றஷ்மியின் சற்றே பெரிய கதைகளின் புத்தகம் – வாசிப்பனுபவம்

ஓவியராகவும் நூல் வடிவமைப்பாளராகவும் கவிஞராகவும் நன்கறியப்பட்டவரான றஷ்மி நிறைய நூல்களின் அட்டைப்படங்களை தனித்துவமான அழகியலோடு உருவாக்கிக் கொடுத்திருப்பவர்.  பல எழுத்தாளர்கள், கலை இலக்கியச் செயற்பாடுகளின் கோட்டோவியங்களை அவ்வப்போது வரைந்தும் முகநூலில் பகிர்ந்துவருவார்.  பலரது புரொஃபைல் படங்களாக றஷ்மி வரைந்த கோட்டோவியங்களே இருப்பதை அவதானித்திருக்கின்றேன்.   இதுவரை ஐந்து கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.  காவு கொள்ளப்பட்ட வாழ்வு முதலாய கவிதைகள், ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு, ஈதேனின் பாம்புகள், ஈ தனது பெயரை மறந்துபோனது, அடைவுகாலத்தின் பாடல்கள் என்கிற இவரது... Continue Reading →

ஆ. இரா. வேங்கடாசலபதிக்கு 2024 சாகித்திய அகடமி  விருதுகிடைத்தமை குறித்த விமர்சனங்கள் அல்லது புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தல்

ஆ. இரா. வேங்கடாசலபதி  எழுதி காலச்சுவடு பதிப்பகம் ஊடாக பெப்ரவரி 2022 இல் வெளிவந்த “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908” என்கிற நூலுக்கு இந்த ஆண்டுக்குரிய (2024) சாகித்திய அகாதமி விருது கிடைத்திருப்பதன் தொடர்ச்சியாக  சில உரையாடல்கள் தொடங்கியிருக்கின்றன.  இந்த விமர்சனங்களில், ஏற்கனவே மக்கள் வெளியீடாக 1987 இல் வெளிவந்த நூலுக்கு இப்பொழுது 2024இல் விருது கிடைத்திருக்கின்றது என்கின்ற ஒரு கருத்து முன் வைக்கப்பட்டிருக்கின்றது.  இந்தக் கருத்தை முன்வைத்தவர்களில் ஒருவரான  ரியாஸ் குரானா அவர்கள் டிசம்பர் 22... Continue Reading →

பெரியண்ணன்கள் கவனம்!

அண்மையில் தனது முகநூல் பக்கத்தில் காலச்சுவடு பத்திரிகையின் ஆசிரியர் கண்ணன் பாமினி எழுத்துருக்களைப் பற்றிச் சில கருத்துகளைக் குறிப்பிட்டிருந்ததைத் தொடர்ந்து முகநூலில் தொடர்ச்சியான விவாதம் ஒன்று இடம்பெற்றது.  அந்தக் குறிப்பினைப் பார்த்தபோது அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை விட கண்ணனின் தொனியே மிகவும் மோசமானதாகவும், மேட்டிமைத்தனத்தைத் காட்டுவதாயும் அமைந்திருந்தது.  அதைத்தொடர்ந்து தனது சிறுகதைகளால் பரவலாக அறியப்பட்ட ரஞ்சகுமார் கண்ணனின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.  அவர் முன்வைத்த  முக்கிய வாதம், //எல்லோருக்கும் உடனே புரியக்கூடிய ஒரேயொரு... Continue Reading →

பிடிக்க நினைத்தது பிள்ளையார்தான்………..

தமிழர் உணவுகள் என்கிற பக்தவத்சல பாரதி தொகுத்து காலச்சுவடு பதிப்பாக வெளியான புத்தகத்தைப் பார்த்ததும் உடனே படிப்பதில் ஆர்வம் உண்டானது. என்னுடன் வேலைத் தளத்தில் பணிபுரிகின்ற ஈரானைச் சேர்ந்த வர்லாறு, வாசிப்பில் அதிகம் அக்கறை கொண்ட நண்பர் ஒருவருடன் மத்தியான சாப்பாட்டு நேரத்திலும் பேசுகையில் எமக்கும் பாரசீகர்களுக்கும் உணவுப் பழக்கங்களில் இருக்கின்ற அனேக ஒற்றுமைகளை அவதானிக்க முடிந்தது.  ஒரு உதாரணத்துக்கு நாம் குத்தரிசிச் சோற்றில் கஞ்சியை வடித்துக் குடிப்பது வழக்கம் (தமிழகத்தில் இவ்வழக்கம் இருக்கின்றதோ தெரியவில்லை).  அனேகம்... Continue Reading →

வடலி வெளியீடுகள் மற்றும் எழுத்தாளனும் பதிப்பகங்களும்

1என் முன்னைய பதிவொன்றில் நண்பர் ஒருவர் குறிப்பிட்டது போலவே வாசிப்பதற்கு உரிய மன நிலை முன்னெப்போதையும் விட அதிகமாகிவிட்டது போலவே தோன்றுகின்றது. அதிகம் வாசித்தேன் என்பதைவிட பரந்து பட்ட அளவில் வாசித்தேன் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கின்றது. இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு கடந்த சில மாதங்களாக குடிக் கலாச்சாரம், மாற்றுப் பாலினர் தொடர்பான பதிவுகள் முன்வைக்கப்படுகின்றன. காலச்சுவடில் சுகிர்தராணி கவிஞர்கள் சந்திப்பை முன்வைத்து குடிக் கலாச்சாரம் பற்றிய ஒரு கட்டுரையை எழுத அதில் இருக்கும் உள்குத்து,... Continue Reading →

காலச்சுவடு: கருணா பற்றிய கட்டுரைக்கு ஒரு எதிர்வினை

தொடர்ச்சியாக திணிக்கப்பட்ட ஒரு கட்டாய ஓய்வுக்குப் பின்னர், ஒரு முழு மூச்சுடன் வாசிப்பில நான் இறங்கியபோது தீவிர இலக்கிய இதழ்கள் மீது பெரும் காதலுடன் தான் அவற்றை அணுகினேன். தொடர்ச்சியான வாசகர் ஆதரிப்பில் தமிழில் ஓரளவு நிலைத்துவிட்ட தீவிர இலக்கிய இதழ்கள் என்ற நிலையை காலச்சுவடு, உயிர்மை இதழ்கள் அடைந்திருந்தாலும் காலச்சுவடை என்னளவில் ஒரு மாற்றாந்தாய் மனப்பாங்குடனேயே அணுக முடிந்தது. இதற்கு நான் வாசிப்பில் இறங்கிய அந்த நாட்களில் கண்ணன் தலைமையில் காலச்சுவடு செய்த சில இலக்கியத்துக்கு... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑