ஒக்ரோபர் 2023 முகநூல் குறிப்புகள்

ஒக்ரோபர் 16, 2023 பலஸ்தீனத்தில் தற்போது நடந்துகொண்டிருக்கின்ற இனப்படுகொலை பற்றிய வரலாற்றுப் பின்னணியை சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்தச் சந்திப்பில் மீநிலங்கோ வெளிப்படுத்துகின்றார். பார்க்கவேண்டியதோர் காணொலி.  பலஸ்தீனத்தில் இந்தச் சந்திப்பில்  மீநிலங்கோ இரண்டு புத்தகங்களைப் பரிந்துரைத்திருப்பார்.  அதுபோல சில ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர் பிரகாஷ் வெங்கடேசன் புத்தகமொன்றினை எனக்குப் பரிசாகக் கொடுத்தனுப்பியிருந்தார்.  மூன்று புத்தகங்களையும் ஆர்வமுள்ளவர்களுக்காக இங்கே பகிர்ந்துகொள்கின்றேன். https://www.youtube.com/watch?v=MxMOTkzgqX4&si=VaAeLUaym2NVtGNN&fbclid=IwAR1INog1zHZzruY98JrG_dFdSvromOAKGHr81Bexq9O34WucYHuPkzuDJwM ஒக்ரோபர் 21, 2023 தமிழ் இலக்கியத்தில் அறம் என்கிற தலைப்பிலான ஜெயமோகனின் உரை ஒன்று தமிழ் இலக்கியத்... Continue Reading →

செப்ரம்பர் 2023 முகநூல் குறிப்புகள்

செப்ரம்பர் 12, 2023 பாரதி இறப்புக் குறித்து… பாரதியார் செப்ரம்பர் 12, 1921 அன்று அதிகாலை 1 மணிக்கு இறந்தார், இதனை செப்ரம்பர் 11 என்று குறிப்பிட்டுவருகின்றார்கள். உண்மையில் பாரதியார் இறந்தது செப்ரம்பர் 12, 1921 என்பதே சரியானது.  அதுமட்டுமல்ல, பாரதியார் யானையால் தாக்கப்பட்டு அதிலிருந்து மீளமுடியாமல் விரைவில் இறந்தார் என்றும், அவர் யானையால் தாக்கப்பட்டது ஜூன் 1921 என்பதால் யானையால் தாக்கப்பட்டு 3 மாதங்களின் பின்னர் இறந்தார் என்றும் இருவிதக் கருத்துகளே தொடர்ந்தும் கூறப்பட்டு வந்தது. ... Continue Reading →

ஓகஸ்ட் 2023 முகநூல் குறிப்புகள்

ஓகஸ்ட் 3, 2023 சீமானும் அவர் பேசும் விடயங்கள் சமூகநீதிக்கு எதிரான, மானுட விரோதமானவையாகவே பல ஆண்டுகளாக இருக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணம் வெளியிடப்பட்டபோது அதில் உள்ள பாசிசக் கருத்துகள் குறித்த உரையாடல்கள் நடந்தன. அவை கீற்று இணையத்தளத்தில் வெளியாகி இருந்தன. பின்னர் ஆழி பதிப்பகம் அவற்றைத் தொகுத்து “எங்கே செல்கிறது நாம் தமிழர் கட்சி” என்ற நூலாக வெளியிட்டும் இருந்தது. நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணம் ஒரு பாசிச அறிக்கை என்பதைக்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑