குறிப்பு: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் அழைப்பில் ஆறு திருமுருகன் அவர்கள் கனடா வருகைதர இருப்பது குறித்த செய்தியொன்று வெளியாகி இருந்தது. இது குறித்து சங்கத்தின் செயலாளராகப் பதவி வகித்த எனது நிலைப்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்குடன் சங்கத்து நான் அனுப்பிய பதவி விலகல் கடிதத்தைப் பொதுவெளியில் பகிர்கின்றேன். இக்கடிதத்தை சங்கத்தின் நிர்வாக சபைக்கு அனுப்பியதுடன் சங்கத்தின் அனைத்து அங்கத்தவர்களுக்கும் இதனை அனுப்பிவைக்கும்படியும் கேட்டிருந்தேன். எனது பதவி விலகலை ஏற்றுக்கொண்ட சங்கத்தினர் அதனை அங்கத்தவருடன் பகிரும்படியான... Continue Reading →
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே!
நான் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிப் பழைய மாணவர்களில் ஒருவன். இலங்கையில் நடைமுறையில் உள்ள கல்விமுறையில் பாடசாலை அனுமதிகள் கிடைக்கும் விதம் பற்றியும் அது இலங்கையில் இருக்கக் கூடிய அனைத்துப் பாடசாலைகளின் செல்நெறியிலும் ஏற்படுத்தி இருக்கக்கூடிய தாக்கம் குறித்தும், சில பாடசாலைகள் மாத்திரம் வசதிகளும் சலுகைகளும் குவிக்கப்பட்டனவாய் அமைந்திருப்பது குறித்தும் எனக்கு விமர்சனங்கள் உண்டு. குறிப்பாக சிறு கிராமங்களில் இருக்கின்ற பாடசாலைகள் கிட்டத்தட்ட கவனிப்பாரற்று மாணவர்கள் வரத்தற்று கைவிடப்படும் நிலைமையே காணப்படுகின்றது. இந்த அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும் நிகழும்... Continue Reading →