“ராஜீவ் காந்தி படுகொலை – வெளிவராத மர்மங்கள்” புத்தகம்.

அவிழ்க்கப்படாத மர்மங்களுடன் இருக்கின்ற அரசியற் படுகொலைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.  அந்த வகையில் ராஜீவ் காந்தி படுகொலையும் ஒன்று.  அதுவும் ராஜீவ் காந்தியின் படுகொலை ஒரு இனத்தின் தலையெழுத்தையே மாற்றி எழுதியதில் பெரும்பங்கு வகித்தது என்பதை நாம் கடந்த காலங்களில் கண்கூடாகவே கண்டிருக்கின்றோம். 1991ம் ஆண்டு மே 21ம் திகதி இரவு கொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் கொலை வழக்கின் விசாரணைகள் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டதுடன், 5 ஆண்டுகாலம் விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி மாற்றப்பட்டு புதிதாகப் பொறுப்பேற்ற நீதிபதி சில... Continue Reading →

இலங்கை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு – சில குறிப்புகள்: அருண்மொழிவர்மன்

இலங்கையில் வருகின்ற வருட ஆரம்பத்தில் நடைபெற இருக்கின்ற சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு பற்றி முதன் முதலில் எஸ்.பொ. கீற்று இணையத் தளத்தில் தன் எதிர்ப்பினைப் பதிவு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து அந்த மாநாட்டினை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு தமிழகத்துச் சஞ்சிகைகளில் கட்டுரைகளும் கருத்துரைகளும் வெளியாகி இருந்தன. எஸ்.பொவின் கட்டுரையை எனது முகப்புத்தகத்தில் தொடுப்புக் கொடுத்திருந்த நான் அது பற்றிய எனது நிலைப்பாட்டையும் கூடவே பதிவு செய்திருந்தேன். இந்த நிலையில் இந்த மாநாட்டைப் நிராகரிக்கின்றோம் என்ற பத்மநாப... Continue Reading →

தற்பாலினர் குறித்து தேவகாந்தன் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை – அருண்மொழிவர்மன்

முன்பொரு முறை அ. மார்க்ஸ் பற்றி எழுதிய கட்டுரை ஒன்றில்  “ஒருவர் ஓரிடத்தில் சரியான அல்லது தெளிவான பார்வையுடன் இருக்கிறார் என்றால் அவர் எல்லா இடத்தும் அப்படி இருக்கவேண்டும் என்பது இல்லை. எழுத்தாளர்கள் உள்ளிட்ட நிறைய ஆளுமைகளை அணுகும்போது இதே கருத்துடன் அணுகுவதே எனது வழக்கம்” என்று குறிப்பிடிருந்தேன்.  துரதிஸ்டவசமாக இதே மேற்கோளை எனக்கு அதிகம் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான தேவகாந்தனுடனும் இணைத்துப் பார்க்கவேண்டிய நிலையை அடைந்துள்ளேன்.  கனடாவில் இருந்து வெளிவருகின்ற “தாய்வீடு” என்கிற பத்திரிகையில் தேவகாந்தன்... Continue Reading →

கொல்லப்படும் பெண்குழந்தைகளும், காணாமல் போகும் பெண் குழந்தைகளும்

It’s not a child.  It’s a girl baby, and we can't keep it.  Around these parts, you can't get by without a son.  Girl babies don't count."   சீனாவில் பிறந்து தற்போது லண்டனில் வசித்து வரும் ஸு ஸின்ரன் (Xue Xinran) எழுதிய The good woman of China என்கிற புத்தகத்தில், சீனாவில் பெண் குழந்தைகள் பிறக்கின்ற போது பொதுப்புத்தி எவ்வாறு அதை எதிர்கொள்ளுகின்றது என்பதை... Continue Reading →

செழியனின் நூல் மற்றும் காலம் இதழ் வெளியீடு

விதிக்கப்பட்ட வாழ்க்கையும் வீழ்ந்து சென்ற நம்பிக்கைகளும் – தேவகாந்தனின் விதி நாவல் பற்றிய சில அனுபவங்கள்

விதி என்றால் விதிக்கப்பட்டது என்று எமக்கும் பத்தாம் ஆண்டில் படிப்பிக்கப்பட்டிருக்கின்றது. அதே பத்தாம் ஆண்டில் தான் 'நாடென்ப நாடா வளத்த, நாடல்ல நாட வளம் தரும் நாடு' என்பதும் படிப்பிக்கப்பட்டிருந்தது.  ஆனால் தேவகாந்தன் தனது விதி நாவலில், நாடியும் வளம் தந்து விடாத நாடொன்றில் பிறந்து வளர்ந்தவர்களின் கதையைச் சொல்லுவதன் மூலம் புதிய விதி பற்றிச் சொல்லுகின்றார். "ஒரு காலத்தில கடவுளால படைக்கப்பட்டது விதி என்ற ஒரு கருத்து இருந்தது.  பிறகு ஒவ்வொருவரும் தாங்கள் தாங்கள் செய்கிற... Continue Reading →

தற்பாலினர் வெறுப்புக்கு (Homophobia) எதிராக நீங்களும் நாங்களுமாய்

தற்பாலினர் வெறுப்புக்கு (Homophobia) எதிரானகருத்துரைப்பும் கலந்துரையாடலும்Gay/Lesbian/Trans-gender ற்கு எதிரான பல்வேறு வகையான கருத்துக்கள் இயல்பாக்கப்படுவதும் (Normalizing Discourses), அவர்களது தெரிவுசார் உரிமைகள் மறுக்கப்படுவதும், சமூகத்தின் அங்கத்தவர்களாக அவர்களது இருப்பு தொடர்ந்தும் ஒடுக்கப்படுவதும் தமிழ்ச்சமூகத்தில் நீண்டகாலமாக நிலவிவருகிறது. பரவலான இக்காழ்ப்புணர்வுக்கு எதிராக எமது எதிர்க்குரல்களைப் பதிவு செய்தல் அவசியமாகின்ற இந்தவேளையில்….பொது ஊடகங்கள் சிலவும் இக்காழ்ப்புணர்வு முழுத் தமிழ்ச் சமூகத்தின் நிலைப்பாடு என்ற பிரமையை ஏற்படுத்த முயல்கின்றன. ஊடகங்கள் தம் விழுமியங்களைத் தவறுவதைச் சுட்டிக்காட்டவும், எமது தன்னிலையை சுயவிமர்சனம் செய்யவும்,... Continue Reading →

யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள் என்ற கலையரசனின் கட்டுரை பற்றிய என் கருத்துக்கள்

தற்போது சில நாட்களாகவே யூதர்களையும், தமிழர்களையும் ஒப்பிட்டு - பெரும்பாலான நேரங்களில் மிகவும் மேம்போக்கான ஒப்பிடல்கள் - வெகுவாகப் பேசப்படுகின்றது.  அப்படி ஒப்பிடும்போது, யூதர்களும் உலகெல்லாம் பரவி இருந்தனர் என்றும், அவர்கள் தாம் இருந்த நாடுகளில் எல்லாம் மிகுந்த செல்வத்தோடும், வணிகங்களில் முக்கிய நிலைகளிலும் இருந்தனர் என்ற வாதங்களை முன்வைக்கின்றனர்.  ஆனால் நடைமுறையில், நிச்சயம் தமிழர்களுக்கு, யூதர்களுடன் ஒப்பிடும்போது எத்தனை வேறுபாடுகள் உள்ளனவென்பதை நாம் அவதானிக்கவேண்டும்.  யூதர்கள் அவர்கள் இருந்த பல நாடுகளில் நிர்ணய சக்திகளாக, ஊடகத்துறை... Continue Reading →

கவிதைகள் கருத்தரங்கு – சில கருத்துக்கள்

-1-வாழும் தமிழ் என்ற பெயரில் காலம் சஞ்சிகை தொடர்ச்சியாக நடத்தும் நிகழ்வுகளின் வரிசையில் இன்று நடைபெற்ற கவிதைகள் பற்றிய கருத்தரங்கத்திலும், புத்தகக் கண்காட்சியிலும் கலந்துகொண்டேன்.    காலம் சஞ்சிகை மற்றும் காலம் செல்வம் பற்றிய விமர்சனங்கள் காலத்துக்குக் காலம் பலராலும் வைக்கப்பட்டாலும், காலம் புலம் பெயர் சூழலில் காலம் மிக முக்கியமான ஒரு இடத்தை தனக்கென நிலை நாட்டியே இருக்கின்றது.   1990 ஜூலையில் தனது முதலாவது இதழை வெளிட்ட காலம் கடந்த 20 ஆண்டுகளில் 35... Continue Reading →

தொ. பரமசிவன், பொ. ரகுபதி ஊடாக அறியப்படாத வரலாறு

  இந்த மே மாதம் 5வது தமிழியல் மாநாட்டில் கலந்து கொள்ள கனடா வந்திருந்த கார்மேகம் என்கிற ஜவகர்லால நேரு பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்ட மாணவரை(நாட்டாரியல் பற்றி அதிகம் அக்கறையும், தேர்ச்சியும் கொண்டவர்)    நண்பர்கள் சந்தித்து ஒரு மாலை நேரத்தில் சிறிது உரையாடினோம்.  எழுதப் பட்ட வரலாறுகளை சற்றே மறந்துவிட்டு நாட்டாரியல் பற்றியும், பண்பாட்டு அம்சங்கள், அவற்றின் தொன்மை பற்றியும் வாசிக்கும்போது அல்லது பேசிக் கொண்டு மெல்ல மெல்லப் பின்னோக்கி செல்லும் போது எம் மக்களின்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑