அது ஒரு அழகிய நிலாக்காலம் (யாழ்ப்பாணத்து ட்யூசன் காலம்)

யாழ்ப்பாணத்துக் கலாசாரம் என்ன கலாசாரம் என்று யாரேனும்கேட்டால், யாழ்ப்பாணத்துக் கலாசாரம் ட்யூஷன்கள் நிறைந்த கலாசாரம் என்று சொல்லும் அளவுக்கு 90களில் முதலாம், இரண்டாம் வகுப்புப்படிக்கும் பிள்ளைகள் முதல் பல்கலைக்கழகங்களுக்கு தேர்வானவர்களுக்கான ஆங்கிலவகுப்புகள் என பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற ட்யூஷன்கள் நிறைந்திருந்தன. கனடாவில எல்லாரும் ரெண்டு, மூன்று என்று வேலை செய்தது போல அந்நாட்களில் ஒரே பாடத்துக்கு ரெண்டு மூன்று ட்யூஷன் போனவர்களும் உண்டு. தென்னிந்திய திரைப்படங்கள் தடைசெய்யப்பட்டிருந்த அந்நாட்களில் மக்களுக்கு “கட்-அவுட்” கலாசாரத்தை அறிமுகம் செய்த பெருமையும்... Continue Reading →

நான் கடந்த நளபாகம்

உங்கள் வாழ்வில் நீங்கள் உண்ட ஆகச்சிறந்த உணவு எது என்று எப்போதாவது யோசித்துப்பார்த்து இருக்கின்றீர்களா? அந்த உணவை ஆக்கிய முகத்தை உங்களால் நினைவுக்குக் கொண்டுவரக்கூடியதாக உள்ளதா? எப்போதாவது அந்த உணவை ஆக்கியவர்களைத் தேடிச்சென்று பாராட்டுத் தெரிவித்தது உண்டா? பொதுவாக எல்லாருக்கும் எப்போதும் வீட்டுச் சாப்பாடோ, அம்மாக்கள் தயாரித்த உணவுகளோ, மனைவியர் கைப்பக்குவமோ, அரிதான சிலருக்கு தந்தையரின், கணவன்மார்களின், நண்பர்களின் கைப்பக்குவமோ அல்லது வேறும் ஏதோ ஒரு உறவு தயாரித்த உணவுகளோ பிரியமானதாக இருக்கும். இன்னும் சிலருக்கு அதைவிடுத்து... Continue Reading →

185ம் கட்டை, மீசாலை வடக்கு : நினைவுகள்

சோகங்களில் எல்லாம் பெரிய சோகம் சொந்த ஊரை விட்டுப் பிரியும் சோகம் என்று போறாளே பொன்னுத்தாயி பாடலிற்கு முன்னராக பாரதிராஜாவின் குரலில் ஒரு சிறு அறிமுகம் ஒன்று செய்துவைக்கப்படும். நினைவுதெரிந்து எந்த இடப்பெயர்வையும் அனுபவித்திராத அந்தவயதில் இதெல்லாம் ஒரு வலியா என்றுதான் நினைத்திருந்தேன். பின்னாட்களில் அந்த வலியை 1995ம் ஆண்டு ஒக்ரோபர் 30ல் நானும் உணர்ந்தேன். உறவினர் ஒருவரின் மரணச்சடங்கிற்காக என்னையும் ஒரு தம்பியையும் தவிர குடும்பத்தில் மற்ற எல்லாரும் கொழும்பு சென்றிருந்தனர். நாம் அப்பம்மா மற்றும்... Continue Reading →

கையெழுத்துப் பிரதிக் கலாசாரமும், கடிதங்களும்

கையால் எழுதும் கலையானது மெல்ல ஒழிந்துவருகின்றது என்று சில ஆண்டுகளிற்கு முன்னர் வெளியான ரொரொன்றோ ஸ்ரார் நாளிதழில் ஒரு கட்டுரயொன்று வெளியாகி இருந்தது. குறிப்பாக ஆங்கிலத்தில் எழுத்துக்களை தொடுத்தெழுதும் வழக்கமும், அதற்காக பயிற்சியளிப்பதும் கிட்டத்தட்ட இல்லாதே போய்விட்டது. அதுபோல கடிதம் எழுதும் வழக்கமும் மிக மிகக் குறைந்துவிட்டது. நாம் கடைசியாக எப்போது உறவினர் ஒருவருக்கோ அல்லது நண்பருக்கோ கடிதம் ஒன்றை எழுதினோம் என்றோ, கடந்த சில ஆண்டுகளில் எத்தனை கடிதங்கள் எழுதியிருக்கின்றோம் என்றோ நினைத்துப்பார்க்க திகைப்பாக இருக்கின்றது.... Continue Reading →

நானும் நூலகங்களும்

நூலகங்களுடனான என் உறவு எப்போது தொடங்கியது என்று யோசித்துப் பார்க்கின்றேன். மிகச் சிறுவவதில் இருந்தே புத்தகங்களுடனான என் உறவு ஆரம்பித்துவிட்டிருக்கின்றது. இதற்கு காரணம் என் பெரியப்பா அவர்கள். வாசிப்பின் மீது மிகப் பெரும் காதலுடன் இருந்த அவர் தனது உழைப்பின் பெரும்பங்கினை புத்தகங்களாகவே வாங்கிக் குவித்தார். கிட்டத்தட்ட அந்த காலகட்டத்தில் வந்த அனைது இதழ்களையும் வாங்கி வாசிப்பதுடன், தான் வாசித்தபின்னர், அவற்றை எமக்கும் அனுப்பி வைப்பார். இந்த வகையில் அம்புலிமாமா, ரத்னபாலா, கோகுலம், பாலமித்ரா,, பூந்தளிர், கல்கண்டு,... Continue Reading →

கோ மற்றும் பயணம் திரைப்படங்களை முன்வைத்துச் சில கருத்துக்கள்

-1-கோ திரைப்படத்தைச் சற்றுத் தாமதமாக நேற்றுத்தான் பார்த்தேன்.  சினிமா போன்ற வணிக ஊடகங்கள் எப்படி மக்கள் மத்தியில் விஷம் தோய்ந்த கருத்துக்களை விதைக்கின்றார்கள் என்பதற்கு நல்லதோர் உதாரணம் இந்தத் திரைப்படம்.  நக்சல்கள் பற்றி இவ்வளவு மோசமாக அண்மைக்காலத்தில் விபரித்த திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.  படத்தில் தின அஞ்சல் என்கிற பத்திரிகையில் புகைப்படக் கலைஞராக / செய்தியாளனாக வரும் ஜீவா (படத்தில் இவர் கமராக்காரன் என்றே பிறரால் சுட்டிக் காட்டப்பட்டபோதும், சமயங்களில் செய்தி சேகரிக்கும் பணிகளையும்... Continue Reading →

கந்த முருகேசனார், ஜோதிராவ் புலே மற்றும் மணற்கேணியில் வந்த சிவா சின்னப்பொடியின் கட்டுரை

ஏப்ரல் மாத (ஏப்ரல் 2011) மணற்கேணி இதழில் சிவா சின்னப்பொடி எழுதிய எனது பதிவுகள் – வரலாறு வாழ்க்கையும் என்கிற கட்டுரை ஒன்றை வாசித்தேன்.  இந்தக் கட்டுரையில் இலங்கையில் இருக்கின்ற வடமராட்சி, வல்லிபுரக் கோயில் மற்றும் வல்லிபுரம் என்கிற ஊர் பற்றிய வரலாற்று ரீதியான கட்டுரை ஒன்று இடம்பெற்றுள்ளது.  இலங்கையின் வட மாகாணத்தில் முன்னர் பரவலாக பௌத்த நெறி பரவி இருந்தது என்பதையும் பின்னர் ஏற்பட்ட சைவ மறுமலர்ச்சிக்காலத்தில் பௌத்தம் மெல்ல செல்வாக்கிழந்தது என்பதுவும் யாழ்ப்பாணத்துச் சைவ... Continue Reading →

தொலைத்த எம்மை மீட்டல்

சென்ற ஞாயிற்றுக் கிழமை ரொரன்ரோ ஸ்ரார் பத்திரிகையின் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற Drinking in the Basement என்கிற Samantha Craggs எழுதிய சிறுகதை ஒன்றை யதேச்சையாகப் படித்தேன்.  பெரியளவில் சிலாகித்துச் சொல்ல முடியாத கதையென்றாலும் அந்தக் கதையில் வருகின்றது போன்ற வாழ்க்கை முறைகளைப் பல இடங்களிலும் பார்திருக்கின்றேன்.  போதை, பொருப்பின்மை, சிதையும் நம்பிக்கைகல் பற்றிக் கதை பேசுகின்றது.  மதுபானப் பாவனைக்கு நான் ஒரு போதும் எதிர்க்குரல் எழுப்புவதில்லை.  ஆனால் தம்மைத் தாமே வாழ்க்கையை... Continue Reading →

தேரிகாதை: பௌத்த பிக்குணிகளின் பாடல்கள்

தேரிக்கள் என்கிற பௌத்தப் பிக்குணிகள் பற்றி நாம் பெரிய அளவில் அறியவில்லை என்றே நினைக்கின்றேன். அதிலும் முக்கியமாக ஈழத்தைப் பொருத்தவரை அங்கே தொடர்ந்து நடைபெறும் இன ரீதியிலான போரும், அதனடிப்படையில் பொதுப் புத்தியில் கட்டமைக்கப்பட்ட “பௌத்த சிங்கள” விம்பம் காரணமாக தமிழர்கள் அதிலும் 80களில் பிறந்த தலைமுறையினர் பெருமளவில் பௌத்தம், மற்றும் சிங்களம் என்கிற விடயங்களையே ஒவ்வாமையுடனேயே பார்த்துவந்தனர். அதிலும் குறிப்பாக தமிழர்கள் கணிசமான அளவில் பௌத்த மதத்தவர்களாகவும் இருந்திருக்கின்றனர் என்று சொல்வதைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத... Continue Reading →

“ராஜீவ் காந்தி படுகொலை – வெளிவராத மர்மங்கள்” புத்தகம்.

அவிழ்க்கப்படாத மர்மங்களுடன் இருக்கின்ற அரசியற் படுகொலைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.  அந்த வகையில் ராஜீவ் காந்தி படுகொலையும் ஒன்று.  அதுவும் ராஜீவ் காந்தியின் படுகொலை ஒரு இனத்தின் தலையெழுத்தையே மாற்றி எழுதியதில் பெரும்பங்கு வகித்தது என்பதை நாம் கடந்த காலங்களில் கண்கூடாகவே கண்டிருக்கின்றோம். 1991ம் ஆண்டு மே 21ம் திகதி இரவு கொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் கொலை வழக்கின் விசாரணைகள் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டதுடன், 5 ஆண்டுகாலம் விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி மாற்றப்பட்டு புதிதாகப் பொறுப்பேற்ற நீதிபதி சில... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑