குப்பிழான் சண்முகனின் “கோடுகளும் கோலங்களும்”

தொண்ணூறுகளுக்கு முன்னர் வெளியான ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் குறித்து எழுதுவது என்று யோசித்தவுடன் தனித்துத் தெரியும் மற்றும் ஒருவர் குப்பிழான் ஐ. சண்முகன் அவர்கள்.  70களில் ஈழத்தில் படைப்பிலக்கியம் தொடர்பாக தொடர்ச்சியாக இடம்பெற்ற வாதங்கள், உரையாடல்கள் ஆகியவற்றின் தொடர்ச்சியாக படைப்பிலக்கியங்கள் வடிவத்திலும், உள்ளடக்கத்திலும் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்தன.  அந்த நேரத்தில் இருந்த, அவர்கள் சார்ந்திருந்த இலக்கிய அணிகள், போக்குகள் என்பவற்றைப் புறந்தள்ளி ஒரு வாசகனாக தற்போது பார்க்கின்றபோது, மொழிக்கும் வடிவத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, அழகியலை முன்னிலைப்படுத்திய... Continue Reading →

அ. யேசுராசாவின் “தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்”

“தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்” என்கிற அ. யேசுராசவின் சிறுகதைத் தொகுப்பினை சென்ற ஆண்டளவில் வாசித்து இருந்தேன்.  அப்போது அது பற்றி எழுதவேண்டும் என்று நினைத்திருந்த சிறு குறிப்பும், வழமைபோலவே “எழுத நினைத்த விடயங்கள் பட்டியலில்” சென்று புதைந்துவிட்டது.   சில நாட்களின் முன்னர் யேசுராசா அத்தொகுப்புப் பற்றி நினைவுக்குறிப்பு ஒன்றினை முகநூலில் பகிர்ந்திருந்தார்; அதனை வாசித்தவுடன் மீண்டும் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தொகுப்பினை எடுத்து வாசித்தேன்.   அண்மைக்காலத்தில் உணர்வுரீதியாக மிக நெருக்கமாக உணர்ந்த தொகுப்பாக அந்த... Continue Reading →

எஸ்பொ பற்றி ஒரு நனவிடை

முற்குறிப்பு : சென்றவாரம் வழமைபோலவே கடைசிநேரத்தில் வாராந்த யாழ் உதயனுக்கான கட்டுரையை எழுதிக்கொண்டிருந்தபோது முகநூல் உரையாடல் மூலம் இடைவெட்டிய நண்பர் கற்சுறா “எஸ்பொ அதிக நாள் தாங்கமாட்டார் என்று செய்தி கிடைத்திருப்பதாகக் கூறினார். அதன்பிறகு அன்றைய கட்டுரையை மனமொருமித்து எழுதமுடியவில்லை. மனம்பாரமான வழமையான பொழுதுகளில் செய்வதுபோலவே மலேசியாவில் இருக்கின்ற நண்பன் விசாகனை அழைத்து சிறிதுநேரம் பேசிவிட்டு உறங்கிவிட்டேன். மறுநாள் வேலையில் விடுப்பு, தூங்கி எழுந்தால் தொலைபேசியில் குறுஞ்செய்தி காத்திருந்தது. தேவகாந்தன் அனுப்பியிருந்தார், “EsPo expired two hrs... Continue Reading →

இஸ்லாமிய தமிழ் இலக்கியமும் முஸ்லிம் தேசிய இலக்கியமும்

நவாஸ் சௌபி எழுதிய “முஸ்லிம் தேசிய இலக்கியம்” என்கிற நூல் ஈழத் தமிழ் இலக்கியம் என்ற பகுப்பில் இருந்தும், ஏற்கனவே அழைக்கப்பட்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்ற பகுப்பில் இருந்தும் வேறுபட்டு, மேற்குறித்த பகுப்புகளின் போதாமையை எடுத்துரைத்து “முஸ்லிம் தேசிய இலக்கியம்” என்ற அடையாளத்தின் அவசியத்தினை தர்க்கபூர்வமாக முன்வைக்கின்றது. இலங்கை முஸ்லிம்கள் தமிழ்மொழியைப் பேசுவதால் தமிழ்பேசும் மக்கள் என்ற அரசியல் அடையாளத்தாலேயே நீண்டகாலம் அழைக்கப்பட்டனர், அவர்கள் படைக்கும் இலக்கியமும் ஈழத் தமிழ் இலக்கியம் என்ற அடையாளத்தினுள்ளேயே உள்ளடக்கப்பட்டது.... Continue Reading →

The Lost Boys of Jaffna என்கிற விஷமத்தனம் பற்றி

The cricket monthly என்ற பெயரில் ESPN Cricinfo தளத்தினரால் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கின்ற கிரிக்கெட்டிற்கான இதழில் The Lost Boys of Jaffna என்கிற பெயரிலான கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கின்றது. இக்கட்டுரையில் போர்க்காலங்களில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த திறமையான கிரிக்கெட் வீரர்களான காண்டீபன் (சென்.ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர்), நிஷாந்தன் (சென். பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவர்) இருவரும் கட்டுரைக்காக சந்திக்கப்பட்டிருப்பதுடன், அவர்கள் பற்றிய பல்வேறு தகவல்களையும் கொண்டதாக இக்கட்டுரை அமைதிருக்கின்றது. இக்கட்டுரையை பலர் மகிழ்வுடன், எம்... Continue Reading →

திரு ஆர். எம். நாகலிங்கம் அவர்களுடனான சந்திப்பினை முன்வைத்து; சாதியம் : ஓர் அறிமுகம் ஓர் அனுபவம் ஓர் அவதானம்

திரு ஆர். எம். நாகலிங்கம் அவர்களைச் சந்திக்கும் அருமையான வாய்ப்பொன்றினை திரு நவம் அவர்களூடாகக் கிடைத்ததுஅண்மையில் எனக்குக் கிடைத்த பேறென்றே சொல்லுவேன்.  அந்தச் சந்திப்பின் போது அவரது சமூகப்பணிகளையும், செயற்பாடுகளையும் கோட்பாடுகளையும் ஆவணப்படுத்தும் நோக்குடன் வெளியான எழுச்சிப்பாதை என்கிற நூலையும் பெற்றுக்கொண்டேன்.  யார் இந்த ஆர். எம் நாகலிங்கம் என்று அறிந்துகொண்டால் நான் முன்னர் சொன்னதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளலாம். இவர் 1936ம் ஆண்டில் மாவிட்டபுரத்தில் பிறந்தவர்.  ஈழத்தில் மிக மோசமான சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்கொண்ட சமூகங்களில் ஒன்றான... Continue Reading →

மகாபாரதம் சொல்லும் அரசியல் என்ன? 2

  நான் மகாபாரதம் சொல்லும் அரசியல் என்ன? என்கிற என் முன்னைய குறிப்பில் வலியுறுத்தியது, இங்கே குறிப்பிடப்படும் அறம் என்பது, “ஆள்வோர்க்கான அறம்” என்பதை வலியுறுத்தவே.  அவ் அறம், எல்லாருக்கும் பொதுவானதாகவோ அல்லது எல்லாருக்கும் அறமாகவோ இருப்பதில்லை.  புராணக்கதைகள், தொன்மங்கள் என்பவற்றைப் பற்றி ஆராயும்போது அன்றைய காலப்பகுதியுடன் வைத்தே பேசவேண்டும்.  அன்றைய வழமைகளை ஆராயவேண்டும்.  அவற்றுடன் பொருத்திப் பார்க்கவேண்டும்.  அவையெல்லாம் புராணங்களை நியாயப்படுத்துவதற்காக அல்ல.  அதே நேரத்தில் புராணங்கள், அடிப்படைவாதம் ஒன்றினையோ அல்லது மதவெறியையோ தூண்டவோ அல்லது... Continue Reading →

மகாபாரதக் கதையின் அரசியல் என்ன?

மகாபாரதக் கதையின் அரசியல் என்ன என்கிற கேள்வியொன்றினை அண்மையில் முகநூலில் மீராபாரதி அவர்கள் எழுப்பி இருந்தார்.  மகாபாரதம் சிறுவயது முதலே எனக்கு மிகவும் பிடித்த காவியம்.  இராமாயணத்தைவிடவும் கூட.  அதிலும் குறிப்பாக நான் யாழ்ப்பாணத்தில் இருந்த 1990 – 96 வரையான காலப்பகுதியில் அனேகமான ஆலயங்களில் திருவிழாக்காலங்களில் கம்பராமாயண சொற்பொழிவு தொடர்ச்சியாக நடைபெற்றுவந்தது.  பெரும்பாலும் கம்பன் கழகத்தைச் சேர்ந்தவர்களாலும், சில தனிப்பட்டவர்களாலும் இச்சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன.  ஆயினும், மகாபாரதம் போல இராமாயணம் ஒருபோதும் நெருக்கமானதாக இருந்ததில்லை.   மகாபாரதம்... Continue Reading →

எனது நினைவில் பாலுமகேந்திரா…

காலஞ்சென்ற பாலுமகேந்திரா அவர்கள் தமிழ்நாட்டு மையசினிமாவில் நல்லசினிமாக்கள் என்று சொல்லக்கூடிய சில சினிமாக்களை இயக்கியவர்,  ஆனால் அவரது மறைவுக்குப் பின்னர் அவரைப் போற்றிப் புகழும் விதம் மிகமிக அளவுக்கு மிஞ்சியதாகவே அவதானிக்க முடிந்தது.   ஒரு படைப்பாளி என்பதைத் தாண்டி பாலுமகேந்திராவின் தனிப்பட்ட வாழ்வில் அவருக்கும் மௌனிகாவிற்கும் இடையிலான உறவு, அவ் உறவு பற்றி பாலுமகேந்திராவும், மௌனிகாவும் வழங்கிய பேட்டிகள், பகிர்வுகள் போன்றன மீண்டும் மீண்டும் பகிரப்பட்டன.  (பாலுமகேந்திராவின் மரணச்சடங்கில் கலந்துகொள்ள வந்த மௌனிகா இயக்குனர் பாலாவினால் தடுக்கப்பட்டமையும்... Continue Reading →

ஶ்ரீஸ்கந்தனின் இரண்டு நூல்கள் : அரியாலை ஊரை ஆவணப்படுத்தும் முயற்சிகள்

சென்ற கோடைகாலத்தின் தொடக்கத்தில் ஸ்ரீஸ்கந்தன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது பல்வேறு சஞ்சிகைகளிலும், இதழ்களிலும் தொடர்ச்சியாக தான் எழுதிய கட்டுரைகளில் இருந்து தேர்ந்தெடுத்த சில கட்டுரைகளை  அரியாலையூர் நாடகக் கலைஞர்கள் பற்றிய ஒரு தொகுப்பாகவும், தனது அனுபவங்களை, நினைவுப்பதிவுகளை, அவரே சொன்ன வார்த்தையையில் குறிப்பிட்டால் முசுப்பாத்திகளை ஒரு தொகுப்பாகவும் ஆக இரண்டு புத்தகங்களாக்கும் எண்ணம் இருப்பதாகவும் கூறினார்.  அடடே, நல்ல விஷயம் தானே.  அது முக்கியமானதும் கூட என்று எனது ஆர்வத்தை வெளிப்படுத்தி இருந்தேன்.  நினைவுப்பதிவுகளாகவும், அனுபவப் பகிர்வுகளாகவும், நனவிடை... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑