பெரியண்ணன்கள் கவனம்!

அண்மையில் தனது முகநூல் பக்கத்தில் காலச்சுவடு பத்திரிகையின் ஆசிரியர் கண்ணன் பாமினி எழுத்துருக்களைப் பற்றிச் சில கருத்துகளைக் குறிப்பிட்டிருந்ததைத் தொடர்ந்து முகநூலில் தொடர்ச்சியான விவாதம் ஒன்று இடம்பெற்றது.  அந்தக் குறிப்பினைப் பார்த்தபோது அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை விட கண்ணனின் தொனியே மிகவும் மோசமானதாகவும், மேட்டிமைத்தனத்தைத் காட்டுவதாயும் அமைந்திருந்தது.  அதைத்தொடர்ந்து தனது சிறுகதைகளால் பரவலாக அறியப்பட்ட ரஞ்சகுமார் கண்ணனின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.  அவர் முன்வைத்த  முக்கிய வாதம், //எல்லோருக்கும் உடனே புரியக்கூடிய ஒரேயொரு... Continue Reading →

ரொரன்றோவில் வெளியாகும் ஆங்கில இலக்கிய இதழ் | வேர்களைத்தேடி நாடகம்

ரொரன்றோவில் வெளியாகும் ஆங்கில இலக்கிய இதழ் ரொரன்றோவில் இருந்து வசந்த காலத்துக்கும் கோடை காலத்துக்கும் சேர்த்து ஓர் இதழாகவும், இலையுதிர் காலத்துக்கும் பனிக்காலத்துக்கும் சேர்த்து ஓர் இதழாகவும் ஆண்டொன்றிற்கு இரண்டு இதழ்களாக சென்ற ஆண்டு முதல் The Humber Literary Review என்கிற இலக்கிய இதழ் ஒன்று வெளிவருகின்றது.  இதன் மூன்றாவது இதழில் The Pharaoh’s Refusal or, The Right To Eat Peas With Knife” என்கிற Alberto Manguel எழுதிய அருமையான கட்டுரை... Continue Reading →

ஆவணப்படுத்தலும் தமிழர்களும்

எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்று நகர்கின்ற தமிழ்த் திரைப்படப்பாடல்களின் காலகட்டங்களில் நான் இளையராஜாவின் பாடல்களை அதிகம் விரும்புபவன் என்றாலும் எம்.எஸ். விஸ்வநாதனின் பல பாடல்கள் எனது நிரந்தர விருப்பப் பாடல்களாக இருக்கின்றன.  ராஜநடை திரைப்படத்தில் வருகின்ற கஸ்தூரி மான்குட்டியாம் மற்றும் தென்றலுக்குத் தாய்வீடு பொதிகை அல்லவா என்கிற பாடல்களின் மெட்டுகள் எனக்கு எப்போதும் பிடித்தவை.  அவரது எத்தனையோ பிரபலமான மெட்டுகளையும் பாடல்களும் இருக்க எனக்கு இந்த இரண்டு பாடல்கள் பிடித்தமையானவையாக இருப்பதற்கு எனக்கேயான தனிப்பட்ட காரணங்கள்... Continue Reading →

புதிய பயணி இதழ் | திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை | கூலித்தமிழ் வெளியீடு

புதிய பயணி இதழ் பயண அனுபவங்கள் பற்றி இலக்கியங்கள் ஊடாகப் பதிவுசெய்வது தமிழுக்குப் புதிய மரபன்று.  சங்க இலக்கியங்களின் ஆற்றுப்படை, வழிநடைச் சிந்து ஆகிய பாடல்வகைகளை பயண இலக்கியங்களாக வகைப்படுத்தலாம் என்று அறிய முடிகின்றது.  பயண இலக்கியம் சார்ந்து இவ்வாறான ஒரு நீண்ட மரபு இருப்பினும் தமிழில் பயண இலக்கியத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர் ஏ.கே. செட்டியார்.  இவரே, பயண இலக்கியம் என்கிற பிரக்ஞையுடன் தொகுப்பு நூல் ஒன்றினை வெளியிட்டவர்.  1850 முதல் 1925 வரை வெளியான பலரது... Continue Reading →

தெட்சிணாமூர்த்தி ஆவணப்பட வெளியீடு | மேற்கிந்தியத் தீவுகளில் பொங்கல் | ஈழத்துத் தமிழ் இதழ்கள்

மேற்கிந்தியத் தீவுகளில் பொங்கல் கொண்டாட்டம் மேற்கிந்தியத் தீவுகளில் கொண்டாடப்படும் பொங்கல் விழா என்று சாம் விஜய் எழுதிய கட்டுரை ஒன்று தை மாத “காக்கைச் சிறகினிலே” இதழில் வெளியாகி இருக்கின்றது.   உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க யுனெஸ்‌கோ ஒருங்கிணைப்பாளரும் பிரான்சில் உள்ள “நான் இந்தியாவை காதலிக்கின்றேன்” அமைப்பின் தலைவருமான சாம் விஜய் அவர்கள் “தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளின் அடிச்சுவட்டில் அவர் சென்ற இடங்களுக்கெல்லாம் சென்று, அவர் ஆராய்ச்சியின் தொடர்ச்சியை தன்னார்வத்துடன் செய்துகொண்டிருப்பவர்” என்று காக்கைச் சிறகினிலே இதழ்... Continue Reading →

குறும்படப் பயிற்சிப் பட்டறை : சர்க்கரைப் பந்தலிற் தேன்மழை

ஈழத்தமிழர்கள் தம்மை ஒரு தேசிய இனமாக உணர்வது போல தமக்கான தனியான பண்பாட்டு வெளிப்பாடுகளையும் பேணவேண்டும் என்பது எனது உறுதியான நிலைப்பாடு.  துரதிஸ்டவசமாக, பெரும்பாலும் நாம் எம்மை தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளங்களுடன் கலந்தே அடையாளப்படுத்தி வருகின்றோம்.  இது எமக்கான தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களை அழித்துவிடுவதுடன், தேச உருவாக்கத்திலும் எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றது.  எளிய உதாரணமாக, புலம்பெயர் நாடுகளில் நடக்கின்ற திருமண விழாக்கள் போன்ற சடங்குகளில் தமிழகத்து, வட இந்திய பாணியினது செல்வாக்குகள் அதிகரித்து வருவதை அவதானிக்கலாம். தவிர, புலம்பெயர்... Continue Reading →

ரொரன்றோ தமிழ்ச் சங்கம் | ரொரன்றோ பொது நூலகம் | வைரமுத்து – குமுதம் கார்ப்பரேட் வியாபாரம்

ரொரன்றோ தமிழ் சங்கம் ரொரன்றோ தமிழ்ச் சங்கம் சார்பில் ஒழுங்கு செய்யப்படும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்களில் இயன்றவரை கலந்துகொள்ளுகின்றேன்.  ஒவ்வொரு மாதமும் இறுதிச் சனிக்கிழமை மாலை என்று ஒரு குறித்த தினத்தில் நிகழ்வுகள் தொடர்ச்சியாக திட்டமிட்டு நடத்தப்படுவது முக்கியமானது.  அதுபோல ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒரு மையப் பொருள் தேர்வு செய்யப்பட்டு, அது பற்றிய ஒரு விரிவான கட்டுரை வாசிப்பு ஒன்றும், பின்னர் அதை ஒட்டிய துணைத் தலைப்புகளிலான கட்டுரை வாசிப்புகளுமாக நிகழ்வு நடைபெற்று வருகின்றது.  இறுதியாக ஐயந்தெளிதல்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑