நான் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிப் பழைய மாணவர்களில் ஒருவன். இலங்கையில் நடைமுறையில் உள்ள கல்விமுறையில் பாடசாலை அனுமதிகள் கிடைக்கும் விதம் பற்றியும் அது இலங்கையில் இருக்கக் கூடிய அனைத்துப் பாடசாலைகளின் செல்நெறியிலும் ஏற்படுத்தி இருக்கக்கூடிய தாக்கம் குறித்தும், சில பாடசாலைகள் மாத்திரம் வசதிகளும் சலுகைகளும் குவிக்கப்பட்டனவாய் அமைந்திருப்பது குறித்தும் எனக்கு விமர்சனங்கள் உண்டு. குறிப்பாக சிறு கிராமங்களில் இருக்கின்ற பாடசாலைகள் கிட்டத்தட்ட கவனிப்பாரற்று மாணவர்கள் வரத்தற்று கைவிடப்படும் நிலைமையே காணப்படுகின்றது. இந்த அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும் நிகழும்... Continue Reading →
நிறம் தீட்டுவோம் ஆவணப்படம்
விபீஷன் மகேந்திரராஜாவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கின்ற “நிறம் தீட்டுவோம்” என்கிற ஆவணப்படத்தினை அண்மையில் பார்க்க முடிந்தது. வவுனியாவில் வசிக்கின்ற விபீஷன் இருபதுகளின் ஆரம்ப வயதில் இருப்பவர் என்று அறியமுடிகின்றது. சமூக வலைத்தளங்களை மையமாகக் கொண்டு தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற அல்லது முன்னெடுப்புகளை ஆரம்பிக்கின்ற தலைமுறையைச் சேர்ந்த அவரது சமூக அக்கறையையும், பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துவதாக இந்த ஆவணப்படம் அமைகின்றது. நிறம் தீட்டுவோம் என்கிற ஆவணப்படம் பற்றிய அறிமுகக் குறிப்பினை “பார்வைப்புலனை முற்றிலும் இழந்த மாணவன் கலைச்செல்வனின் வாழ்க்கைப்பயணத்தினூடாக மாற்றுவலு மாணவர்களின்... Continue Reading →
புஷ்பராணியின் “அகாலம்”
ஈழத்தில் மயிலிட்டி என்கிற சிறிய கிராமத்தில் 1950 ல் பிறந்த புஷ்பராணி ஈழவிடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தபோது அதில் பங்கெடுத்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர். தமிழ் இளைஞர் பேரவையிலும், தமிழீழ விடுதலை இயக்கத்திலும் அதன் ஆரம்ப காலம் தொட்டு பங்கெடுத்தவர். ஈழப்போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியபோது சிறை சென்ற முதல் பெண்போராளியும் ஆவார். அந்த வகையில் புஷ்பராணி எழுதிய அகாலம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக ஓரு பெண் சைக்கிள் ஓடுவதே அதிசயமாகப் பார்க்கப்பட்ட ஒரு காலத்தில்,... Continue Reading →
நூலகம் – உன்னதம் – விழாக்கள் : சில எண்ணங்கள்
யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு 28 ஆண்டுகளாகிவிட்டன. சில வருடங்களின் முன்னர் எரியும் நினைவுகள் என்ற பெயரில், இப்போது பார்த்தாலும் நெஞ்சை உலுக்கும் அந்த நினைவுகளை சோமிதரன் ஆவணப்படுத்தியிருந்தார். இந்த நூலக எரிப்புப் பற்றி அதிகம் பேசும் பலர் கூட இந்த ஆவணப் படத்தைப் பார்க்கவில்லை என்று பலருடன் பேசியபோது தெரிந்து கொண்டேன். 'யாழ்ப்பாணம் எரிகிறது', '24 மணி நேரம்' ஆகிய இரண்டு நூல்களிலும் யாழ்ப்பாண எரிப்புப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. சுஜாதா “ஒரு லட்சம் புத்தகங்கள்” என்ற பெயரில்... Continue Reading →