பல்வங்கர் பலூ : இந்தியக் கிரிக்கெட்டின் பிதாமகன்

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி நிறைய சூப்பர் ஸ்டார்களால் ஆனது என்று சொல்வார்கள்.  எனக்குக் கிரிக்கெட் அறிமுகமான காலத்தில், இந்தியாவில் இருந்து வருகின்ற தமிழ் இதழ்கள் தந்த அறிமுகத்தால் கவாஸ்கர், கபில்தேவ் என்கிற நாயகர்களின் வழிபாட்டுடன் சேர்ந்தே கிரிக்கெட்டும் அறிமுகமாகி இருந்தது. பின்னர் வெவ்வேறு காலப்பகுதிகளில் சச்சின், கங்கூலி, ஷேவாக், தோணி, கோலி, என்று அந்த ”சூப்பர் ஸ்ரார்” மரபு தொடர்ந்தது.  இந்த நாயக வழிபாடு கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவப்போவதில்லை என்கிற விமர்சனங்களும் நடந்தபடிதான் இருக்கின்றன.  அந்த... Continue Reading →

ஆறுமுகநாவலர்: பதிப்புச் செயற்பாடா? மதச்செயற்பாடா?

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ஒருங்கிணைத்த கருத்தரங்கில் ரா. கமலக்கண்ணன் பேசிய  ஆறுமுக நாவலரின் பதிப்புச் செயற்பாடுகள் என்கின்ற உரையை யூட்யூபில் பார்த்தேன்.  இதில்  ஆறுமுகநாவலர்  சைவத்தை வளர்க்க வேண்டும் என்பதற்காக தமிழினை ஒரு கருவியாக பாவித்தார் என்று கூறி  ஆறுமுகநாவலர் தனது நிலைப்பாட்டில் இருந்து சரியாகத்தான் செயற்பட்டார் என்ற வாதத்தை முன்வைத்துப் பேசி இருக்கின்றார் கமலக்கண்ணன்.  இந்த உரையில் கிறிஸ்தவ மிஷனரிகள் இலங்கையில் மதப்பரப்பினைச் செய்யும் பொழுது  கல்விக்கூடங்களை நிறுவினார்கள், பதிப்புக்கூடங்களை நிறுவி நூல் பதிப்புகளைச்... Continue Reading →

அரசியல் பேசும் கலைஞன் பிரகாஷ் ராஜ்

சமீப காலங்களில் அரசியலுக்கு வந்த ஒரே நடிகர் பிரகாஷ் ராஜ் தான்; மற்றவர்களெல்லாம் ஆட்சிக்கு வரவே விரும்புகின்றார்கள்” என்கிற ராஜன் குறை கிருஷ்ணனின் முகநூல் பதிவு மிகக் கச்சிதமான ஒரு வெளிப்படுத்தலாக உள்ளது.  தமிழ்நாட்டு அரசியலும், திரைப்படக் கவர்ச்சியும் ஈழத்தவர்களை ஈர்ப்பனவாகவும் அவர்களின் முடிவுகளில் தாக்கம் செலுத்தவனவாகவும் இருக்கின்ற சூழலில் பிரகாஷ் ராஜ் போன்றவர்கள், கலைஞர்கள் பேசுகின்ற அரசியல் மிகவும் முக்கியத்துவமானது.  கலைஞர்கள் அரசியல் பிரக்ஞை கொண்டிருப்பது இன்னும் முக்கியத்துவமானது. https://www.youtube.com/watch?v=P6LQSmKz2N0&ab_channel=SunNews https://www.youtube.com/watch?v=8HnW1KasT6g&ab_channel=SunNews https://youtu.be/s0m0q74W4BQ?si=zj9r-ughAuyk476t

கனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள்

குறிப்பு: ரொரன்றோவில் இருக்கின்ற ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயத்திற்கு சிற்பிகளாக அழைத்து வரப்பட்ட நால்வர் CBC க்கு கோயில் தொழிலாளர்களை நடத்தும் விதம் குறித்தும் அங்கு நடக்கின்ற அத்துமீறல்கள் குறித்தும் தெரிவித்த தகவல்களையும் அது தொடர்பான மேலதிக கருத்துகளையும் தொகுத்து பதிவேற்றியிருக்கின்றது.  இவற்றை இக்கோயில் நிர்வாகம் மறுத்திருந்தாலும், அந்தக் குற்றச்சாற்றுகளில் உண்மை இருக்கலாம் என்று கருதமுடிகின்றது.   CBC இல் வெளியான கட்டுரையை இந்த இணைப்பில் காணலாம்.  http://www.cbc.ca/news/canada/toronto/hindu-priest-abuse-allegations-1.4485863 கனடாவில் இருக்கின்ற கோயில்களில் நடக்கின்ற சுரண்டல்கள் குறித்தும் அவை எவ்விதம்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑