“வ.ந. கிரிதரனின் கட்டுரைகள்” நூலின் வெளியீட்டில் நான் வாசித்த கட்டுரைக்கான எதிர்வினையாகச் சில கருத்துகளை வ.ந. கிரிதரன் பகிர்ந்துள்ளார். இவை பற்றிய தெளிவுபடுத்தல்ளைச் செய்யும் பொருட்டு இந்தப் பதிவை எழுதுகின்றேன். “வ.ந. கிரிதரனின் கட்டுரைகள்” நூலை முன்வைத்துச் சில குறிப்புகள் என்கிற இந்தக் கட்டுரையில் பின்வருமாறு நான் குறிப்பிட்டிருப்பேன்: “பாரதி ஒரு மார்க்சியவாதியா?” என்கிற 1983 இல் எழுதப்பட்ட கட்டுரையும் “பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு” என்கிற கட்டுரையும் பாரதியை மார்க்சிக் கோட்பாடுகளின் பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்ளமுனைகின்றன. ... Continue Reading →