தெளிவத்தை ஜோசப்பின் நினைவேந்தல் நிகழ்வு

ஈழத்தின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான தெளிவத்தை ஜோசப்பின் நினைவேந்தல் நிகழ்வு நவம்பர் 12. 2022 அன்று Scarborough Village Recreation Centre மண்டபத்தில் இடம்பெற்றது. தாய்வீடு, காலம் ஆகிய இதழ்கள் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வினை நான் ஒருங்கிணைத்திருந்தேன். நிகழ்வில் தெளிவத்தை ஜோசப்பின் எழுத்துகள் குறித்து எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் அவர்களும், தெளிவத்தை ஜோசப்புடனான தம் நினைவுகள் குறித்து பி.ஜெ. டிலிப்குமார் மற்றும் செல்வம் அவர்களும் உரையாற்றினார்கள். மலையகத்தின் இன்றைய நிகழ்வு குறித்த உரையினை சுபாஸ் சுந்தரராஜ்... Continue Reading →

தேவமுகுந்தனின் “கண்ணீரினூடே தெரியும் வீதி”: எங்களில் ஒருவனின் கதை

தேவமுகுந்தனின் கண்ணீரினூடே தெரியும் வீதி என்கிற சிறுகதைத்தொகுதி அண்மைக்காலத்தில் ஈழத்தில் இருந்து அல்லது ஈழத்தமிழர்களால் எழுதப்பட்ட சிறுகதைத் தொகுதிகளில் முக்கியமானதொன்றாகும்.  இச்சிறுகதைத் தொகுதியில் 2008 ஏப்ரல் முதல் 2011 யூலைக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட 9 கதைகளும், தேவமுகுந்தன் க.பொ.த உயர்தரப்ப் பரீட்சை எழுதிவிட்டு இருந்த காலப்பகுதிகளில், 1992ல் எழுதிய மரநாய்கள் என்கிற கதையுமாக மொத்தம் 10 கதைகளைக் கொண்டதாக அமைகின்றது. இந்தச் சிறுகதைத் தொகுப்பு வெளியான அதே காலப்பகுதியிலேயே சிறுகதைத் தொகுப்புகளும், நாவல்களும், குறுநாவல்களுமாக பல்வேறு... Continue Reading →

காலம் – 2009: சில எண்ணங்கள்

கனடாவில் நல்ல படைப்பாளிகள் இருக்கின்ற அளவுக்கு இலக்கிய அமைப்புகளோ, இலக்கிய இதழ்களோ வெளிவருவதில்லை என்றிருக்கின்ற பொதுக் கருத்தை அவ்வப்போது வெளிவந்தாலும் “காலம்” தழ் அடிக்கடி தகர்த்து வருவது வழக்கம். இந்த வகையில் ஜூன் – ஆகஸ்ட் 2009 ற்கான 32வது காலம் இதழ் இதுவரை வெளிவந்த காலம் இதழ்களில் என்னளவில் அதிக நிறைவை தந்ததாக இருக்கின்றது. கடந்த காலம் இதழ்களுடன் ஒப்பிடுகையில் அதிகளவு சிறு கதைகளையும், கவிதைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும் அகோரமான யுத்தத்தில் அகப்பட்டிருக்கின்ற ஒரு காலத்தின்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑