“எனக்குத் திசைகளைப் பற்றிக் கவலையில்லை; தேடல்களைப் பற்றித்தான் கவலை” – ஆர். பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல்

நான் ஒரு தமிழ் மாணவன்; அதுவே எனது அடையாளம் என்பதைத் தொடர்ந்து சொல்லிவரும் ஆர். பாலகிருஷ்ணன் இந்தியவியல், திராவிடவியல், தொல்லியல் போன்ற துறைகளில் ஆழங்கால்பட்ட அறிவுடைய ஆய்வறிஞரும் ஆவார். தமிழில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்ற இவர், ஐ.ஏ.எஸ். பரீட்சையை முழுமையாகத் தமிழ்மொழி மூலம் எழுதித் தேர்தவான ஒரே நபர் என்ற பெருமையையும் கொண்டவர். இந்திய ஆட்சிப் பணியில் 34 ஆண்டுகள் பணியாற்றி 2018-இல் ஓய்வுபெற்ற பாலகிருஷ்ணன் அவர்கள் ஓய்வின் பின் ஒடிசா மாநில முதல்வரின் தலைமை... Continue Reading →

தாயகக் கனவுகள் நூல் அறிமுகம் – சத்தியதேவன்

தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஜூன் 28 அன்று நடைபெற்ற புத்தக அரங்க விழாவில் எனது "தாயகக் கனவுகள்: நூல் குறித்த அறிமுகத்தை சத்தியதேவன் செய்திருந்தார். இந்நிகழ்வைப் பதிவுசெய்து காணொலியை Red Fox Club பதிவுசெய்துள்ளனர். அந்தக் காணொலியை இங்கே பகிர்கின்றேன். தொடர்ச்சியாக புத்தக அறிமுக விழாக்களை ஒருங்கிணைக்கும் தனுஜனுக்கும், உரையாற்றிய சத்தியனுக்கும், காணொலியப் பதிவுசெய்த Red Fox Clubக்க்கும் நன்றி.https://www.youtube.com/embed/fpjOgyRiHGE?si=ZXf-sSVDBSZ2BqF9&start=2880

Website Powered by WordPress.com.

Up ↑