தந்தை பெரியாரின் கொள்கைத் தொடர்ச்சியே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என வாதிட முடியுமா?

ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக உருவான ஆரம்ப காலத்தில் அதற்குத் தமிழ்நாட்டில் இருந்து திராவிடக் கட்சிகளும் திராவிட இயக்கங்களும் பெரும் ஆதரவைக் கொடுத்துக்கொண்டிருந்தன.  கிட்டத்தட்ட இதே சமகாலத்தில் எமர்ஜென்சி மூலம் தமிழ்நாட்டில் நடந்த ஒடுக்குமுறைகள், ஒன்றிய அரசால் எப்போதும் கலைக்கவும் கட்டுப்படுத்தவும் கூடிய நிலையிலேயே மாநில அரசுகள் கட்சிகளும் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்தி இருந்தது.  அதுபோலவே ஆயுதப் போராட்டத்தின் மூலம் புரட்சியை நடத்தி சோசலிச அரசை இந்தியாவில் ஏற்படுத்தலாம் என்ற நோக்குடன் இருந்த நக்ஸல்பாரிகளின் தாக்கத்தினைப் பெற்றிருந்த... Continue Reading →

கொம்ரேட் காங்ஸ்டாவின் “Break The Bloody Silence”

கொம்ரேட் காங்ஸ்டாவின் யூட்யூப் பக்கத்தில் “Break The Bloody Silence” என்கிற தற்போதைய பலஸ்தீனப் பிரச்சனை குறித்த தமிழ் ரப் பாடலினையும், அதன் வெளியீட்டுவிழாவில் செல்வா, ராஜு முருகன், யுகபாரதி ஆகியோர் ஆற்றிய உரைகளையும் பார்த்தேன்.  சமூக நீதிக்கான அரசியலுக்கான தணிக்கைகளும், அந்த அரசியல் பேசுவதையும் பேசுவோரையும் மைய ஊடகங்கள் தவிர்த்தும் புறக்கணித்தும் வருகின்ற, வலதுசாரி அரசியலுக்கு எதிரான கருத்துகள் கடுமையாகத் தணிக்கை செய்யப்படுகின்ற சூழலில் இதுபோன்ற சுயாதீன பாடல்களின் வருகை முக்கியமானதும் ஆதரவளிக்கவேண்டியதுமாகும்.  இந்தப் பாடலுக்கான... Continue Reading →

Ontario Science Centre மூடுதல் அறிவிப்பும் செய்தித் தணிக்கையும்

ஒன்ராறியோவின் உட்கட்டுமான அமைச்சர் (infrastructure minister) Kinga Surma, Ontario Science Centre இன் கூரையில் உள்ள ஓடுகள்/கூரை மோசமான நிலையில் இருப்பதாகவும், அதனால், பொதுமக்களின் நலனை முன்னிட்டு அதனை பொதுமக்கள் பாவனையில் இருந்து உடனடியாக மூடப்பட வேண்டும் என்று நிபுணர்களின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி Ontario Science Centre உடனடியாக மூடப்படுவதாக வெள்ளிக்கிழமை, ஜூன் 21, 2024 அன்று அறிவித்தார்.  ஆயினும் இந்தப் பரிசோதனைகளைச் செய்த Rimkus Consulting Group இன் அறிக்கையின்படி Ontario Science Centre... Continue Reading →

ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு

பண்பாட்டுப் படையெடுப்பு என்பது பற்றிப் பலதடவைகள் வெவ்வேறு இடங்களில் பேசியிருக்கின்றோம் என்றாலும் இப்போதையை சூழலில் இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு என்றால் என்னவென்பதைப் பற்றி நாங்கள் சற்று ஆழமாக யோசிக்க வேண்டி இருக்கின்றது.  நாங்கள் ஒருபோதும் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு அந்தப் பண்பாட்டுப் படையெடுப்பின் தாக்கங்களும் அதன் விளைவுகளும் புலம்பெயர் நாடுகளிலும் ஈழத்திலும் தீவிரடைந்து இருப்பதை அண்மைக் காலங்களில் நிகழும் சம்பவங்கள் ஊடாக நம்மால் உணர்ந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. பொதுவாக படையெடுப்பு என்கிறபோது அதை போர் சம்பந்தமாகவும் ராணுவத்துடன்... Continue Reading →

C-51 குடியுரிமையையும் சுதந்திரத்தையும் பறிக்கிறது -ராதிகா சிற்சபைஈசன்

கனடாவைப் பொறுத்தவரை நாம் பார்த்தால் கனடிய மைய நீரோட்ட அரசியலில் ஈடுபடும் தமிழர்களில் அனேகம் பேர் இலங்கையில் தமது ஆரம்பக் கல்வியைக் கற்று கனடாவிற்கு தமது மத்திம வயதுகளில் வந்தவர்கள்.  இந்த இடத்தில் நீங்கள் மிகச் சிறிய வயதில் கனடாவிற்கு வந்திருக்கின்றீர்கள்.  இலங்கை போன்ற ஒரு நாட்டில் இன முரண்பாடுகள் கூர்மை பெற்றிருக்கின்றபோது அங்கு அரசியல் ஆர்வம் வருவதற்கான காரணமும், உந்துதலும் வேறு.  உங்களது நிலைமையில் அது வேறு.  மையநீரோட்ட அல்லது நாடாளுமன்ற அரசியல் தொடர்பான உங்கள்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑