அரசர்களும் ராஜ்யங்களும் நிறைந்த அரச கதைகள் கேட்பதென்பது எல்லாருக்கும் சிறு வயதில் பிடித்தமானதொன்றே. எனக்கும் என் பத்தாவது வயதில் ஏற்பட்டிருந்த இந்த மோகத்துக்கு அம்புலிமாமாவும் அதில் வெளியாகி வந்த அரசகதைகளும் தீனியிட்டு வளர்த்துவந்தன. அதே நேரம் எமக்குப் பாடமாக இருந்த வரலாறும் அதனை சுவாரஸ்யமாக கற்றுத்தந்த ஆசிரியர்களான சண்முகராஜாவும், கோபியும் கூட வரலாற்றுப் புதினங்களை வாசிப்பதில் பெரும் ஆவலை தூண்டியிருந்தார்கள். இதன் தொடர்ச்சியாக அப்போது ஏதோ வெறி பிடித்ததுபோல பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், வேங்கையின் மைந்தன்,... Continue Reading →
எனது நினைவில் செங்கை ஆழியான்
அண்மையில் காலமான செங்கை ஆழியான் எனது பதின்மங்களின் ஆரம்பங்களில் எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர்களுள் ஒருவராக இருந்தவர். செங்கை ஆழியானின் மரணத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட சில அஞ்சலிக் கட்டுரைகளும், அவுஸ்திரேலியாவில் இருக்கின்ற ஜேகே யின் வானொலிப் பகிர்வொன்றும் அவர் பற்றிய நினைவுகளை மீட்டிக்கொண்டேயிருந்தன. அவர் பற்றி எழுத நினைத்த சிறு நினைவுக்குறிப்பொன்றும் கூட நேரநெருக்கடி காரணமாக தவறவிடப்பட்டிருந்தது. தொன்னூறுகளின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டை போர் முழுமையாகச் சூழ்ந்திருந்த காலப்பகுதியில் தென்னிந்திய சஞ்சிகைகளும், நூல்களும் கூட பெரும்பாலும் மாறிமாறி... Continue Reading →
அகரமுதல்வனின் “சாகாள்” : சில குறிப்புகள்
அகரமுதல்வனின் சாகாள் கதை மே 2009 இல் ஈழப்போராட்டம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட பின்னரான பெண்போராளிகளின் நிலையையும் அவர்கள் இராணுவத்தின் பிடியில் இருந்தபோது என்ன நடந்தது என்பதையும் சித்திகரிப்பதாக அமைகின்றது. அந்தக் கதையினை அவர் சிவகாமி என்கிற விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமான பெண்தலைவர் ஒருவரை மையமாகக்கொண்டு கதை எழுதுகின்றார். இந்தக்கதை பேசுவது முழுக்க சிவகாமி பற்றியதே என்பதுடன் இது சிவகாமியைப் பற்றி எழுதுவதற்காகவே எழுதப்பட்ட கதை என்பதே உண்மை. இந்த சிவகாமி என்பவர் அண்மையில் காலமான தமிழினி அவர்களே என்பதை... Continue Reading →
ஒழுக்க மதிப்பீடுகள் பெண்ணுக்கு மாத்திரம் இருக்கமுடியாது – குறமகள்
ஈழத்தின் ஆரம்பகால பெண் எழுத்தாளர்களில் ஒருவரும், சமூகச் செயற்பாட்டாளரும், நாடகம், பட்டிமன்றம், மேடைப்பேச்சு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டவருமான குறமகள் என்று பரவலாக அறியப்பட்ட வள்ளிநாயகி இராமலிங்கம் ஈழத்தின் வடக்கிலே இருக்கின்ற காங்கேசன்துறையில் ஜனவரி 9 ஆம் திகதி 1933 ஆம் ஆண்டில் பிறந்தவர். தனது பாடசாலைக்கல்வியைக் கல்வியை நடேஸ்வராக் கல்லூரியிலும், இளவாலை கொன்வென்டிலும் கற்ற இவர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் பயிற்றப்பட்ட ஆசிரியராவார். இந்தியாவில் இருக்கின்ற உத்கல் என்கிற பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டதாரியாக... Continue Reading →
லண்டன்காரர்: அறிமுக உரை
ஈழத்து இலக்கியம், ஈழத்தவர் அடையாளம், அவர்கள் வாழ்வியல் பற்றிய கேள்விகளும் உரையாடல்களும் பெருமளவில் அண்மைக்காலமாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அண்மைக்காலமாக ஈழத்தவர்களது நாவல்களாகவும், குறுநாவல்களாகவும் பல்வேறு வெளியீடுகளையும் வாசிக்கக் கிடைத்திருக்கின்றது. இவற்றின் பொதுத்தன்மையை எடுத்துக்கொண்டால் இவற்றில் பெரும்பாலனவை ஈழப்போரின் பிந்தைய காலகட்டங்களில் வெளியானவை, ஓரளவு சுய அனுபவக் குறிப்புகளை உள்வாங்கியவை. அது தவறானதும் அல்ல. கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியான அரசியல் குழப்பங்களும், இடது சாரிய புரட்சிகர நடவடிக்கைகளிற்கான முயற்சிகளும், சாதி ஒழிப்பு உள்ளிட்ட சமூகப் போராட்டங்களும் 30... Continue Reading →
மொழிபெயர்ப்பு : சவால்களும் சில பரிந்துரைகளும்
அண்மையில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது விளம்பரம் ஒன்றில் “துமித்தலையில் நீர் வடிகின்றதா?” என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறி, அவர்கள் எதனைக் குறிப்பிடுகின்றார்கள் என்பதை என்னால் அனுமானிக்கமுடிகின்றதா என்று கேட்டிருந்தார். சற்று யோசித்தேன். எதையும் ஊகிக்க முடியாமல் என்ன சொல்கின்றார்கள் என்று கேட்டேன். Shower Head என்பதற்கான தமிழ்ச் சொல்லாகவே அவர்கள் “துமித்தலை” என்பதைப் பயன்படுத்துகின்றார்கள் என்று குறிப்பிட்டார். Shower Head என்பதற்கான சரியான சொல் தமிழில் இல்லை என்ற அளவில் அதற்கான சொல்லாக்கம் செய்யப்படவேண்டியதன் அவசியம் முக்கியமானதே. அதேநேரம்... Continue Reading →
ஜெயகாந்தன் காலத்திற்குப் பின்னர் ஜெயகாந்தன் பற்றிய பார்வை
ஜெயகாந்தன் தமிழ் எழுத்தாளர்களில் பிற எவரும் பெற்றிராத அளவுக்கு பிரபல்யத்தையும், பெரும் ரசிகர் கூட்டத்தினையும் பெற்றிருந்தவர். படைப்பிலக்கியம் சார்ந்து மட்டுமல்லாமல் அரசியல், திரைப்படம் என்று பல்வேறு துறைகளிலும் தீவிரமாக ஈடுபட்டவர். வரலாற்றில் ஜெயகாந்தன் என்கிற பொருளில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இன்றைய நிகழ்வில் பேசப்படுகின்ற விடயங்களூடாகவும் ஜெயகாந்தனின் இந்தப் பன்முக ஆளுமையை நாம் புரிந்துகொள்ளலாம். நான் மிகச் சிறுவனாக இருந்த காலத்திலேயே ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தியிருந்தார். அதன்பின்னர் அவரது மீள் பிரவேசம் நிகழ்ந்தாலும் அது தொடர்ச்சியான இயக்கமாக இருக்கவில்லை. எனவே,... Continue Reading →
ஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ
கௌரவன் பாரதக்கதை என்பது அனேகம் எல்லாருக்கும் தெரிந்த, ஆனால் மிக மிகப் பெரும்பாலோனோர் முழுமையாக வாசித்திராத தொன்மங்களில் ஒன்றாகும். எனக்கு ஏழு / எட்டு வயதிருக்கும்போது வாசித்த கைக்கடக்கமான மகாபாரதப் பிரதி முதலே மகாபாரதத்தின் மீதான் என் ஈர்ப்பு அதிகரித்தே சென்றது. ஆயினும் வாசித்த குறிப்பிடத்தக்க அளவிலான முதலாவது மகாபாரதம் என்றால் ராஜாஜி எழுதிய “வியாசர் விருந்து” தான் நினைவுக்கு வருகின்றது. இராமாயணத்துடனான எனது அறிமுகமும் ராஜாஜி எழுதிய சக்கரவர்த்தித் திருமகன் ஊடாகவே நிகழ்ந்தது இங்கு குறிப்பிட்டுச்... Continue Reading →
சட்டநாதனின் “மாற்றம்” சிறுகதைத் தொகுப்பு…
எழுபதுகளின் தொடக்கங்களில் எழுதத் தொடங்கிய படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்புகளை அண்மைக்காலமாக வாசித்துவருகின்றபோது இந்தக் காலகட்டத்தில் உள்ளடக்கம் சார்ந்தும், சொல்லப்படும் விதம் சார்ந்தும் முக்கியமானதொரு மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது என்று உறுதியாகக் கூறமுடிகின்றது. அறுபதுகளில் ஈழத்தில் இடம்பெற்ற இலக்கியம் பற்றிய விவாதங்களையும் அந்நேரத்தில் முன்வைக்கப்பட்ட முற்போக்கு இலக்கியம் பற்றிய வரையறைகளையும் தொடர்ந்து கலையமைதிக்கு முக்கியத்துவம் கொடுத்து, உள்ளடக்கத்திலும் பல்வேறு புதிய கருக்களைப் படைப்புகளூடாகப் பேசிய காலப்பகுதியாக இது அமைகின்றது. குறிப்பாக தனிமனிதர்களுக்கிடையிலான உறவுகள், அதனால் எழுகின்ற சிக்கல்கள், சமத்துவத்தையும், விடுதலையையும்... Continue Reading →
ஐ. சாந்தனின் “காலங்கள்”
எனது சிறிய வயதில் நான் நேரடியாகக் கண்டறிந்துகொண்ட முதல் எழுத்தாளர் என்று ஐ. சாந்தனையே சொல்ல முடியும். அவரது கிராமத்தையே நானும் சேர்ந்தவன் என்பது அதற்கான வாய்ப்பினையும் எனக்கு நல்கியது எனலாம். அப்போது நான் படித்துக்கொண்டிருந்த சிறுவர் பாடசாலையின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் 1987ல் நடைபெற்றன. அந்நிகழ்வுகளின் போதோ அல்லது அதனைத் தொடர்ந்து வந்த ஒருசில ஆண்டுகளிலோ இடம்பெற்ற ஏதோ ஒரு பாடசாலை விழாவில் சாந்தன் அவர்களின் இயக்கத்தில் “சுப்பன்ணாவும் சோமன்ணாவும்” என்றொரு நாடகம் அரங்கேற்றப்பட்டது. அந்த... Continue Reading →