எழுபதுகளின் இறுதி முதல் எண்பதுகள் வரை ஈழத்தில் வெளிவந்த சிறுகதைத் தொகுப்புகளை வாசிப்பதும் எழுதுவதும் எனக்குத் தனிப்பட திருப்தியளிக்கின்ற, ஆர்வமான ஒரு விடயம். ஈழத்தில் கலை இலக்கியங்களின் வடிவம், உள்ளடக்கம், கருத்தியல், சமூக நோக்கு உள்ளிட்ட விடயங்கள் குறித்த காத்திரமான விமர்சனங்கள் இடம்பெற்ற காலப்பகுதியின் விளைவுகளாக இந்தக் கலை இலக்கியப் படைப்புகளை அவதானிக்கமுடியும். இந்த விவாதங்களினால், விமர்சனத்துறை கூர்மையடைந்ததுடன் படைப்புகளும் செழுமையடைந்தன. இந்தக் காலப்பகுதியில் எழுதியதுடன், இதழாசிரியராகவும் செயற்பட்டு, விவாதங்களில் பங்கேற்றவர் டானியல் அன்ரனி. 1947 முதல்... Continue Reading →
டானியல் அன்ரனி: சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள் பற்றிய எனது உரையின் காணொலி
ஏப்ரல் 20, 2024 அன்று Zoom ஊடாக இலக்கியவெளி ஒருங்கிணைத்திருந்த இணையவெளி கலந்துரையாடல் 37இல் டானியல் அன்ரனி: சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள் நூல் பற்றிய எனது உரையின் காணொலிவடிவம். https://www.youtube.com/embed/C98rbo4cog8?si=CtwbAx240Erir412 நன்றி - இலக்கியவெளி