எல்லாற்ற மாடும் உழுகிதென்றிட்டு சுப்பற்ற பேத்தை மாடும் உழுகைக்கு போச்சாம் என்று அடிக்கடி என் நண்பன் விசாகன் சொல்வது போல எல்லாரும் ஏதோ செய்யினம் போல இருக்கு என்றுதான் நானும் வலைப்பூக்களுக்க வந்தனான். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமென்று எழுதினாலும் இதில் ஒரு சந்தோஷம் கிடைத்தது உண்மை. அதை கொஞ்சம் கூட்டுவதுபோல கானாபிரபா வேற எனக்கு சினிமா பற்றிய தொடர் பதிவுக்கு அழைப்பு தந்தார். அவருக்கு என் அன்பு கலந்த நன்றிகள்.கால் நூறாண்டை கடந்துவிட்ட வாழ்க்கை பயணத்திலே, சற்று... Continue Reading →
தமிழ் சினிமாவில் எழுத்தாளர் பாலகுமாரன்
தமிழ் சினிமாவில் தொடர்ந்து காணாப்படும் கதை வறட்சிக்கு பலராலும் முன்வைக்கப்படும் காரணங்களில் ஒன்று அதில் எழுத்தாளார்களின் குறைவான பங்களிப்பாகும். இந்த தலைமுறை எழுத்தாளர்களை எடுத்துக்கொண்டால் சுஜாதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்ற வெகு சிலர் மட்டுமே திரையுலகிலும் பங்களித்து வருகிறார்கள். பாலகுமாரனை பொறுத்தவரை அவரது திரையுலக பங்களிப்பு சற்று தீவிரமானதாகவே இருந்தது. நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரான பாலகுமாரன், அதே கால கட்டத்தில் வசந்த் (அப்போது பாலசந்தரின் உதவியாளராக இருந்தார்), பாக்கியராஜ் போன்றவர்களுடனும் நெருக்கமாக இருந்தார்.... Continue Reading →
கார்த்திக் என்றொரு மகா நடிகன்
90 களின் பிற்பகுதியில் தொடர்ச்சியான ஹிட்களை கொடுத்து ரசிகர்களை பரவசப்படுத்தியும், சக நடிகர்களை வயிறெரியவும் பண்ணி கொண்டிருந்தார் ஒரு ஹீரோ. அடுத்தடுத்த ஹிட்களை கொடுத்து விஜய் தன்னை நிலைப்படுத்திக்கொண்டிருந்த, அஜித் ஒரு அங்கீகாரத்துக்காக போராடிக்கொண்டிருந்த, சூர்யா, விக்ரம் இருவரும் சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த, பிரசாந்தின் காற்று ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், காதல் கவிதை என்று சற்று பலமாக வீசிவிட்டு ஓய ஆரம்பித்திருந்த அந்த நாட்களில் மேற்சொன்ன ஹீரோக்களின் பதின்ம வயதுகளிலேயே பிரபல நாயகனாக இருந்த அந்த ஹீரோ... Continue Reading →
தொட்டாச்சிணுங்கி உறவுகள்
“ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்ட ஐஸ்கட்டி உடைய, நட்பு பெருக, வரும் தலைமுறை மீது அக்கறை அதிகமாகும். முன்பைவிட அக்கறையாய், அன்புச் சூழ்நிலையில் அமைதியான இடத்தில் அடுத்த தலைமுறை வளாரும். அந்த தலைமுறையில் கலை இலக்கியமும், அரசியலும், பொருளாதரமும், வாழ்க்கை நிலையும் உயரும்…..” - பாலகுமாரன் அண்மையில் மீண்டும் ஒருமுறை தொட்டா சிணுங்கி திரைப்படத்தை பார்த்தேன். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நல்ல சினேகிதம் மலரலாம், தொடரலாம் என்பதை அழுத்தமாக கூறிய மிகச்சில படங்களில் இதுவும் ஒன்று. மனதோடு மழைக்காலம்... Continue Reading →
கண்ணை கட்டி கோபம்…………
கடந்து போன எமது வாழ்வை வாழ்வின் அமைதியான ஒரு பொழுதில் திரும்பிப் பார்க்கும் போது முதல் காதல், முதல் முத்தம் போல சிறு வயதில் நண்பர்களுடன் கோபித்துக்கொண்டு கதைக்காமல் விட்ட, மீண்டும் கதைக்க தொடங்கிய நினைவுகளும் நெஞ்சில் பச்சை வயலில் பாத அடையாளம் போல மாறாமல் தொடர்கின்றன. சற்று பக்குவப்பட்ட இந்த வயதில் அந்த கோபங்கள் எல்லாம் ஒரு நகைச்சுவைக்கு இடமானதாக இருந்தாலும் எம் மனதை அதே பால்ய மனதாக்கி கொண்டு பார்த்தால், உள்ளொன்று வைத்து புறமொன்று... Continue Reading →
பிள்ளைகள் கூடி பிதாமனுக்கு அஞ்சலி
“நாம் கற்றதெல்லாம் உன்னிடத்தில் பெற்றது நாம் பெற்றதெல்லாம் உன்னை கற்றதால் வந்தது” (எழுத்தாளர் சுஜாதாவின் மறைவை முன்வைத்து கலைஞர் முதல் கையெழுத்து பிரதி எழுத்தாளர்கள் வரை அஞ்சலிகளையும் அவரது படைப்புகள் பற்றிய ஆய்வுகளையும் எழுதி விட்ட நிலையில் அவரது பிறந்ததினமான இன்று (மே 3 1935) என்மீதான சுஜாதவின் பாதிப்புகள் பற்றி). சுஜாதாவின் மறைவை ஒட்டி சில பத்திரிகைகளும் நபர்களும் அவர் ஒரு பைலட், ஒரு விஞ்ஞானி, பல வெற்றிப் படங்களில் பணிபுரிந்தவர் என்றெல்லாம் எழுதிவிட்டு போகிற... Continue Reading →
கலைந்து போகும் காலங்கள்…
அண்மையில் எனது பெரியம்மா கொழும்பு சென்று திரும்பியபோது எனது அம்மா அவவிடம் எனக்காக கொடுத்துவிட்ட பொருட்களில் நான் முக்கியமாக கருதுவது எனது ஒன்பதாம் ஆண்டு விஞ்ஞான பாட கொப்பி. இலங்கையில் க. பொ. த சாதாரண தர (11ம் ஆண்டு) பரீட்சைக்கான பாடத்திட்டம் ஆரம்பிப்பது ஓன்பதாம் ஆண்டில் இருந்து என்பதால் மிகுந்த உற்சாகமாக படிக்க தொடங்கியிருந்தோம். அப்போது நான் வாசித்த ஒரேயொரு ஆங்கில சஞ்சிகையான The Sporststar ன் நடுப்பக்கத்தில் அப்போது star poster என்று விளையாட்டு... Continue Reading →
தாயே உன்னை எப்படி பிரிந்து…
தமிழ் சினிமா புதிய பாதையில் செல்கின்றது என்பதை அண்மையில் வெளியான இரண்டு படங்கள் சிறப்பாக காட்டியுள்ளன. இதில் ஒன்றின் போக்கு பயமுறுத்தி இருக்கின்ற அதே வேளை மற்றைய திரைப்படம் மனதை மயில் இறகால் தடவியது போல சுகமளித்திருக்கின்றது. ஒன்று “இது காதல் வரும் பருவம்” மற்றையது “வெயில்”. தான் இயக்கிய படங்களில் தனது நாயகனை சராசரிக்கு பெரியவனாக காட்டிய ஷங்கரின் ரசனை இன்னும் அவரது கை கூடாத கனவான “அழகிய குயிலே” ஆக தான் இருக்கின்றது என்பதை... Continue Reading →
தொட்டாச்சிணுங்கி உறவுகள்
“ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்ட ஐஸ்கட்டி உடைய, நட்பு பெருக, வரும் தலைமுறை மீது அக்கறை அதிகமாகும். முன்பைவிட அக்கறையாய், அன்புச் சூழ்நிலையில் அமைதியான இடத்தில் அடுத்த தலைமுறை வளாரும். அந்த தலைமுறையில் கலை இலக்கியமும், அரசியலும், பொருளாதரமும், வாழ்க்கை நிலையும் உயரும்…..” - பாலகுமாரன் அண்மையில் மீண்டும் ஒருமுறை தொட்டா சிணுங்கி திரைப்படத்தை பார்த்தேன். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நல்ல சினேகிதம் மலரலாம், தொடரலாம் என்பதை அழுத்தமாக கூறிய மிகச்சில படங்களில் இதுவும் ஒன்று. மனதோடு மழைக்காலம்... Continue Reading →
பாலகுமாரன்: தொழிற்சங்கவாதி (?); எழுத்தாளர்; சித்தர்
அண்மையில் மீண்டும் ஒருமுறை பாலகுமாரன் எழுதிய இரும்புக் குதிரைகள் என்ற புத்தகத்தை வாசித்து முடித்த போது பாலகுமாரன் மீது லேசான கோபம் வந்தது; ஏன் இவர் இப்படியான புத்தகங்களை இப்போது எழுதுவது இல்லை. அதிலும் அந்த குதிரை கவிதைகள்.குதிரைகள் பயணம் செய்யா கூட்டமாய் பறவை போல இலக்குகள் குதிரைக்கில்லை முன்பின்னாய் அலைதல் தவிர… …………………………….. …………………………………. இலக்கில்லா மனிதர் பெரியோர் உள்ளவர் அடைய மாட்டார். என்று அவர் எழுதிய குதிரை கவிதைகள் எமது பதின் வயதுகளில் எம்மிடையே... Continue Reading →