மானுடத்தின் குரலாய் ஒலித்த எஸ்போஸ்

அதிகாரத்தைச் சிலுவையிலறைவதா அதிகாரத்திற்கெதிரான நமது இதயங்களைச் சிலுவையில் அறைவதா? என்கிற ஒரு காலத்தினதும் தலைமுறையினதும்  மனசாட்சிகளின் தவிப்பாக இருந்த நிராதரவுக் குரலை எழுதிய எஸ்போஸ் என்றறியப்பட்ட சந்திரபோஸ் சுதாகர் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ம் திகதி தனது ஏழு வயது மகனின் கண்ணெதிரே மிகக் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டு பத்தாண்டுகளுக்குப் பின்னர் எஸ்போஸ் படைப்புகள் மற்றும் எஸ்போஸ் பற்றியும் அவரது படைப்புகள் பற்றியும் என்கிற இந்தத் தொகுப்பு நூல் கருணாகரன், ப, தயாளன், சித்தாந்தன் ஆகியோரைத்... Continue Reading →

“இடாகினி பேய்களும்”…:ஒரு அறிமுகம்

எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் பற்றி சுஜாதா ஒரு முறை குறிப்பிட்டிருந்ததில் இருந்து நெடுநாட்களாக அவரது புத்தகங்களை தேட தொடங்கியிருந்தேன். எனக்கு அமைந்த ஒரு குறை, எனது நண்பர்கள் வட்டத்தில் இலக்கிய ஆர்வம் கொண்டவர்கள் மிக குறைவாக இருப்பது. அதுவும் கனடாவில் இல்லை என்றே சொல்லி விடலாம். அதனால் நான் தேடும் புத்தகங்களோ, திரைப்படங்களோ நேரடியாக எனக்கு கிடைத்தாலே அன்றி, மற்றவர்கள் ஊடாக எனக்கு கிடைப்பது குறைவு. ஒரு கண்காட்சி ஒன்றில் காலம் சிற்றிதழின் ஆசிரியர் செல்வம் அருளானந்தத்தின் அறிமுகம்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑