டானியல் அன்ரனி: சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள் நூலை முன்வைத்து

எழுபதுகளின் இறுதி முதல் எண்பதுகள் வரை ஈழத்தில் வெளிவந்த சிறுகதைத் தொகுப்புகளை வாசிப்பதும் எழுதுவதும் எனக்குத் தனிப்பட திருப்தியளிக்கின்ற, ஆர்வமான ஒரு விடயம்.  ஈழத்தில் கலை இலக்கியங்களின் வடிவம், உள்ளடக்கம், கருத்தியல், சமூக நோக்கு உள்ளிட்ட விடயங்கள் குறித்த காத்திரமான விமர்சனங்கள் இடம்பெற்ற காலப்பகுதியின் விளைவுகளாக இந்தக் கலை இலக்கியப் படைப்புகளை அவதானிக்கமுடியும்.  இந்த விவாதங்களினால், விமர்சனத்துறை கூர்மையடைந்ததுடன் படைப்புகளும் செழுமையடைந்தன.    இந்தக் காலப்பகுதியில் எழுதியதுடன், இதழாசிரியராகவும் செயற்பட்டு, விவாதங்களில் பங்கேற்றவர் டானியல் அன்ரனி. 1947 முதல்... Continue Reading →

எனது பார்வையில் கொலை நிலம் – புத்தக அறிமுக விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை

உரையாடல் என்பது எனக்கு எப்போதும் பிடித்தமான ஒன்றாகவே இருந்திருக்கின்றது.  வெவ்வேறு கருத்துகளை, பார்வைகளை, அரசியலைக் கொண்டோர் மேற்கொள்ளும் உரையாடல்களை ஆர்வத்துடன் தேடி வாசித்து வந்திருக்கின்றேன்.  இவ்வாறான உடையாடல்கள் மூலம் தெளிவும், நாம் கட்டமைத்து வைத்திருக்கின்ற கருத்துகளை, அரசியலை மீள்பார்வை, மீள் பரிசீலனை செய்வதற்கான வாய்ப்பும் கிடைக்கின்றன.  அண்மையில் பிளேட்டோவின் குடியரசை வாசிக்கத் தொடங்கியபோது உரையாடல் என்பது எத்தனை வீச்சான வடிவம் என்பதையும் அறிய முடிந்தது.  வெறும் வாதத்துக்காக என்றில்லாமல் ஆழமாக தத்தம் நிலைகளை முன்வைத்துப் பேசுகின்ற விவாதங்களும்... Continue Reading →

ஷோபா சக்தி மீதான முகப்புத்தக விவாதங்கள் பற்றி சில பகிர்தல்கள்

ஷோபா சக்தியின் புனைவுகளும் அதில் அவர் செய்யும் எள்ளல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று தொடர்ந்து குறிப்பிட்டே வந்துள்ளேன்.  ஆனால் அண்மைக்காலமாக ஷோபா சக்தி மீது செய்யப்படும் விமர்சனங்களை முன்வைத்து அவரது அனேகம் எழுத்துக்களை மீளப்படித்தபோதுதான் அவர் மீதும் எனக்கொரு அவநம்பிக்கை பிறந்தது.  இதற்கு Dse கேட்டிருந்த நான்காவது கேள்விக்கான (http://djthamilan.blogspot.com/2011/02/blog-post_15.html) பதிலை அவர் கடந்து சென்ற விதம் ஒரு நல்ல உதாரணம். அது மட்டுமல்ல, ஹரிகரசர்மா தன் பெயரின் பின்னொட்டாக வந்திருந்த சர்மா என்ற சாதிய... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑