கற்சுறா, எனது பதிவில், நான் சொல்லாத விடயங்களைச் சொன்னதாகவும், சொன்ன விடயங்களைச் சொல்லாததாகவும் நீங்கள் எழுதியிருப்பது ஒரு விதத்தில் என் மீதான ஒரு அவதூறாக அமைகின்றது என்பதை நான் நான் என்ன சொல்லியிருக்கின்றேன், அதை எவ்வாறு நீங்கள் மடைமாற்றியிருக்கின்றீர்கள், நான் சொன்னவற்றைச் சொல்லவில்லை என்றிருக்கின்றீர்கள் என்பதையெல்லாம் விளக்கமாகவே சுட்டிக்காட்டியிருக்கின்றேன். அந்தப் பதிவு ஒரு கட்டுரையோ அல்லது ஈழப்போராட்டம் குறித்த வரலாறோ அல்ல; உரையாடல் ஒன்றுக்கான ஒரு குறிப்பு. ஆனால் நீங்கள் ஒட்டுமொத்த ஈழப்போராட்டத்தில் இடதுசாரிகளினதும் பிற இயக்கத்தினரினதும்... Continue Reading →
தேரா மன்னா!
வெளிப்படையானதும் வினைத்திறனையும் கொண்டதாக ஓர் உரையாடல் அமையவேண்டுமானால் நாம் உரையாடும் எதிர்த்தரப்பினர் என்ன சொல்கின்றார்கள் என்பதைக் கூர்மையாக அவதானிப்பதும், அதில் ஏதும் குழப்பம் இருப்பின் தெளிவுபடுத்திக்கொள்வதும், தாம் இருக்கும் நிலைப்பாட்டுடன் எதிர்த்தரப்பினர் சொல்லும் கருத்துநிலை / எடுக்கின்ற நிலைப்பாட்டுடன் ஒப்பிட்டுத் தமக்குள் கேள்வி எழுப்பிக் கொள்வதும், அவர்கள் என்ன அர்த்தத்தில் (context) சொல்கின்றார்கள், எந்த உரையாடலின் அல்லது கடந்தகால நிலைப்பாடுகளின் தொடர்ச்சியாக அதைச் செய்கின்றார்கள் என்பதையும் முன் முடிவுகளோ அல்லது திரிவுபடுத்தல்களோ இல்லாமல் புரிந்துகொள்வதும், குறைந்த பட்சம்... Continue Reading →