“ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னைஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறைமேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்” என்று தொடங்குகின்ற பாரதி எழுதிய பாடல், நாட்டுப் பாட்டு என்ற பெயரில் 1919 இல் வெளியான அவரது கவிதை / பாடல் தொகுதியில் இடம்பெற்றிருந்தது. இந்தப் பாடலில் பாரதி, புத்தம் புதிய கலைகள் – பஞ்சபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்மெத்த வளருது மேற்கே – அந்தமேன்மைக் கலைகள் தமிழினில் இல்லைசொல்லவும் கூடுவ தில்லை –... Continue Reading →
யாழ்ப்பாணப் பெண்களின் கல்விப் பாரம்பரியம்: 18 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை
ஆய்வுக் கட்டுரை குறித்த அறிமுகம் பல்வேறு துறைகளில் ஆழங்காற்பட்ட ஆளுமைகொண்டவராக குறமகள் விளங்கியிருந்தாலும் கூட அவரது மிக முக்கியமான பணி “யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி – ஓர் ஆய்வு” என்கிற அவரது ஆய்வுநூலே. தனது டிப்ளோமா படிப்பிற்காக எழுதிய “பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இலங்கையிற் பெண்கல்வி” என்கிற கட்டுரை பெற்ற வரவேற்பும் மதிப்பீடும், பெண்ணியம் தொடர்பாக அவருக்கு இயல்பாக இருந்த அக்கறையுடன் இணைந்து இந்த நூலை எழுதுவதற்காக முதலாவது விதையாக அமைந்தது என்று குறமகள் தனது முன்னுரையில் பதிவுசெய்கின்றார். ... Continue Reading →
“எனக்குத் திசைகளைப் பற்றிக் கவலையில்லை; தேடல்களைப் பற்றித்தான் கவலை” – ஆர். பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல்
நான் ஒரு தமிழ் மாணவன்; அதுவே எனது அடையாளம் என்பதைத் தொடர்ந்து சொல்லிவரும் ஆர். பாலகிருஷ்ணன் இந்தியவியல், திராவிடவியல், தொல்லியல் போன்ற துறைகளில் ஆழங்கால்பட்ட அறிவுடைய ஆய்வறிஞரும் ஆவார். தமிழில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்ற இவர், ஐ.ஏ.எஸ். பரீட்சையை முழுமையாகத் தமிழ்மொழி மூலம் எழுதித் தேர்தவான ஒரே நபர் என்ற பெருமையையும் கொண்டவர். இந்திய ஆட்சிப் பணியில் 34 ஆண்டுகள் பணியாற்றி 2018-இல் ஓய்வுபெற்ற பாலகிருஷ்ணன் அவர்கள் ஓய்வின் பின் ஒடிசா மாநில முதல்வரின் தலைமை... Continue Reading →
தோழர் வைகறை ரவி
கனடாவில் இருந்து வெளிவந்த முக்கியமான பத்திரிகைகளில் ஒன்றான வைகறையின் ஆசிரியரும் மிக நீண்டகாலமாகவே சமூக, அரசியல் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தவரும், நண்பருமான ரவி என்கிற ரவிச்சந்திரநேசன் பொன்னுத்துரை ஜனவரி 25, 2025 அன்று இயற்கையெய்தி இருக்கின்றார். தனது சிறுவயது முதலே சமூக நலனில் அக்கறையும் அரசியல் உணர்வும் கொண்டு வளர்ந்த ரவி, எண்பதுகளில் ஈழத்தமிழரின் தேசிய இன விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருக்கொள்ளத் தொடங்கியபோது தானும் விடுதலை இயக்க அரசியலில் இணைந்துகொண்டார். தேசிய இன... Continue Reading →
“விடுதலை இயக்கத்தைக் கட்டியெழுப்புவது என்பது இராணுவக் குழுக்களை உருவாக்குவதல்ல…” எஸ்.கே. விக்னேஸ்வரனுடனான நேர்காணல்
யாழ்ப்பாணம் அம்பனைப் பிறப்பிடமாகக் கொண்ட எஸ்.கே. விக்னேஸ்வரன் அரசியல், கலை இலக்கியச் செயற்பாடுகள், இதழியல் போன்ற பல்வேறு துறைகளில் ஆழங்காற்பட்டவர். சிறுவயதிலிருந்தே வாசிப்பில் ஆர்வம் காட்டிய எஸ்.கே. விக்னேஸ்வரன், வாசிப்பினூடாக இடதுசாரிக் கருத்தியல் நோக்கி நகர்கின்றார். இலங்கையில் இடதுசாரிக்கட்சிகள் செல்வாக்குடன் இருந்த எழுபதுகளில் மாணவராக அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கிய இவர், தேசிய இனப்பிரச்சனை பிரதான பிரச்சனையாக உருவெடுத்த காலப்பகுதியில் தேசிய இன விடுதலைப் போராட்டத்திலும் நேரடியாக ஈடுபட்டவர். ”ஆயுதப்போராட்டம் தேசிய விடுதலைப் போராட்டத்தை வரலாறாக்கிவிடத்... Continue Reading →
தாயகக் கனவுகள் நூல் வெளியீட்டு நிகழ்வில் அன்பு ஆற்றிய உரை
தாயகக் கனவுகள் நூல் வெளியீட்டு நிகழ்வு சனிக்கிழமை, ஒக்ரோபர் 08, 2022 அன்று கனடாவின் ஸ்கார்பரோ நகரில் இடம் பெற்றது. நிகழ்வில் அன்பு அவர்கள் நிகழ்த்திய உரை. https://www.youtube.com/embed/byvsp_xDgMs நன்றி - வடலி யூட்யூப் தளம்
தாயகக் கனவுகள் நூல்வெளியீடு – தீபன் சிவபாலனின் தொகுப்பும் உரையும்
“தாயகக் கனவுகள்: பிரதிகளை முன்வைத்து ஓர் உரையாடல்” என்கிற தலைப்பில் வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்நூலின் வெளியீட்டு நிகழ்வு சனிக்கிழமை, ஒக்ரோபர் 08, 2022 அன்று கனடாவின் ஸ்கார்பரோ நகரில் இடம் பெற்றது. நிகழ்வில் தீபன் சிவபாலன் ஆற்றிய உரை. https://www.youtube.com/embed/UQc-VZlR5IA நன்றி - வடலியின் யூட்யூப் தளம்
நூல்தேட்டப் பதிவு
நூல்தேட்டப் பதிவு 894.8(64)சமகால இலக்கிய ஆய்வுகள், கட்டுரைகள் தாயகக் கனவுகள்: பிரதிகளை முன்வைத்து ஓர் உரையாடல். அருண்மொழிவர்மன் (இயற்பெயர்: சுதர்சன்ஸ்ரீநிவாசன்).கனடா: வடலி வெளியீடு, இல. 35, Long Meadow Road, Brampton, Ontario L6P 2B1;,1வது பதிப்பு, தை 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).xix, 122 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21.5x14 சமீ.,ISBN : 978-1-7779375-1-5. ஈழப்போராட்டம், அது குறித்த நூல்கள், அவற்றின் வாசிப்பு அனுபவங்கள் ஆகிய பரப்புக்களில்அருண்மொழிவர்மன் எழுதிய கட்டுரைகளின் தொகுதி... Continue Reading →
வசந்தம் இதழ் குறித்து…
ஈழத்தவர்கள் மீதான இந்திய ஆதிக்கம் பற்றிய உரையாடல்கள் மிக நீண்டகாலமாகவே தொடர்ந்துவருகின்றன. அரசியல் தளத்திலும் பண்பாட்டுத் தளத்திலும் பிரக்ஞைபூர்வமாக இந்த உரையாடல்களை முன்னெடுக்கவேண்டிய தேவைகள் முன்னெப்போதையும் விட அதிகரித்திருக்கின்ற சமகாலச் சூழலில் ஜீவநதி இதழ் தொடர்ச்சியாக ஈழத்தின் கலை இலக்கியச் செயற்பாடுகள் குறித்த பதிவுகளையும் சிறப்பிதழ்களையும் கொண்டுவருவது முக்கியமானதாகும். அதிலும் ஈழத்தின் பதிப்பு முயற்சிகளும் நூல் வெளியீடுகளும் இந்தியாவின் அரசியல் நடைமுறைகள் மற்றும் பண்பாட்டு ஆதிக்கத்தால் தொடர்ந்தும் நலிவடைந்தே செல்கின்ற காலப்பகுதியில் இதழ்கள் குறித்த சிறப்பிதழ் ஒன்றினை... Continue Reading →
தெளிவத்தை ஜோசப்பின் நினைவேந்தல் நிகழ்வு
ஈழத்தின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான தெளிவத்தை ஜோசப்பின் நினைவேந்தல் நிகழ்வு நவம்பர் 12. 2022 அன்று Scarborough Village Recreation Centre மண்டபத்தில் இடம்பெற்றது. தாய்வீடு, காலம் ஆகிய இதழ்கள் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வினை நான் ஒருங்கிணைத்திருந்தேன். நிகழ்வில் தெளிவத்தை ஜோசப்பின் எழுத்துகள் குறித்து எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் அவர்களும், தெளிவத்தை ஜோசப்புடனான தம் நினைவுகள் குறித்து பி.ஜெ. டிலிப்குமார் மற்றும் செல்வம் அவர்களும் உரையாற்றினார்கள். மலையகத்தின் இன்றைய நிகழ்வு குறித்த உரையினை சுபாஸ் சுந்தரராஜ்... Continue Reading →