கொல்லப்படும் பெண்குழந்தைகளும், காணாமல் போகும் பெண் குழந்தைகளும்

It’s not a child.  It’s a girl baby, and we can't keep it.  Around these parts, you can't get by without a son.  Girl babies don't count."   சீனாவில் பிறந்து தற்போது லண்டனில் வசித்து வரும் ஸு ஸின்ரன் (Xue Xinran) எழுதிய The good woman of China என்கிற புத்தகத்தில், சீனாவில் பெண் குழந்தைகள் பிறக்கின்ற போது பொதுப்புத்தி எவ்வாறு அதை எதிர்கொள்ளுகின்றது என்பதை... Continue Reading →

யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள் என்ற கலையரசனின் கட்டுரை பற்றிய என் கருத்துக்கள்

தற்போது சில நாட்களாகவே யூதர்களையும், தமிழர்களையும் ஒப்பிட்டு - பெரும்பாலான நேரங்களில் மிகவும் மேம்போக்கான ஒப்பிடல்கள் - வெகுவாகப் பேசப்படுகின்றது.  அப்படி ஒப்பிடும்போது, யூதர்களும் உலகெல்லாம் பரவி இருந்தனர் என்றும், அவர்கள் தாம் இருந்த நாடுகளில் எல்லாம் மிகுந்த செல்வத்தோடும், வணிகங்களில் முக்கிய நிலைகளிலும் இருந்தனர் என்ற வாதங்களை முன்வைக்கின்றனர்.  ஆனால் நடைமுறையில், நிச்சயம் தமிழர்களுக்கு, யூதர்களுடன் ஒப்பிடும்போது எத்தனை வேறுபாடுகள் உள்ளனவென்பதை நாம் அவதானிக்கவேண்டும்.  யூதர்கள் அவர்கள் இருந்த பல நாடுகளில் நிர்ணய சக்திகளாக, ஊடகத்துறை... Continue Reading →

தொ. பரமசிவன், பொ. ரகுபதி ஊடாக அறியப்படாத வரலாறு

  இந்த மே மாதம் 5வது தமிழியல் மாநாட்டில் கலந்து கொள்ள கனடா வந்திருந்த கார்மேகம் என்கிற ஜவகர்லால நேரு பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்ட மாணவரை(நாட்டாரியல் பற்றி அதிகம் அக்கறையும், தேர்ச்சியும் கொண்டவர்)    நண்பர்கள் சந்தித்து ஒரு மாலை நேரத்தில் சிறிது உரையாடினோம்.  எழுதப் பட்ட வரலாறுகளை சற்றே மறந்துவிட்டு நாட்டாரியல் பற்றியும், பண்பாட்டு அம்சங்கள், அவற்றின் தொன்மை பற்றியும் வாசிக்கும்போது அல்லது பேசிக் கொண்டு மெல்ல மெல்லப் பின்னோக்கி செல்லும் போது எம் மக்களின்... Continue Reading →

மூன்றாம் பாலினர் பற்றிய சில வாசிப்புகள், உயிர்மை மற்றும் கருத்துக் கந்தசாமிகள்

1அண்மையில் அதிகம் பாதித்த புத்தகம் என்று அடிக்கடி எழுதுவது சலிப்பைத் தந்தாலும், அண்மைக்காலமாக வாசித்த அனேகம் புத்தகங்கள் மனதளவில் பாதிப்பைத் தந்தனவாகவே இருக்கின்றன. "லிவிங் ஸ்மைல்" வித்யாவின் "நான் வித்யா"வை வாசித்தது அரவாணிகள் பற்றி இன்னும் அதிகம் வாசிக்கவேண்டும், அவர்கள் வாழ்க்கையைப் பற்றி, அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது.அந்த வகையில் ரேவதி தொகுத்த "உணர்வும் உருவமும்", மற்றும் மகாராசன் தொகுத்த "அரவாணிகள்; உடலியல் - உளவியல் -வாழ்வியல்"... Continue Reading →

ஒடுக்கு முறைகள் பற்றி சில வாசிப்புகள்

1 அமைதிக்கான யுத்தம் என்ற பெயரில் ஒரு மிகப்பெரும் அழிவு இலங்கையில் நடந்து முடிந்திருக்கிறது. இதுவரை கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர், காணாமல் போனவர்கள் எத்தனை பேர், கைது செய்யப்பட்டோர் எத்தனை பேர் என்று எந்தக் கணக்குகளும் காண்பிக்கப்படாமல் இலங்கை அரசாங்கம் இந்தியப் படவிழா என்றும், புலி உறுப்பினர்களுக்குத் திருமணம் என்றும் ஈழப் பிரச்சனையில் அக்கறை கொண்டோர் கவனத்தைக் கூட வெற்றிகரமாக சிதறடிக்கத் தொடங்கியிருக்கின்றது.  அழித்தொழிப்பின் ஒரு பங்குதாரரான இந்திய அரசோ இப்போது இந்தியாவில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பச்சை... Continue Reading →

பாரதி பாடல்களுக்குத் தடை புத்தகம் பற்றிய சில பகிர்தல்கள்

"சென்னை அரசாங்கம் சுயமாகத் தீர்மானிக்கும் ஆற்றல் முற்றிலும் தனக்குக் கிடையாது என்பதை இந்த விஷயத்தின் மூலம் வெளிக்காட்டி விட்டது. தமிழ் படிக்கும் மக்கள் நேரடியாக இகழ்ந்து அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதை அவர்கள் சகித்துக் கொள்ளமாட்டார்கள். இந்த அரசாங்கம் மக்கள் கருத்துக்களுக்கு ஏதேனும் மதிப்புக் கொடுக்கிறது என்றால், இந்த நடவடிக்கையை அது மறுபரிசீலனை செய்யவேண்டும். தென்னிந்திய மக்களின் தேசிய உணர்வினை இந்த நடவடிக்கையின் மூலம் தடுத்து நிறுத்திவிடமுடியும் என எண்ணினால் அவர்கள் கருத்து முற்றிலும் தவறானது". இந்த வரிகள் 82... Continue Reading →

சாரு நிவேதிதா – பவா செல்லத்துரை – கிருத்திகா

  1 சாரு நிவேதிதாவைப் பொறுத்தவரை நித்தியானந்தா விவகாரம் சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொண்டது போலவே ஆகிவிட்டது. நான் என்ன நடிகையுடன் படுத்தேனா, எனது குற்றம் என்ன, நித்தியானந்தாவை நான் முழுவதும் நம்பினேன், அது குற்றமா என்று தொடர்ந்து வருகிறார் சாரு. ஆனால் நித்தியானந்தா விவாகரத்தில் சாரு நித்தியானந்தரின் நேரடியான பிரசாரகராகவே இயங்கினார் என்பதே உண்மை. தனது வாசகர்களை நித்தியானந்தரின் முகாம்களுக்குப் போகுமாறு தொடர்ந்து பிரேரித்தவர் சாரு. இதுவரை எந்த ஒரு இடத்திலும் சாரு இதற்கான... Continue Reading →

சோளகர் தொட்டி மீட்டுத் தந்த போர்க்கால நினைவுகள்

அண்மையில் வாசித்த நூல்களில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியவை என்று சோளகர் தொட்டியையும், லிவிங் ஸ்மைல் வித்யாவின் 'நான் வித்யா'வையும் குறிப்பிடலாம். வாசிப்பின் மீது அக்கறை கொண்டவர்கள் மாத்திரம் அல்லாமல் தாம் வாழும் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அனைவருமே நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் என்று இவற்றைக் குறிப்ப்டவேண்டும். சோளகர் தொட்டி நாவல் அதன் ஆசிரியர் ச. பாலமுருகன் தான் சந்தித்த மனிதர்கள் பற்றி எழுத, வித்யா, தான் சந்தித்த அனுபவங்கள் பற்றி எழுதுகிறார். வாழ்வின் தரம்... Continue Reading →

பஷீரின் மதில்கள் ஒரு பார்வை

ஒருதலை ராகம் திரைப்படத்தை எல்லோரும் பார்த்திருப்போம். உருகி உருகிக் காதலிக்கும் காதலனை தன் குடும்பத்தில் ஏற்பட்ட ஆண்கள் பற்றிய கசப்பான அனுபவங்களால் (சகோதரிக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்) விலத்திச் செல்லும் பெண், திரைப்படத்தின் இறுதியில் அவனிடம் பிரியப்பட்டு பேசச் செல்கின்றபோது அவன் இறந்து விடுகிறான். 1980ல் வந்த இந்தத் திரைப்படம் இன்றளவும் காதல் தோல்வியைச் சொன்ன காவியமாக அனேகமாக எல்லா இள வயதுக்காரர்களாலும் பேசப்படுகின்றது. பின்னர் நடிகர் முரளி அலுக்காமல் கொள்ளாமல் இதே கதையமைப்பைக் கொண்ட பல ... Continue Reading →

தாயகக் கனவுகள்

சென்ற ஆண்டின் இறுதியில் மிலன் குந்த்ரோவ் எழுதிய Ignorance என்ற நாவலின் தமிழாக்கம் மாயமீட்சி என்ற பெயரில் வெளிவருகின்றது என்கிற அழைப்பிதழ்கள் என் மின் அஞ்சல் முகவரியை மொய்த்தபோது நான் இலங்கை போவதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தேன். வாழும் தமிழ் பதிப்பக வெளியீடாக மணி வேலுப்பிள்ளையின் மொழி பெயர்ப்பில் எழுத்துப் பிழைகள் சற்று அதிகமாகவே தென்பட்டாலும், சிறப்பான அச்சு நேர்த்தியுடன் புத்தகம் வெளியாகி இருந்தது. நாவலின் கருவும், அப்போது நான் இருந்த மன நிலையும் பெரிதளவும் ஒத்துப் போயிருந்ததால்,... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑