தேரா மன்னா 2.0

கற்சுறா, எனது பதிவில், நான் சொல்லாத விடயங்களைச் சொன்னதாகவும், சொன்ன விடயங்களைச் சொல்லாததாகவும் நீங்கள் எழுதியிருப்பது ஒரு விதத்தில் என் மீதான ஒரு அவதூறாக அமைகின்றது என்பதை நான் நான் என்ன சொல்லியிருக்கின்றேன், அதை எவ்வாறு நீங்கள் மடைமாற்றியிருக்கின்றீர்கள், நான் சொன்னவற்றைச் சொல்லவில்லை என்றிருக்கின்றீர்கள் என்பதையெல்லாம் விளக்கமாகவே சுட்டிக்காட்டியிருக்கின்றேன். அந்தப் பதிவு ஒரு கட்டுரையோ அல்லது ஈழப்போராட்டம் குறித்த வரலாறோ அல்ல; உரையாடல் ஒன்றுக்கான ஒரு குறிப்பு.  ஆனால் நீங்கள் ஒட்டுமொத்த ஈழப்போராட்டத்தில் இடதுசாரிகளினதும் பிற இயக்கத்தினரினதும்... Continue Reading →

தேரா மன்னா!

வெளிப்படையானதும் வினைத்திறனையும் கொண்டதாக ஓர் உரையாடல் அமையவேண்டுமானால் நாம் உரையாடும் எதிர்த்தரப்பினர் என்ன சொல்கின்றார்கள் என்பதைக் கூர்மையாக அவதானிப்பதும், அதில் ஏதும் குழப்பம் இருப்பின் தெளிவுபடுத்திக்கொள்வதும்,  தாம் இருக்கும் நிலைப்பாட்டுடன் எதிர்த்தரப்பினர் சொல்லும் கருத்துநிலை / எடுக்கின்ற நிலைப்பாட்டுடன் ஒப்பிட்டுத் தமக்குள் கேள்வி எழுப்பிக் கொள்வதும், அவர்கள் என்ன அர்த்தத்தில் (context) சொல்கின்றார்கள், எந்த உரையாடலின் அல்லது கடந்தகால நிலைப்பாடுகளின் தொடர்ச்சியாக அதைச் செய்கின்றார்கள் என்பதையும் முன் முடிவுகளோ அல்லது திரிவுபடுத்தல்களோ இல்லாமல் புரிந்துகொள்வதும், குறைந்த பட்சம்... Continue Reading →

தந்தை பெரியாரின் கொள்கைத் தொடர்ச்சியே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என வாதிட முடியுமா?

ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக உருவான ஆரம்ப காலத்தில் அதற்குத் தமிழ்நாட்டில் இருந்து திராவிடக் கட்சிகளும் திராவிட இயக்கங்களும் பெரும் ஆதரவைக் கொடுத்துக்கொண்டிருந்தன.  கிட்டத்தட்ட இதே சமகாலத்தில் எமர்ஜென்சி மூலம் தமிழ்நாட்டில் நடந்த ஒடுக்குமுறைகள், ஒன்றிய அரசால் எப்போதும் கலைக்கவும் கட்டுப்படுத்தவும் கூடிய நிலையிலேயே மாநில அரசுகள் கட்சிகளும் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்தி இருந்தது.  அதுபோலவே ஆயுதப் போராட்டத்தின் மூலம் புரட்சியை நடத்தி சோசலிச அரசை இந்தியாவில் ஏற்படுத்தலாம் என்ற நோக்குடன் இருந்த நக்ஸல்பாரிகளின் தாக்கத்தினைப் பெற்றிருந்த... Continue Reading →

தோழர் வைகறை ரவி

கனடாவில் இருந்து வெளிவந்த முக்கியமான பத்திரிகைகளில் ஒன்றான வைகறையின் ஆசிரியரும் மிக நீண்டகாலமாகவே சமூக, அரசியல் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தவரும், நண்பருமான ரவி என்கிற ரவிச்சந்திரநேசன் பொன்னுத்துரை ஜனவரி  25, 2025 அன்று இயற்கையெய்தி இருக்கின்றார்.   தனது சிறுவயது முதலே சமூக நலனில் அக்கறையும் அரசியல் உணர்வும் கொண்டு வளர்ந்த ரவி, எண்பதுகளில் ஈழத்தமிழரின் தேசிய இன விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருக்கொள்ளத் தொடங்கியபோது தானும் விடுதலை இயக்க அரசியலில் இணைந்துகொண்டார்.  தேசிய இன... Continue Reading →

றஷ்மியின் சற்றே பெரிய கதைகளின் புத்தகம் – வாசிப்பனுபவம்

ஓவியராகவும் நூல் வடிவமைப்பாளராகவும் கவிஞராகவும் நன்கறியப்பட்டவரான றஷ்மி நிறைய நூல்களின் அட்டைப்படங்களை தனித்துவமான அழகியலோடு உருவாக்கிக் கொடுத்திருப்பவர்.  பல எழுத்தாளர்கள், கலை இலக்கியச் செயற்பாடுகளின் கோட்டோவியங்களை அவ்வப்போது வரைந்தும் முகநூலில் பகிர்ந்துவருவார்.  பலரது புரொஃபைல் படங்களாக றஷ்மி வரைந்த கோட்டோவியங்களே இருப்பதை அவதானித்திருக்கின்றேன்.   இதுவரை ஐந்து கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.  காவு கொள்ளப்பட்ட வாழ்வு முதலாய கவிதைகள், ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு, ஈதேனின் பாம்புகள், ஈ தனது பெயரை மறந்துபோனது, அடைவுகாலத்தின் பாடல்கள் என்கிற இவரது... Continue Reading →

ஆறுமுகநாவலர்: பதிப்புச் செயற்பாடா? மதச்செயற்பாடா?

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ஒருங்கிணைத்த கருத்தரங்கில் ரா. கமலக்கண்ணன் பேசிய  ஆறுமுக நாவலரின் பதிப்புச் செயற்பாடுகள் என்கின்ற உரையை யூட்யூபில் பார்த்தேன்.  இதில்  ஆறுமுகநாவலர்  சைவத்தை வளர்க்க வேண்டும் என்பதற்காக தமிழினை ஒரு கருவியாக பாவித்தார் என்று கூறி  ஆறுமுகநாவலர் தனது நிலைப்பாட்டில் இருந்து சரியாகத்தான் செயற்பட்டார் என்ற வாதத்தை முன்வைத்துப் பேசி இருக்கின்றார் கமலக்கண்ணன்.  இந்த உரையில் கிறிஸ்தவ மிஷனரிகள் இலங்கையில் மதப்பரப்பினைச் செய்யும் பொழுது  கல்விக்கூடங்களை நிறுவினார்கள், பதிப்புக்கூடங்களை நிறுவி நூல் பதிப்புகளைச்... Continue Reading →

ஆ. இரா. வேங்கடாசலபதிக்கு 2024 சாகித்திய அகடமி  விருதுகிடைத்தமை குறித்த விமர்சனங்கள் அல்லது புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தல்

ஆ. இரா. வேங்கடாசலபதி  எழுதி காலச்சுவடு பதிப்பகம் ஊடாக பெப்ரவரி 2022 இல் வெளிவந்த “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908” என்கிற நூலுக்கு இந்த ஆண்டுக்குரிய (2024) சாகித்திய அகாதமி விருது கிடைத்திருப்பதன் தொடர்ச்சியாக  சில உரையாடல்கள் தொடங்கியிருக்கின்றன.  இந்த விமர்சனங்களில், ஏற்கனவே மக்கள் வெளியீடாக 1987 இல் வெளிவந்த நூலுக்கு இப்பொழுது 2024இல் விருது கிடைத்திருக்கின்றது என்கின்ற ஒரு கருத்து முன் வைக்கப்பட்டிருக்கின்றது.  இந்தக் கருத்தை முன்வைத்தவர்களில் ஒருவரான  ரியாஸ் குரானா அவர்கள் டிசம்பர் 22... Continue Reading →

கொம்ரேட் காங்ஸ்டாவின் “Break The Bloody Silence”

கொம்ரேட் காங்ஸ்டாவின் யூட்யூப் பக்கத்தில் “Break The Bloody Silence” என்கிற தற்போதைய பலஸ்தீனப் பிரச்சனை குறித்த தமிழ் ரப் பாடலினையும், அதன் வெளியீட்டுவிழாவில் செல்வா, ராஜு முருகன், யுகபாரதி ஆகியோர் ஆற்றிய உரைகளையும் பார்த்தேன்.  சமூக நீதிக்கான அரசியலுக்கான தணிக்கைகளும், அந்த அரசியல் பேசுவதையும் பேசுவோரையும் மைய ஊடகங்கள் தவிர்த்தும் புறக்கணித்தும் வருகின்ற, வலதுசாரி அரசியலுக்கு எதிரான கருத்துகள் கடுமையாகத் தணிக்கை செய்யப்படுகின்ற சூழலில் இதுபோன்ற சுயாதீன பாடல்களின் வருகை முக்கியமானதும் ஆதரவளிக்கவேண்டியதுமாகும்.  இந்தப் பாடலுக்கான... Continue Reading →

டானியல் அன்ரனி: சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள் நூலை முன்வைத்து

எழுபதுகளின் இறுதி முதல் எண்பதுகள் வரை ஈழத்தில் வெளிவந்த சிறுகதைத் தொகுப்புகளை வாசிப்பதும் எழுதுவதும் எனக்குத் தனிப்பட திருப்தியளிக்கின்ற, ஆர்வமான ஒரு விடயம்.  ஈழத்தில் கலை இலக்கியங்களின் வடிவம், உள்ளடக்கம், கருத்தியல், சமூக நோக்கு உள்ளிட்ட விடயங்கள் குறித்த காத்திரமான விமர்சனங்கள் இடம்பெற்ற காலப்பகுதியின் விளைவுகளாக இந்தக் கலை இலக்கியப் படைப்புகளை அவதானிக்கமுடியும்.  இந்த விவாதங்களினால், விமர்சனத்துறை கூர்மையடைந்ததுடன் படைப்புகளும் செழுமையடைந்தன.    இந்தக் காலப்பகுதியில் எழுதியதுடன், இதழாசிரியராகவும் செயற்பட்டு, விவாதங்களில் பங்கேற்றவர் டானியல் அன்ரனி. 1947 முதல்... Continue Reading →

கண்கள் இரண்டினில் ஒன்றை…

பெண்களுக்கான வோட்டுரிமையை 1931 முதலே வழங்கிய நாடென்ற பெயர் இலங்கைக்கு இருக்கின்றது; அரசியலில் பங்களிக்கும் உரிமையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமையும் பெண்களுக்கு சமத்துவமானதென்கிற UN Convention on Eradication of all forms of Discriminations Against Women என்கிற உடன்படிக்கையில் கையொப்பமிட்ட நாடுகளில் ஒன்றென்ற வகையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவப்படுத்தலையும், பங்கேற்பையும் உறுதிப்படுத்தும் கடப்பாடும், அவர்கள் பங்களிக்க முன்வரும்போது எதிர்கொள்ளுகின்ற தடைகளை உடைப்பதற்கான கடப்பாடும் முக்கியமானது. ஆயினும் இலங்கைத் தேர்தல் திணைக்களத்தின் தரவுகளின்படி தற்போது இலங்கையில் மக்கள்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑