசாமியின் புத்தகத்தை வாசித்த கையோடு எழுதியது இக்கட்டுரை.  இவ்வழக்கு விசாரணையில் இருக்கின்ற மிக மிக வெளிப்படையான சில அபத்தங்களைச் சுட்டிக்காட்ட இக்கட்டுரையை இப்போது மீளப் பகிர்கின்றேன். இந்தக் கொலையை யார் செய்தார்கள் / செய்யவில்லை என்பதைவிட இவ்வழக்கு விசாரணையின் அபத்தங்களும், வேண்ட்மென்றே சில விடயங்கள் கடந்து செல்லப்பட்டதன் பின்னால் இருக்கக்கூடிய சதிவலையும் கவனிக்கப்படவேண்டும் என்பதும் மரண தண்டனை ஒழிப்பு மீதான அக்கறையுமே... Continue Reading →

நாம் தமிழர் கட்சி ஆவணம் தொடர்பாக சில கருத்துக்கள்

  ##நாம் தமிழர் ஆவணத்தை ஒருவாறாக இன்று வாசிக்கக் கிட்டியது.  ஆவணத்தில் திராவிடர்கள் யாரென்பது தொடர்பாகக் கூறப்பட்டிருக்கின்ற கருத்துக்களிலும், தமிழ்நாட்டில் நிலவுகின்ற முகாமையான முரண்பாடுகள் என்று பட்டியலிடப்பட்டுள்ள 10 முரண்பாடுகளில் முகமதியர்கள், கிறீஸ்தவர்கள் தொடர்பாக எச்சரிக்கையோடும், விழிப்போடும், அன்போடும் கையாளப்படவேண்டிய தரப்பினர் என்று குறிப்பிடப்பட்டிருப்பதிலும் உடன்பாடு இல்லை.  முகமதியர்கள், கிறீஸ்தவர்கள் தொடர்பான இந்தப் பார்வை முழுக்கத் தவறானதும் கூட.  (இந்த முரண்பாட்டுப் பட்டியலில் எனக்கு உடன்பாடில்லாத வேறு முரண்பாடுகளுன் இருந்தாலும், முக்கியத்துவம் கருதி இங்கே இதனைச் சுட்டிக்காட்டுகின்றேன்.)... Continue Reading →

புத்திசீவிகளின் அறிக்கை தொடர்பாக சில சந்தேகங்கள்………

1.  அடித்தவர் sorry சொன்னால்தான் அடிவாங்கியவரின் வலி குறையும் என்று தமிழர் - முஸ்லீம்கள் பிரச்சனைகளில் சொல்லுபவர்கள்தான் சிங்கள அரசுடன் நல்லிணக்கம் செய்யுமாறு தமிழர்களைக் கூறுகின்றனர், எனது கேள்வி இங்கே அடித்தவர்கள் சிங்களவரா அல்லது தமிழரா........... 2.  இங்கே முஸ்லீம்களின் வெளியேற்றம் பற்றிப் பேசுபவர்கள் அதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் செய்துகொண்ட ஒப்பந்தம் பற்றி ஏன் வாய் திறப்பதேயில்லை.  தமிழர்கள் - முஸ்லீம்களிடையான அடிப்படைப் பிணக்கள் தொடர்பான குறைந்த பட்ச இணக்கப்பாடுகள்... Continue Reading →

பெயரிடாத நட்சத்திரங்கள் தொகுப்பை முன்வைத்து ஈழப் போராட்டத்தில் பெண் புலிகள்

“பெயரிடாத நட்சத்திரங்கள்: ஈழப் பெண்போராளிகளின் கவிதைகள்” அறிமுகவிழாவில் வாசித்த கட்டுரை பெயரிடாத நட்சத்திரங்கள் என்கிற பெயரில் ஈழத்துப் பெண் போராளிகளின் கவிதைகள் தொகுக்கப்பட்டு வெளிவந்திருக்கின்றன என்று அறிந்தபோது, அந்தப் புத்தகம் என் கைக்கு கிட்டும் முன்னர் அந்தப் புத்தகம் எவ்வாறு எதிர்கொள்ளப்படும் என்று ஒருமுறை யோசித்துப் பார்த்தேன்.  புலி எதிர்ப்பு எதிர் புலி ஆதரவு என்கிற தீர்மாணிக்கப்பட்ட பார்வைகளோடே பிரதிகள் அணுகப்படும் இன்றைய சூழலில் இப்புத்தகம் முழுக்க முழுக்க புலிகளின் பெண் போராளிகளின் கவிதைகளுடன் வெளிவந்திருப்பது எவ்வாறு... Continue Reading →

பிரதீஸ் என்றொரு நண்பன் அல்லது ஜூலை 09, 1995

பிரதீஸுடன் நான் எப்போது நெருக்கமாக இருந்தேன் என்பது எனக்கு இன்றும் சரிவர தெரியவில்லை எனது முதல் நண்பன் யாரென்று இப்போது இணைய தளங்களில் கடவுச்சொல்லை ஞாபகப்படுத்தக் கேட்கும்போதெல்லாம் அவனது பேர் தான் ஞாபகம் வருகின்றது. ஆனால் எந்தக் காலப்பகுதியிலும் எனக்கு ஆக நெருக்கமான நண்பனாக அவன் இருந்ததில்லை. அப்போது நாங்கள் நவாலியில் இருந்தோம். நவாலி மகாவித்தியாலயம் என்ற பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்பு படித்துவந்தேன். புதிய இடம். புதிய சூழல். எவருடனும் பெரிதாக நெருங்கி பழக முடியவில்லை. கொழும்பில்... Continue Reading →

எனது பார்வையில் கொலை நிலம் – புத்தக அறிமுக விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை

உரையாடல் என்பது எனக்கு எப்போதும் பிடித்தமான ஒன்றாகவே இருந்திருக்கின்றது.  வெவ்வேறு கருத்துகளை, பார்வைகளை, அரசியலைக் கொண்டோர் மேற்கொள்ளும் உரையாடல்களை ஆர்வத்துடன் தேடி வாசித்து வந்திருக்கின்றேன்.  இவ்வாறான உடையாடல்கள் மூலம் தெளிவும், நாம் கட்டமைத்து வைத்திருக்கின்ற கருத்துகளை, அரசியலை மீள்பார்வை, மீள் பரிசீலனை செய்வதற்கான வாய்ப்பும் கிடைக்கின்றன.  அண்மையில் பிளேட்டோவின் குடியரசை வாசிக்கத் தொடங்கியபோது உரையாடல் என்பது எத்தனை வீச்சான வடிவம் என்பதையும் அறிய முடிந்தது.  வெறும் வாதத்துக்காக என்றில்லாமல் ஆழமாக தத்தம் நிலைகளை முன்வைத்துப் பேசுகின்ற விவாதங்களும்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑