ஆ. இரா. வேங்கடாசலபதிக்கு 2024 சாகித்திய அகடமி  விருதுகிடைத்தமை குறித்த விமர்சனங்கள் அல்லது புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தல்

ஆ. இரா. வேங்கடாசலபதி  எழுதி காலச்சுவடு பதிப்பகம் ஊடாக பெப்ரவரி 2022 இல் வெளிவந்த “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908” என்கிற நூலுக்கு இந்த ஆண்டுக்குரிய (2024) சாகித்திய அகாதமி விருது கிடைத்திருப்பதன் தொடர்ச்சியாக  சில உரையாடல்கள் தொடங்கியிருக்கின்றன.  இந்த விமர்சனங்களில், ஏற்கனவே மக்கள் வெளியீடாக 1987 இல் வெளிவந்த நூலுக்கு இப்பொழுது 2024இல் விருது கிடைத்திருக்கின்றது என்கின்ற ஒரு கருத்து முன் வைக்கப்பட்டிருக்கின்றது.  இந்தக் கருத்தை முன்வைத்தவர்களில் ஒருவரான  ரியாஸ் குரானா அவர்கள் டிசம்பர் 22... Continue Reading →

கண்கள் இரண்டினில் ஒன்றை…

பெண்களுக்கான வோட்டுரிமையை 1931 முதலே வழங்கிய நாடென்ற பெயர் இலங்கைக்கு இருக்கின்றது; அரசியலில் பங்களிக்கும் உரிமையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமையும் பெண்களுக்கு சமத்துவமானதென்கிற UN Convention on Eradication of all forms of Discriminations Against Women என்கிற உடன்படிக்கையில் கையொப்பமிட்ட நாடுகளில் ஒன்றென்ற வகையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவப்படுத்தலையும், பங்கேற்பையும் உறுதிப்படுத்தும் கடப்பாடும், அவர்கள் பங்களிக்க முன்வரும்போது எதிர்கொள்ளுகின்ற தடைகளை உடைப்பதற்கான கடப்பாடும் முக்கியமானது. ஆயினும் இலங்கைத் தேர்தல் திணைக்களத்தின் தரவுகளின்படி தற்போது இலங்கையில் மக்கள்... Continue Reading →

ஈழத்தில் பரவும் இந்திய ஆதிக்கம்

அவருக்கு கிட்டத்தட்ட 70 வயது இருக்கும். நான் வேலை செய்யும் அதே நிறுவனத்தில் இன்னொரு பிரிவில் வேலை செய்பவர்.  அவ்வப்பொழுது காணும்போதெல்லாம் நலம் விசாரிப்புகளுடனும், காலநிலை குறித்து முறைப்பாடுகளுடனும், அண்மைக்காலமாக கொரனா குறித்த ஏதாவது ஒரு சில வார்த்தைகளுடனும் கடந்துபோவார்.  இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரைக் கண்டபோது அவர் உற்சாகமான மனநிலையுடனும் மலர்ந்த முகத்துடனும் இருக்கின்றார் என்பதை கொரனாக் காலத்துக்காக அணிந்திருக்கின்ற முகவுறையூடாகவும் கண்டுகொண்டேன்.  தம்பி, எங்களுக்கு ஒரு விடிவு வந்திட்டுதுபோல இருக்கு என்றார்; என்ன கொரனாவுக்கு... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑