ஈழநிலத்தார் அழைப்பாடல்

நான் இணைந்து செயற்பட்ட சங்கமொன்றின் வருடாந்த நிகழ்வுகளில் கடவுள் வாழ்த்தும் வரவேற்பு நடனமும் தொடர்ச்சியாக நடக்கின்ற நிகழ்வுகளாக இருந்தன. மதச்சார்பின்மையையும் மரபுரிமையையும் கருத்திற்கொண்டு இவற்றுக்குப் பதிலாக மதச்சார்பின்மையையும், சமூகநீதி அரசியலையும் விஞ்ஞான ரீதியிலான பார்வையையும் கொண்டதான நிகழ்வொன்றைச் செய்து நிகழ்வை ஆரம்பிக்கவேண்டும் என்று நாம் முடிவெடுத்திருந்தோம். அதன் விளைவாக “ஈழநிலத்தார் அழைப்பாடல்” என்று ஒரு நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது. அதன் ஒவ்வொருவரியையும் மிகவும் அவதானமாக, சமூக முன்னேற்றத்துக்கும் அறிவியல் பார்வைக்கும் உரியதாக இருக்கவேண்டும் என்ற நோக்கம் எமக்கிருந்தது.... Continue Reading →

17வது அரங்காடல் ஒரு பார்வை

ரொரன்றோவில் வெகுஜனக் கலாசாரத்தின் மத்தியில் சீரிய நாடகங்களை நோக்கி பார்வையாளர்களை இழுக்கும் நோக்குடன் நாடகம் மீது அக்கறை கொண்ட நண்பர்கள் பலர் இணைந்து 1996 இல் உருவாக்கிய அமைப்பே மனவெளி கலையாற்றுக் குழு ஆகும்.  பொதுவாக மனவெளி கலையாற்றுக் குழுவினர் வருடாந்தம் “அரங்காடல்” என்ற பெயரில் நாடகவிழாக்களை ரொரன்றோவில் நடத்துவது உண்டு.  அந்த வகையில் அதன் 17வது அரங்காடல் ஏப்ரல் 26ம் திகதி “ஃப்ளேடோ மார்க்கம் தியேட்டர்” இல் நடத்துவதாக திட்டமிட்டிருந்தனர். மனவெளி கலையாற்றுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑