தமிழர் உணவுகள் என்கிற பக்தவத்சல பாரதி தொகுத்து காலச்சுவடு பதிப்பாக வெளியான புத்தகத்தைப் பார்த்ததும் உடனே படிப்பதில் ஆர்வம் உண்டானது. என்னுடன் வேலைத் தளத்தில் பணிபுரிகின்ற ஈரானைச் சேர்ந்த வர்லாறு, வாசிப்பில் அதிகம் அக்கறை கொண்ட நண்பர் ஒருவருடன் மத்தியான சாப்பாட்டு நேரத்திலும் பேசுகையில் எமக்கும் பாரசீகர்களுக்கும் உணவுப் பழக்கங்களில் இருக்கின்ற அனேக ஒற்றுமைகளை அவதானிக்க முடிந்தது. ஒரு உதாரணத்துக்கு நாம் குத்தரிசிச் சோற்றில் கஞ்சியை வடித்துக் குடிப்பது வழக்கம் (தமிழகத்தில் இவ்வழக்கம் இருக்கின்றதோ தெரியவில்லை). அனேகம்... Continue Reading →
பெயரிடாத நட்சத்திரங்கள் தொகுப்பை முன்வைத்து ஈழப் போராட்டத்தில் பெண் புலிகள்
“பெயரிடாத நட்சத்திரங்கள்: ஈழப் பெண்போராளிகளின் கவிதைகள்” அறிமுகவிழாவில் வாசித்த கட்டுரை பெயரிடாத நட்சத்திரங்கள் என்கிற பெயரில் ஈழத்துப் பெண் போராளிகளின் கவிதைகள் தொகுக்கப்பட்டு வெளிவந்திருக்கின்றன என்று அறிந்தபோது, அந்தப் புத்தகம் என் கைக்கு கிட்டும் முன்னர் அந்தப் புத்தகம் எவ்வாறு எதிர்கொள்ளப்படும் என்று ஒருமுறை யோசித்துப் பார்த்தேன். புலி எதிர்ப்பு எதிர் புலி ஆதரவு என்கிற தீர்மாணிக்கப்பட்ட பார்வைகளோடே பிரதிகள் அணுகப்படும் இன்றைய சூழலில் இப்புத்தகம் முழுக்க முழுக்க புலிகளின் பெண் போராளிகளின் கவிதைகளுடன் வெளிவந்திருப்பது எவ்வாறு... Continue Reading →
எஸ்பொவுடனான சந்திப்பும் இயல் விருதுக் குழப்பங்களும்
எஸ்பொ நனவிடை தோய்தல்இயல்விருது பெறுவதற்காக கனடா வந்திருந்த எஸ்பொவுடனான விருது வழங்கும் விழாவிற்கு அடுத்த நாள் நடைபெற்ற காலம் செல்வம் ஒழுங்கு செய்திருந்த “எஸ்பொ நனவிடை தோய்தல்” என்கிற சந்திப்பொன்றிற்குச் சென்றிருந்தேன். நிறைய எழுத்தாளர்கள் அவர்கள் எழுத்தினூடாக அவர் எப்படி இருப்பார் என்று தோன்றுகின்ற விம்பம் போல இருப்பதில்லை. ஆனால் எஸ்போ, அவர் எழுத்துகளூடாகத் தெரிவது போன்ற கலகம் செய்யும் இயல்புடையவராகவே தெரிந்தார். சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு, தமிழ் தேசியம், மகாவம்சம் என்று நிறைய விடயங்களைத்... Continue Reading →
நான் ஒரு படைப்பாளியல்ல; பாணன் – எஸ். பொ
ஈழத்துப் படைப்பாளிகளும் முக்கியமானவர்களுல் ஒருவரும் எனக்குப் பிடித்தவருமான எஸ் பொவிற்கு இவ்வாண்டு இயல் விருது வழங்கப்படவிருப்பதாக அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். இயல்விருது பற்றிய விமர்சனங்கள் நிறைய இருந்தபோதும் இவ்வாண்டுக்குரிய இயல்விருது எஸ்பொவிற்கு வழங்கப்பட்டிருப்பதன் காரணமாக எஸ்பொவை காணும் வாய்ப்புக் கிட்டியிருப்பது குறித்தும் மகிழ்ச்சியே. ஈழத்துப் படைப்பாளிகளில் எஸ்பொவையும், மு. தளையசிங்கத்தையும் முழுவதும் தொடர்ச்சியாகவும், விரிவாகவும் வாசிக்கவேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் நிறையத் தடவைகள் காலந்தாழ்த்தியே வந்துள்ளேன். அண்மையில் எஸ்பொ கனடா வருகின்றார் என்று அறிந்ததும் அதற்கிடையில் அவரை முழுமையாக... Continue Reading →
ஷோபா சக்தி மீதான முகப்புத்தக விவாதங்கள் பற்றி சில பகிர்தல்கள்
ஷோபா சக்தியின் புனைவுகளும் அதில் அவர் செய்யும் எள்ளல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று தொடர்ந்து குறிப்பிட்டே வந்துள்ளேன். ஆனால் அண்மைக்காலமாக ஷோபா சக்தி மீது செய்யப்படும் விமர்சனங்களை முன்வைத்து அவரது அனேகம் எழுத்துக்களை மீளப்படித்தபோதுதான் அவர் மீதும் எனக்கொரு அவநம்பிக்கை பிறந்தது. இதற்கு Dse கேட்டிருந்த நான்காவது கேள்விக்கான (http://djthamilan.blogspot.com/2011/02/blog-post_15.html) பதிலை அவர் கடந்து சென்ற விதம் ஒரு நல்ல உதாரணம். அது மட்டுமல்ல, ஹரிகரசர்மா தன் பெயரின் பின்னொட்டாக வந்திருந்த சர்மா என்ற சாதிய... Continue Reading →
தேரிகாதை: பௌத்த பிக்குணிகளின் பாடல்கள்
தேரிக்கள் என்கிற பௌத்தப் பிக்குணிகள் பற்றி நாம் பெரிய அளவில் அறியவில்லை என்றே நினைக்கின்றேன். அதிலும் முக்கியமாக ஈழத்தைப் பொருத்தவரை அங்கே தொடர்ந்து நடைபெறும் இன ரீதியிலான போரும், அதனடிப்படையில் பொதுப் புத்தியில் கட்டமைக்கப்பட்ட “பௌத்த சிங்கள” விம்பம் காரணமாக தமிழர்கள் அதிலும் 80களில் பிறந்த தலைமுறையினர் பெருமளவில் பௌத்தம், மற்றும் சிங்களம் என்கிற விடயங்களையே ஒவ்வாமையுடனேயே பார்த்துவந்தனர். அதிலும் குறிப்பாக தமிழர்கள் கணிசமான அளவில் பௌத்த மதத்தவர்களாகவும் இருந்திருக்கின்றனர் என்று சொல்வதைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத... Continue Reading →
விதிக்கப்பட்ட வாழ்க்கையும் வீழ்ந்து சென்ற நம்பிக்கைகளும் – தேவகாந்தனின் விதி நாவல் பற்றிய சில அனுபவங்கள்
விதி என்றால் விதிக்கப்பட்டது என்று எமக்கும் பத்தாம் ஆண்டில் படிப்பிக்கப்பட்டிருக்கின்றது. அதே பத்தாம் ஆண்டில் தான் 'நாடென்ப நாடா வளத்த, நாடல்ல நாட வளம் தரும் நாடு' என்பதும் படிப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேவகாந்தன் தனது விதி நாவலில், நாடியும் வளம் தந்து விடாத நாடொன்றில் பிறந்து வளர்ந்தவர்களின் கதையைச் சொல்லுவதன் மூலம் புதிய விதி பற்றிச் சொல்லுகின்றார். "ஒரு காலத்தில கடவுளால படைக்கப்பட்டது விதி என்ற ஒரு கருத்து இருந்தது. பிறகு ஒவ்வொருவரும் தாங்கள் தாங்கள் செய்கிற... Continue Reading →
கவிதைகள் கருத்தரங்கு – சில கருத்துக்கள்
-1-வாழும் தமிழ் என்ற பெயரில் காலம் சஞ்சிகை தொடர்ச்சியாக நடத்தும் நிகழ்வுகளின் வரிசையில் இன்று நடைபெற்ற கவிதைகள் பற்றிய கருத்தரங்கத்திலும், புத்தகக் கண்காட்சியிலும் கலந்துகொண்டேன். காலம் சஞ்சிகை மற்றும் காலம் செல்வம் பற்றிய விமர்சனங்கள் காலத்துக்குக் காலம் பலராலும் வைக்கப்பட்டாலும், காலம் புலம் பெயர் சூழலில் காலம் மிக முக்கியமான ஒரு இடத்தை தனக்கென நிலை நாட்டியே இருக்கின்றது. 1990 ஜூலையில் தனது முதலாவது இதழை வெளிட்ட காலம் கடந்த 20 ஆண்டுகளில் 35... Continue Reading →
ஒடுக்கு முறைகள் பற்றி சில வாசிப்புகள்
1 அமைதிக்கான யுத்தம் என்ற பெயரில் ஒரு மிகப்பெரும் அழிவு இலங்கையில் நடந்து முடிந்திருக்கிறது. இதுவரை கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர், காணாமல் போனவர்கள் எத்தனை பேர், கைது செய்யப்பட்டோர் எத்தனை பேர் என்று எந்தக் கணக்குகளும் காண்பிக்கப்படாமல் இலங்கை அரசாங்கம் இந்தியப் படவிழா என்றும், புலி உறுப்பினர்களுக்குத் திருமணம் என்றும் ஈழப் பிரச்சனையில் அக்கறை கொண்டோர் கவனத்தைக் கூட வெற்றிகரமாக சிதறடிக்கத் தொடங்கியிருக்கின்றது. அழித்தொழிப்பின் ஒரு பங்குதாரரான இந்திய அரசோ இப்போது இந்தியாவில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பச்சை... Continue Reading →
சாரு நிவேதிதா – பவா செல்லத்துரை – கிருத்திகா
1 சாரு நிவேதிதாவைப் பொறுத்தவரை நித்தியானந்தா விவகாரம் சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொண்டது போலவே ஆகிவிட்டது. நான் என்ன நடிகையுடன் படுத்தேனா, எனது குற்றம் என்ன, நித்தியானந்தாவை நான் முழுவதும் நம்பினேன், அது குற்றமா என்று தொடர்ந்து வருகிறார் சாரு. ஆனால் நித்தியானந்தா விவாகரத்தில் சாரு நித்தியானந்தரின் நேரடியான பிரசாரகராகவே இயங்கினார் என்பதே உண்மை. தனது வாசகர்களை நித்தியானந்தரின் முகாம்களுக்குப் போகுமாறு தொடர்ந்து பிரேரித்தவர் சாரு. இதுவரை எந்த ஒரு இடத்திலும் சாரு இதற்கான... Continue Reading →