காதல் பற்றிய பதிவுகளும் படைப்புகளும் வந்தபடியேதான் இருக்கின்றன. காதல் பற்றி எத்த்னை படைப்புகள் வந்தாலும் காதல் புதிதாக்வே இருக்கின்றது. இதில் பிரிந்து போன காதல் பற்றிய கதறலாக, ஆற்றாமையுடன் கூடிய துயரை ஒரு ப்டைப்பாக இறக்கி வைக்கின்ற முயற்சியே யூமா வாசுகியின் மஞ்சள் வெயில் நாவல். இந்த நாவல் (இதை ஒரு நாவல் என்ற வகைக்குள் அடக்கிவிடலாமோ தெரியாது.) கதிரவன் என்ற பத்திரிகை ஒன்றில் ஓவியனாகப் பணிபுரிபவன், கொஞ்சம் கவிதைகளும் எழுதுபவனுக்கு, அவன் சக் ஊழியன் சொல்லி... Continue Reading →
மஞ்சள் வெயில் நாவலும் மீளவந்த நினைவுகளும்
காதல் பற்றிய பதிவுகளும் படைப்புகளும் வந்தபடியேதான் இருக்கின்றன. காதல் பற்றி எத்தனை படைப்புகள் வந்தாலும் காதல் புதிதாகவே இருக்கின்றது. இதில் பிரிந்து போன காதல் பற்றிய கதறலாக, ஆற்றாமையுடன் கூடிய துயரை ஒரு படைப்பாக இறக்கி வைக்கின்ற முயற்சியே யூமா வாசுகியின் மஞ்சள் வெயில் நாவல். இந்த நாவல் (இதை ஒரு நாவல் என்ற வகைக்குள் அடக்கிவிடலாமோ தெரியாது.) கதிரவன் என்ற பத்திரிகை ஒன்றில் ஓவியனாகப் பணிபுரிபவன், கொஞ்சம் கவிதைகளும் எழுதுபவனுக்கு, அவன் சக ஊழியன் சொல்லி தன்... Continue Reading →
உமா வரதராஜனின் மூன்றாம் சிலுவை
உமா வரதாரஜனின் “அரசனின் வருகை” சிறு கதையை தமிழில் வெளிவந்த முக்கியமான சிறுகதைகளில் ஒன்றென்று ஜெயமோகனும், எஸ். ராமகிருஷ்ணனும் குறிப்பிட்டிருந்ததை கவனித்து இருக்கிறேன். பல இடங்களில் தேடிய போதும் அது எனக்கு கிடைக்கவில்லை. பத்மனாப அய்யர் தொகுத்து தமிழர் தகவல் வெளியீடாக வந்த ஈழத்து சிறுகதைகள் தொகுப்பு ஒன்றிலும் இந்தச் சிறு கதை இடம்பெற்றிருப்பதாக அறிந்த போதும் அதையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இது போன்ற காரணங்களால் அண்மையில் காலம் செல்வம் ஒருங்கமைத்திருந்த ஈழத்து இலக்கியம் பற்றிய கலந்துரையாடலில்... Continue Reading →
தாயகக் கனவுகள்
சென்ற ஆண்டின் இறுதியில் மிலன் குந்த்ரோவ் எழுதிய ignorance என்ற நாவலின் தமிழாக்கம் மாயமீட்சி என்ற பெயரில் வெளிவருகின்றது என்கிற அழைப்பிதழ்கள் என் மின் அஞ்சல் முகவரியை மொய்த்தபோது நான் இலங்கை போவதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தேன். வாழும் தமிழ் பதிப்பக வெளியீடாக மணி வேலுப்பிள்ளையின் மொழி பெயர்ப்பில் எழுத்துப் பிழைகள் சற்று அதிகமாகவே தென்பட்டாலும், சிறப்பான அச்சு நேர்த்தியுடன் புத்தகம் வெளியாகி இருந்தது. நாவலின் கருவும், அப்போது நான் இருந்த மன நிலையும் பெரிதளவும் ஒத்துப் போயிருந்ததால்,... Continue Reading →
தாயகக் கனவுகள்
சென்ற ஆண்டின் இறுதியில் மிலன் குந்த்ரோவ் எழுதிய Ignorance என்ற நாவலின் தமிழாக்கம் மாயமீட்சி என்ற பெயரில் வெளிவருகின்றது என்கிற அழைப்பிதழ்கள் என் மின் அஞ்சல் முகவரியை மொய்த்தபோது நான் இலங்கை போவதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தேன். வாழும் தமிழ் பதிப்பக வெளியீடாக மணி வேலுப்பிள்ளையின் மொழி பெயர்ப்பில் எழுத்துப் பிழைகள் சற்று அதிகமாகவே தென்பட்டாலும், சிறப்பான அச்சு நேர்த்தியுடன் புத்தகம் வெளியாகி இருந்தது. நாவலின் கருவும், அப்போது நான் இருந்த மன நிலையும் பெரிதளவும் ஒத்துப் போயிருந்ததால்,... Continue Reading →
சாரு நிவேதிதா, ஜெயமோகன் மற்றும் ஊடகங்கள் இணைந்து வழங்கும் “நித்திய ஆனந்தம்”
நித்தியானந்தர் பற்றி எழுதாமல் வலைப்பதிவே எழுத முடியாது என்பது போல எல்லாப் பக்கம் இருந்தும் நித்தியானந்தர் பற்றிய கட்டுரைகளே குவிகின்றன. எரிகிற கொள்ளியில் பிடுங்கினவரை லாபம் என்பது போல சன்னும், நக்கீரனும் தொடக்கி வைத்த இந்த வியாபாரத்தில் இப்போது எல்லாத் தரப்பாருமே குதித்துள்ளனர். ஒரு கள்ளனைக் காட்டிக் கொடுக்கிறோம் என்ற பெயரில் பல கள்ளர்கள் கூட்டுக் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். நான் இப்படி எழுதுகிறேன் என்றவுடன் நான் ஏதோ நித்தியானந்தருக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று நினைக்கவேண்டாம். நித்தியானந்தர் மட்டுமல்ல... Continue Reading →
நம்மை நாமே சிலுவையில் அறைவோம்
1 யூலை மாதம் 11ம் திகதி 20 பேர் கொண்ட இன்னொரு தமிழ்க் குழுவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட 23 வயது இளைஞரின் கொலையுடன், அதற்கு சில வாரங்கள் முன்னர் மோதல் ஒன்றின் தொடர்ச்சியாக காரால் இடித்துக் கொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களுடன் சேர்த்துப் பார்க்கும் போது இந்த கோடை காலத்திலும் வழமை போல தமிழ் இனக்குழுக்களின் இடையிலான மோதல் வலுப்பெறத்தான் போகிறது என்பது தெளிவாகின்றது. அதிலும் பெரும்பாலும் 16 வய்து முதல் 28 வயதுக்கு இடையிலான,... Continue Reading →
நானும் என் வாசிப்பும்.
எப்போது நேரம் கிடைத்தாலும் ஏதோ பெரும் கடன் போல உடனே ஏதாவதொரு புத்தகத்தை தூக்கி படித்துக்கொண்டிருக்கும் என்னை ஒரு விநோத ஜந்துவாக அடிக்கடி என் நண்பர்கள் பார்ப்பது வழக்கம். சற்று விலத்தியிருந்து யோசிக்கும்போது எனக்கும் என்னுடைய வாசிப்புப் பழக்கம் பற்றிய ஆதாரமான சில கேள்விகள் இருந்தாலும் இந்த தொடர்ச்சியான வாசிப்புப் பழக்கத்தால் நான் அடைந்தது அதிகம். அதிலும் போரின் உக்கிரத்தால் வேறு எந்த விதமான பொழுது போக்கு வசதிகளும் கைகூடாத அந்த நாட்களில் புத்தகங்கள் என்னை சில... Continue Reading →
இன்றும் வெல்லும் நீதி – என்னுயிர்த் தோழன்
மிக தீவிரமான திரைப்பட ரசிகனாக இருந்தும் நல்ல சினிமா, கெட்ட சினிமா என்கிற விவாதங்களில் நான் ஒரு போதும் ஈடுபடுவதில்லை. என்னை பொறுத்தவர சினிமாவை ரசித்த சினிமா, ரசிக்காத சினிமா என்றுதான் பாகுபடுத்த முடிகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழில் நல்ல படங்கள் வருவதில்லை என்று கூறுவது இப்போதெல்லாம் ஒரு fashion ஆகவே மாறிவிட்டது. மொழி திரைப்படத்தின் 100வது நாள் விழாவின் போது ஞாநிக்கு பதிலாக இயக்குநர் அமீர் சொன்னது போல நல்ல சினிமாக்களை எல்லாம் திரையரங்கில் சென்று பார்த்திருந்தால்,... Continue Reading →
அங்கிள் சாமுக்கு மண்டோ எழுதிய கடிதங்கள் மற்றும் எஸ். ராமகிருஷ்ணனின் விகடன் கட்டுரை
சென்றவார ஆனந்த விகடனில் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய வெளிநாட்டுக்காரர்கள் அறிவு ஜீவிகளா என்ற கட்டுரை இடம்பெற்று இருக்கின்றது. வெளிநாட்டுக்காரர்கள் பற்றி எம்மவரிடையே இருக்கின்ற பொதுப் புத்தி பற்றி இந்தக் கட்டுரையில் அலசப்பட்டிருக்கின்றது. இது போன்ற பொதுப் புத்திகளை நாமும் நிறைய அவதானித்தே இருக்கின்றோம். அதிலும் ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகள் அதிகம். வெள்ளையர்கள் எல்லாரும் குடிப்பவர்கள் என்றும், கறுப்பினத்தவர்கள் எப்போதும் துப்பாக்கியுடனே திரிவார்கள் என்றும் இவர்கள் எல்லாம் பாலியல் தேவைகளுக்காக இலகுவாக அணுகக்கூடியவர்கள் என்றும் எம்மிடையே இன்றும் அபிப்பிராயம்... Continue Reading →