ஈழப்போராட்டம் குறித்த பிரச்சனைகள்

ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு அரசியல் பிரச்சனைகள், ஈழப்போராட்டத்தின் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனைகள், ஈழப்போராட்டத்தின் மூலோபாய தந்திரோபாய பிரச்சனைகள் என்கிற மூன்று நூல்களைக் கொண்ட நூற்தொகுதி ரகுமான் ஜான் அவர்கள் தொகுத்து, வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது.  இந்த நூல்களுக்குள் நுழையமுன்னர் நூலின் தொகுப்பாசிரியர் ரகுமான் ஜான் குறித்து இந்நூலிலேயே தரப்பட்டுள்ள அறிமுகத்தைப் பார்ப்போம், ரகுமான் ஜான் தமிழீழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவர், ஈழப்போராட்டத்தை அதன் குறுகிய எல்லைகளைக் கடந்து ஒடுக்கப்பட்ட மக்கள் தரப்பில் அரசியல் தலையீடு செய்யவேண்டும் என்பதில் தீவிரமாக... Continue Reading →

வசந்தம் இதழ் குறித்து…

ஈழத்தவர்கள் மீதான இந்திய ஆதிக்கம் பற்றிய உரையாடல்கள் மிக நீண்டகாலமாகவே தொடர்ந்துவருகின்றன.  அரசியல் தளத்திலும் பண்பாட்டுத் தளத்திலும் பிரக்ஞைபூர்வமாக இந்த உரையாடல்களை முன்னெடுக்கவேண்டிய தேவைகள் முன்னெப்போதையும் விட அதிகரித்திருக்கின்ற சமகாலச் சூழலில் ஜீவநதி இதழ் தொடர்ச்சியாக ஈழத்தின் கலை இலக்கியச் செயற்பாடுகள் குறித்த பதிவுகளையும் சிறப்பிதழ்களையும் கொண்டுவருவது முக்கியமானதாகும்.  அதிலும் ஈழத்தின் பதிப்பு முயற்சிகளும் நூல் வெளியீடுகளும் இந்தியாவின் அரசியல் நடைமுறைகள் மற்றும் பண்பாட்டு ஆதிக்கத்தால் தொடர்ந்தும் நலிவடைந்தே செல்கின்ற காலப்பகுதியில் இதழ்கள் குறித்த சிறப்பிதழ் ஒன்றினை... Continue Reading →

ஈழக்கூத்தன் தாசீசியஸ்

இந்த நோக்கமும் அந்த அக்கறையின்பாற்பட்ட தொலைநோக்குமே தாசீசியஸை வழிநடத்தியிருக்கவேண்டும்.  பிபிசியில் பணியாற்றியதில் இருந்து பின்னர் ஐபிசியை உருவாக்குவதற்கான தேவை எதுவாக இருந்தது என்பது குறித்தும், பின்னர் ஐபிசியை உருவாக்கியது குறித்தும் கானா பிரபாவிற்கு வழங்கிய நேர்காணலில் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.  அதுபோலவே தமிழ்க் குடில் என்கிற அவரது செயற்திட்டம் மிகவும் முன்னோடியானதென்பதை அதன் நோக்கங்களை வைத்துப் பார்க்கின்றபோது அறியமுடிகின்றது.  அதற்கப்பால் நாராய் நாராய் என்கிற நாடகப் பயணம் இன்னொரு முக்கியமான செயற்திட்டம்.  இந்த விடயங்களையெல்லாம் வெறும் தரவுகளாக இல்லாமல் எந்தச் சூழலில் எந்தப் பின்னணியில் எந்த நோக்கத்துக்காக இவையெல்லாம் உருவாகிய என்பதை இந்த நூலினூடாகவே அறியமுடிகின்றது.

ஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து…

பொருள்சார்ந்த, விடயம் சார்ந்த அறிவுச்சேகரங்களைத் தொகுக்கின்ற முயற்சிகள் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்தே நடந்திருப்பதாக பிரித்தானியக் கலைக்களஞ்சியம் குறிப்பிடுகின்றது.  ஆயினும் என்சைக்ளோபீடியா என்பதற்கு வழங்கப்படுகின்ற இன்றைய அர்த்தத்துக்கு நெருக்கமானதாக, தொகுப்பு நூல் என்ற அர்த்தத்தில் என்சைக்ளோபீடியா என்ற சொல்லைப் பாவித்தவர் Paul Scalich என்கிற ஜெர்மனியராவார்.  இவர் எழுதி 1559 இல் வெளியான Encyclopaedia, or Knowledge of the World of Disciplines என்ற நூலே என்சைக்ளோபீடியாவுக்கான சமகால விளக்கத்துக்கு ஏற்ற அர்த்தத்திலும் உள்ளடக்கத்திலும் வெளியான முதல் நூலாகும்.   ஆயினும் என்சைக்ளோபீடியாவுக்கான உள்ளடக்கத்துடன் இதற்கு முன்னர் வெளியாகிய நூல்கள் அகராதி (Dictionary) என்ற பெயருடனேயே வெளியாகியிருக்கின்றன. 

DIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்!

ஏற்றங்களும் இறக்கங்களும் சேர்க்கைகளும் பிரிவுகளும் இழப்புக்களும் நிறைந்ததுதான் வாழ்க்கை என்பது மீள மீள நினைவூட்டப்பட்டாலும் இந்த இரவில் இருந்து திரும்பிப்பார்க்கின்றபோது இறந்துபோன நண்பர்களின் பிரிவுகளும் அவர்களுடன் சேர்ந்த களித்த, கழித்த தருணங்களின் தடங்களுமே நினைவெல்லாம் தளும்பிக்கிடக்கின்றன.  வாழ்வில் தவிர்க்கவே முடியாத யதார்த்தம் மரணம் என்றபோதும் நெஞ்சார்ந்து கூடிப் பழகினவர்களின் மரணந்தரும் வலிகூட மரணத்திற்கொப்பானது என்பதே அனுபவமாகின்றது.  கருணா அண்ணையுடன் நான் நெருக்கமாகப் பழகியது மிகக் குறுகிய காலமே என்றாலும் அந்தத்தாக்கங்கள் இருந்தே தீரும். கருணா அண்ணையை நான்... Continue Reading →

கலைஞர் என்பது ஒரு சொல்லல்ல…

கலைஞர் எழுதிய வசனங்களில் எனக்கு மிகவும் பிடித்த வசனம் ராஜாராணி திரைப்படத்தில் அவர் எழுதி இடம்பெற்ற ”காவேரி தந்த தமிழகத்துப் புதுமணலில் கரையமைத்து சேர சோழ பாண்டி மன்னர் கோபுரத்துக் கலசத்தில் யார் கொடிதான் பறப்பதென்று இன்று போல் போரிட்டுக்கொண்டிருந்த காலமது...” என்று தொடங்குகின்ற வசனமாகும். கெடுக சிந்தை, கடிது இவள் துணிவே என்று தொடங்குகின்ற புறநானூற்றுப் பாடலுக்கு உரையாக சங்கத்தமிழ் என்கிற கலைஞரின் நூலில் இந்த வசனகவிதை இடம்பெற்றிருந்தது. நான் படித்து இன்புற்ற கலைஞரின் எழுத்து... Continue Reading →

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே!

நான் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிப் பழைய மாணவர்களில் ஒருவன்.   இலங்கையில் நடைமுறையில் உள்ள கல்விமுறையில் பாடசாலை அனுமதிகள் கிடைக்கும் விதம் பற்றியும் அது இலங்கையில் இருக்கக் கூடிய அனைத்துப் பாடசாலைகளின் செல்நெறியிலும் ஏற்படுத்தி இருக்கக்கூடிய தாக்கம் குறித்தும், சில பாடசாலைகள் மாத்திரம் வசதிகளும் சலுகைகளும் குவிக்கப்பட்டனவாய் அமைந்திருப்பது குறித்தும் எனக்கு விமர்சனங்கள் உண்டு.  குறிப்பாக சிறு கிராமங்களில் இருக்கின்ற பாடசாலைகள் கிட்டத்தட்ட கவனிப்பாரற்று மாணவர்கள் வரத்தற்று கைவிடப்படும் நிலைமையே காணப்படுகின்றது.  இந்த அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும் நிகழும்... Continue Reading →

நிறம் தீட்டுவோம் ஆவணப்படம்

விபீஷன் மகேந்திரராஜாவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கின்ற “நிறம் தீட்டுவோம்” என்கிற ஆவணப்படத்தினை அண்மையில் பார்க்க முடிந்தது.  வவுனியாவில் வசிக்கின்ற விபீஷன் இருபதுகளின் ஆரம்ப வயதில் இருப்பவர் என்று அறியமுடிகின்றது.  சமூக வலைத்தளங்களை மையமாகக் கொண்டு தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற அல்லது முன்னெடுப்புகளை ஆரம்பிக்கின்ற தலைமுறையைச் சேர்ந்த அவரது சமூக அக்கறையையும், பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துவதாக இந்த ஆவணப்படம் அமைகின்றது. நிறம் தீட்டுவோம் என்கிற ஆவணப்படம் பற்றிய அறிமுகக் குறிப்பினை  “பார்வைப்புலனை முற்றிலும் இழந்த மாணவன் கலைச்செல்வனின் வாழ்க்கைப்பயணத்தினூடாக மாற்றுவலு மாணவர்களின்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑