கிரிக்கெட்டின் மூலம் “இலங்கையர்” ஆகுதல் /ஆக்குதல் (அரசியல் கிரிக்கெட் 3)

1996 உலகக் கிண்ணம் தொடங்கியபோது இலங்கை அணி முதலாவது ஆட்டத்திலேயே புத்துணர்ச்சியுடனும் வித்தியாசமான வியூகங்களுடனும் விளையாடியது.  சிம்பாப்வே அணியுடனான முதலாவது போட்டியில் ஆரம்ப ஆட்டக்காரர்கள் இருவரும் பெரிதாக ஓட்டங்கள் எதையும் பெறாதபோதும் இலங்கை அணி இலகுவாக வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு இந்தியாவுடன் இலங்கை மோதியது.  இந்தப் போட்டி இலங்கை அணி, அதற்கு முன்னர் இருந்த இலங்கை அணி அல்ல என்பதை பிரகடனம் செய்த போட்டி போல அமைந்தது என்றே சொல்லவேண்டும்.  அன்றைய காலத்தில் நல்ல ஓட்டங்கள்... Continue Reading →

அரசியல் கிரிக்கெட் பகுதி 2: கிரிக்கெட் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பும் அதன் தாக்கமும்

இந்தியக் கிரிக்கெட் வாரியம் தனியார் தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்புக்கான அனுமதியை விற்கத் தொடங்கியது நேரடித் தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் கிரிக்கெட்டின் பரவலிலும் மிகப் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தியதுடன் கிரிக்கெட் ஒளிபரப்பானது பொருளாதார ரீதியிலும் மிகப்பெரிய அளவில் உதவக்கூடியது என்பதையும் நிரூபிப்பதாக இருந்தது.  இந்தியாவை எடுத்துக்கொண்டால் 1980 வரை கிரிக்கெட் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக கிரிக்கெட் வாரியம் தூர்தர்ஷனுக்கு கட்டணம் செலுத்துகின்ற நிலைமையே இருந்தது.  மெல்ல மெல்ல இந்த நிலைமை மாறி 1992 இல் இடம்பெற்ற இந்தியாவிற்கும்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑