மனுநீதிச் சோழன் யார்? அல்லது எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா?

Good Governance: Who Is Responsible? என்கிற Upali Cooray எழுதிய கட்டுரை ஒன்று கொழும்பு ரெலிலிகிராப் இணைய இதழில் மார்ச் 11, 2015 அன்று வெளியாகியிருந்தது.  அதில் கிமு 205 முதல் கிமு 161 வரை அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்ட எலார (எல்லாளன் என்று தமிழில் நாம் அழைக்கும் மன்னன் மகாவம்சத்தில் எலார என்றே குறிப்பிடப்படுகின்றான்) என்ற சோழ மன்னன் தன் அரண்மனையில் அவனிடம் நீதி வேண்டிவருவோர் ஒலிக்கவிடவேண்டிய மணி ஒன்றினை பேணியதாகவும், மன்னனின் மகன்... Continue Reading →

மகாபாரதம் சொல்லும் அரசியல் என்ன? 2

  நான் மகாபாரதம் சொல்லும் அரசியல் என்ன? என்கிற என் முன்னைய குறிப்பில் வலியுறுத்தியது, இங்கே குறிப்பிடப்படும் அறம் என்பது, “ஆள்வோர்க்கான அறம்” என்பதை வலியுறுத்தவே.  அவ் அறம், எல்லாருக்கும் பொதுவானதாகவோ அல்லது எல்லாருக்கும் அறமாகவோ இருப்பதில்லை.  புராணக்கதைகள், தொன்மங்கள் என்பவற்றைப் பற்றி ஆராயும்போது அன்றைய காலப்பகுதியுடன் வைத்தே பேசவேண்டும்.  அன்றைய வழமைகளை ஆராயவேண்டும்.  அவற்றுடன் பொருத்திப் பார்க்கவேண்டும்.  அவையெல்லாம் புராணங்களை நியாயப்படுத்துவதற்காக அல்ல.  அதே நேரத்தில் புராணங்கள், அடிப்படைவாதம் ஒன்றினையோ அல்லது மதவெறியையோ தூண்டவோ அல்லது... Continue Reading →

அத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் – பாகம் 2

  அத்தினாபுரத்துப் பெண்களும், பாரதம் பேசும் கதைகளும் என்று தேவகாந்தனின் கதாகாலத்தை முன்வைத்து சென்ற வாரம் எழுதிய பதிவிலே என்னை அறியாமலே பெருந்தவறொன்றை செய்துவிட்டேன். கதாகாலம் என்பதற்குப் பதிலாக அசிரத்தையால் மூன்று இடங்களில் கதாவிலாசம் என்று இடம்பெற்றுவிட்டது. வாசித்தவர்கள் கூட இதுபற்றி தெரிவிக்கவில்லை. கடைசியில் தேவகாந்தனே இதை சுட்டிக்காட்டும்படி ஆகிவிட்டது. அக்கறை இன்மையால் இடம்பெற்ற மிகப்பெரும் தவறு இது. இது போன்ற தவறுகள் இனியும் இடம்பெறக்கூடாது என்று உறுதியும், எழுத்தாளர் தேவகாந்தனிடம் மன்னிப்பும் கேட்டபடி இந்த பகுதிக்குள்... Continue Reading →

அத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்

அரசர்களும் ராஜ்யங்களும் நிறைந்த அரச கதைகள் கேட்பதென்பது எல்லாருக்கும் சிறு வயதில் பிடித்தமானதொன்றே. எனக்கும் என் பத்தாவது வயதில் ஏற்பட்டிருந்த இந்த மோகத்துக்கு அம்புலிமாமாவும் அதில் வெளியாகி வந்த அரச கதைகளும் பெருந்துணை செய்தன. அதே நேரம் எமக்கும் பாடமாக இருந்த வரலாறும் அதனை சுவாரஸ்யமாக கற்றுத்தந்த ஆசிரியர்கள் சண்முகராஜாவும், கோபியும் வரலாற்றுப் புதினங்களை வாசிப்பதில் பெரும் ஆவலை தூண்டியிருந்தார்கள். இதன் தொடர்ச்சியாக அப்போது ஏதோ வெறி பிடித்ததுபோல பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், வேங்கையின் மைந்தன்,... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑