கனடாவில் இருந்து வெளிவந்த முக்கியமான பத்திரிகைகளில் ஒன்றான வைகறையின் ஆசிரியரும் மிக நீண்டகாலமாகவே சமூக, அரசியல் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தவரும், நண்பருமான ரவி என்கிற ரவிச்சந்திரநேசன் பொன்னுத்துரை ஜனவரி 25, 2025 அன்று இயற்கையெய்தி இருக்கின்றார். தனது சிறுவயது முதலே சமூக நலனில் அக்கறையும் அரசியல் உணர்வும் கொண்டு வளர்ந்த ரவி, எண்பதுகளில் ஈழத்தமிழரின் தேசிய இன விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருக்கொள்ளத் தொடங்கியபோது தானும் விடுதலை இயக்க அரசியலில் இணைந்துகொண்டார். தேசிய இன... Continue Reading →
Ontario Science Centre மூடுதல் அறிவிப்பும் செய்தித் தணிக்கையும்
ஒன்ராறியோவின் உட்கட்டுமான அமைச்சர் (infrastructure minister) Kinga Surma, Ontario Science Centre இன் கூரையில் உள்ள ஓடுகள்/கூரை மோசமான நிலையில் இருப்பதாகவும், அதனால், பொதுமக்களின் நலனை முன்னிட்டு அதனை பொதுமக்கள் பாவனையில் இருந்து உடனடியாக மூடப்பட வேண்டும் என்று நிபுணர்களின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி Ontario Science Centre உடனடியாக மூடப்படுவதாக வெள்ளிக்கிழமை, ஜூன் 21, 2024 அன்று அறிவித்தார். ஆயினும் இந்தப் பரிசோதனைகளைச் செய்த Rimkus Consulting Group இன் அறிக்கையின்படி Ontario Science Centre... Continue Reading →