இன்றைய கல்வி முறைகள், பாடசாலைகளின் நிலைமைகள், அவை எதிர்கொள்ளும் சவால்கள், மாணவர் - ஆசிரியர் உறவு நிலை என்பன குறித்து நண்பர்களுடன் உரையாடுவதும் அவை பற்றி வாசிப்பதும் எனக்கு விருப்பமான ஒன்று, அத்தகைய உரையாடல்கள் எப்போதும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நான் கல்விகற்ற காலப்பகுதியில் அதிபராக இருந்த அ. பஞ்சலிங்கம் அவர்களைப் பற்றிப் பெருமதிப்புடன் நினைந்து போற்றுவதுடன் நிறைவுறுவது வழக்கம். 1991 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபராக பஞ்சலிங்கம் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்ட காலப்பகுதியானது அரசியல்... Continue Reading →
நமக்கான வரலாற்றை நாமே எழுதுவோம்!
யாழ்ப்பாணத்து நினைவுகள் என்ற பெயரில் கடந்த சில வாரங்களாக நான் எழுதிவந்த சில கட்டுரைகளை, போர் சூழ்ந்த அன்றைய யாழ்ப்பாணத்தில் குறிப்பாக 90க்கும் 96க்கும் இடைப்பட்ட காலப்பகுதிகளில் வாழ்ந்த பதின்மவயதுகளைச் சேர்ந்த ஒருவனின் நினைவுகளின் பதிவுகளாகவே பதிவுசெய்தேன். வெறும் நனவிடைதோய்தலாக மாத்திரமல்லாமல், அன்றைய காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நிலவிய வாழ்வியலின் ஒரு பகுதியை இப்பதிவுகள் பதிவுசெய்திருக்கும் என்பது என் நம்பிக்கை. இதேபோல, இன்னும் பலரும் தம் அனுபவங்களை ஆவணப்படுத்தும்போது அவை மிகப்பெரிய வரலாற்று ஆவணமாக மாறும். உதாரணமாக இக்கட்டுரைகளை... Continue Reading →
ஒவ்வொரு பாடலிலும்… (யாழ்ப்பாணத்து ஒலிப்பதிவுக் கூடங்கள்)
“ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு” என்ற ஓர் அழகானபாடலினை என்னவளே திரைப்படத்திற்காக எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் வைரமுத்து எழுத உன்னிகிருஷ்ணன் பாடியிருந்தார். சற்று நினைத்துப்பார்த்தால் எல்லா நினைவுகளுக்கும், மறக்கமுடியாத நிகழ்வுகளுக்கும் அவற்றுடன் தொடர்புடையதாக ஏதோ ஒரு பாடல் எப்போதும் இசைத்துக்கொண்டே இருக்கின்றது. நாம் கேட்கும் பாடல்களும், வாசிக்கும் புத்தகங்களும் திரைப்படங்களும் எம் வாழ்விற்காக பிண்ணனி இசையை தாமே அமைத்துச் செல்கின்றன. கடந்துபோன நினைவுகளை எப்போதாவது மீட்டிப் பார்க்கும்போது நினவுகளும், பாடல்களும் ஒரு கோர்வையாக, சரம்சரமாக ஒன்றுடன்ஒன்று... Continue Reading →
அது ஒரு அழகிய நிலாக்காலம் (யாழ்ப்பாணத்து ட்யூசன் காலம்)
யாழ்ப்பாணத்துக் கலாசாரம் என்ன கலாசாரம் என்று யாரேனும்கேட்டால், யாழ்ப்பாணத்துக் கலாசாரம் ட்யூஷன்கள் நிறைந்த கலாசாரம் என்று சொல்லும் அளவுக்கு 90களில் முதலாம், இரண்டாம் வகுப்புப்படிக்கும் பிள்ளைகள் முதல் பல்கலைக்கழகங்களுக்கு தேர்வானவர்களுக்கான ஆங்கிலவகுப்புகள் என பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற ட்யூஷன்கள் நிறைந்திருந்தன. கனடாவில எல்லாரும் ரெண்டு, மூன்று என்று வேலை செய்தது போல அந்நாட்களில் ஒரே பாடத்துக்கு ரெண்டு மூன்று ட்யூஷன் போனவர்களும் உண்டு. தென்னிந்திய திரைப்படங்கள் தடைசெய்யப்பட்டிருந்த அந்நாட்களில் மக்களுக்கு “கட்-அவுட்” கலாசாரத்தை அறிமுகம் செய்த பெருமையும்... Continue Reading →
நான் கடந்த நளபாகம்
உங்கள் வாழ்வில் நீங்கள் உண்ட ஆகச்சிறந்த உணவு எது என்று எப்போதாவது யோசித்துப்பார்த்து இருக்கின்றீர்களா? அந்த உணவை ஆக்கிய முகத்தை உங்களால் நினைவுக்குக் கொண்டுவரக்கூடியதாக உள்ளதா? எப்போதாவது அந்த உணவை ஆக்கியவர்களைத் தேடிச்சென்று பாராட்டுத் தெரிவித்தது உண்டா? பொதுவாக எல்லாருக்கும் எப்போதும் வீட்டுச் சாப்பாடோ, அம்மாக்கள் தயாரித்த உணவுகளோ, மனைவியர் கைப்பக்குவமோ, அரிதான சிலருக்கு தந்தையரின், கணவன்மார்களின், நண்பர்களின் கைப்பக்குவமோ அல்லது வேறும் ஏதோ ஒரு உறவு தயாரித்த உணவுகளோ பிரியமானதாக இருக்கும். இன்னும் சிலருக்கு அதைவிடுத்து... Continue Reading →
கையெழுத்துப் பிரதிக் கலாசாரமும், கடிதங்களும்
கையால் எழுதும் கலையானது மெல்ல ஒழிந்துவருகின்றது என்று சில ஆண்டுகளிற்கு முன்னர் வெளியான ரொரொன்றோ ஸ்ரார் நாளிதழில் ஒரு கட்டுரயொன்று வெளியாகி இருந்தது. குறிப்பாக ஆங்கிலத்தில் எழுத்துக்களை தொடுத்தெழுதும் வழக்கமும், அதற்காக பயிற்சியளிப்பதும் கிட்டத்தட்ட இல்லாதே போய்விட்டது. அதுபோல கடிதம் எழுதும் வழக்கமும் மிக மிகக் குறைந்துவிட்டது. நாம் கடைசியாக எப்போது உறவினர் ஒருவருக்கோ அல்லது நண்பருக்கோ கடிதம் ஒன்றை எழுதினோம் என்றோ, கடந்த சில ஆண்டுகளில் எத்தனை கடிதங்கள் எழுதியிருக்கின்றோம் என்றோ நினைத்துப்பார்க்க திகைப்பாக இருக்கின்றது.... Continue Reading →
நானும் நூலகங்களும்
நூலகங்களுடனான என் உறவு எப்போது தொடங்கியது என்று யோசித்துப் பார்க்கின்றேன். மிகச் சிறுவவதில் இருந்தே புத்தகங்களுடனான என் உறவு ஆரம்பித்துவிட்டிருக்கின்றது. இதற்கு காரணம் என் பெரியப்பா அவர்கள். வாசிப்பின் மீது மிகப் பெரும் காதலுடன் இருந்த அவர் தனது உழைப்பின் பெரும்பங்கினை புத்தகங்களாகவே வாங்கிக் குவித்தார். கிட்டத்தட்ட அந்த காலகட்டத்தில் வந்த அனைது இதழ்களையும் வாங்கி வாசிப்பதுடன், தான் வாசித்தபின்னர், அவற்றை எமக்கும் அனுப்பி வைப்பார். இந்த வகையில் அம்புலிமாமா, ரத்னபாலா, கோகுலம், பாலமித்ரா,, பூந்தளிர், கல்கண்டு,... Continue Reading →
பதிவுலக நண்பர்களும் அனுபவங்களும் மற்றும் புல்லட் உடனான என் மீண்ட நட்பு
-1- அது 2006ம் ஆண்டு. கனேடிய புலம்பெயர் வாழ்வு தன் கோர முகத்தைக் காட்டத் தொடங்கியிருந்த காலம் அது வரை கொண்டாடிய உறவுகளும், நட்புக்களும், நம்பிக்கைகளும் தம் கோரமான சுய முகத்தைக் காட்டி என்னைக் கேலிபேசிக் கொண்டிருந்த காலம். புலம்பெயர முன் ஈழத்தில் கிடைக்கப் பெற்று, உலகெல்லாம் சிதறிக் கிடந்த சில நட்புக்களும், ஓரிரு உறவுகளும், எப்போதும் நான் நேசித்த புத்தகங்களும், திரைப்படங்களும் மட்டுமே எனக்கு துணை வந்து கொண்டிருந்தன. எப்போதும் கூட இருந்த இருபதுக்கு மேற்பட்ட... Continue Reading →
போன நூற்றாண்டில் செத்த மூளை | கலாசாரம் காக்கும் தமிழ் வம்சம்
சில நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். யாழ்ப்பாணத்திலும் கனடாவிலுமாக கிட்ட தட்ட 20 ஆண்டுகளை அண்மித்த நட்பு. இப்படியான நெருக்கங்களை உணரும்போது தனிப்பட்ட ரசனை நோக்கி பேச்சினை திருப்புவது என் வழக்கம். மெல்ல, தற்கால தமிழ் சினிமா இசை பற்றி பேச்சு திரும்பியது. ஒரு காலத்தின் ஆதர்சமாக இருந்த இளையராஜா மெல்ல ஒதுங்கிய நிலையில் எமது தற்போதைய ரசனை தேர்வுகள் பற்றி பேசினோம். நண்பர் ரஹ்மானை வெகுவாக சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார். எனக்கும் ரஹ்மானின் இசை பிடித்தம்... Continue Reading →
32 கேள்விகளும் திணறிப்போன நிமிடங்களும்
இந்த தொடர் பதிவிற்கு என்னை அழைத்த தமிழன் – கறுப்பிக்கு நன்றிகள் 01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ? தொடக்க காலத்தில் எனது கிறுக்கல்களுக்கெல்லாம் சூரிய புத்திரன் என்ற பெயரைத்தான் பயன்படுத்திவந்தேன். சூரியன் பூமியின் காதலன் என்பதை எடுத்துக்கொண்டு உருவாக்கிய பெயர் அது; பள்ளிக்காதலொன்றை என்பெயர் சொல்லும்போதெல்லாம் நினைவுகூரவேண்டும் என்பதற்காக அவ்விதம் உருவாக்கினேன். அந்தப் புனைபெயரில் மாத்திரம் அல்லாமல் எனது இயற்பெயரை நான் எழுதும் விதத்திலும் அந்த நினைவுகூரல்... Continue Reading →