ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக உருவான ஆரம்ப காலத்தில் அதற்குத் தமிழ்நாட்டில் இருந்து திராவிடக் கட்சிகளும் திராவிட இயக்கங்களும் பெரும் ஆதரவைக் கொடுத்துக்கொண்டிருந்தன. கிட்டத்தட்ட இதே சமகாலத்தில் எமர்ஜென்சி மூலம் தமிழ்நாட்டில் நடந்த ஒடுக்குமுறைகள், ஒன்றிய அரசால் எப்போதும் கலைக்கவும் கட்டுப்படுத்தவும் கூடிய நிலையிலேயே மாநில அரசுகள் கட்சிகளும் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்தி இருந்தது. அதுபோலவே ஆயுதப் போராட்டத்தின் மூலம் புரட்சியை நடத்தி சோசலிச அரசை இந்தியாவில் ஏற்படுத்தலாம் என்ற நோக்குடன் இருந்த நக்ஸல்பாரிகளின் தாக்கத்தினைப் பெற்றிருந்த... Continue Reading →
அரசியல் பேசும் கலைஞன் பிரகாஷ் ராஜ்
சமீப காலங்களில் அரசியலுக்கு வந்த ஒரே நடிகர் பிரகாஷ் ராஜ் தான்; மற்றவர்களெல்லாம் ஆட்சிக்கு வரவே விரும்புகின்றார்கள்” என்கிற ராஜன் குறை கிருஷ்ணனின் முகநூல் பதிவு மிகக் கச்சிதமான ஒரு வெளிப்படுத்தலாக உள்ளது. தமிழ்நாட்டு அரசியலும், திரைப்படக் கவர்ச்சியும் ஈழத்தவர்களை ஈர்ப்பனவாகவும் அவர்களின் முடிவுகளில் தாக்கம் செலுத்தவனவாகவும் இருக்கின்ற சூழலில் பிரகாஷ் ராஜ் போன்றவர்கள், கலைஞர்கள் பேசுகின்ற அரசியல் மிகவும் முக்கியத்துவமானது. கலைஞர்கள் அரசியல் பிரக்ஞை கொண்டிருப்பது இன்னும் முக்கியத்துவமானது. https://www.youtube.com/watch?v=P6LQSmKz2N0&ab_channel=SunNews https://www.youtube.com/watch?v=8HnW1KasT6g&ab_channel=SunNews https://youtu.be/s0m0q74W4BQ?si=zj9r-ughAuyk476t