தாயகக் கனவுகள் நூல் வெளியீட்டில் ரகுமான் ஜானின் உரை

“தாயகக் கனவுகள்: பிரதிகளை முன்வைத்து ஓர் உரையாடல்” வெளியீட்டு நிகழ்வு சனிக்கிழமை, ஒக்ரோபர் 08, 2022 அன்று கனடாவின் ஸ்கார்பரோ நகரில் இடம் பெற்றது. நிகழ்வில் ரகுமான் ஜான் அவர்கள் நிகழ்த்திய உரை. https://www.youtube.com/embed/KYmTltv9m6E நன்றி - வடலியின் யூட்யூப் தளம்

போர்க்காலக் கவிஞர்களின் போர்க்காலக் கவிதைகள்

-சிறுகுறிப்பு தமிழ்த் தாய் மன்றம் ஒழுங்கு செய்திருந்த “போர்க்காலக் கவிஞர்களின் போர்க்கால கவிதைகள்” என்கிற இலக்கிய அமர்வொன்று செப்ரம்பர் ஒன்பதாம் திகதி நடைபெற்றது.  தமிழ் முறைத் திருமணம் செய்து வைத்தல், தமிழ்ப் பெயர் உள்ள குழந்தைகளுக்குப் பரிசு வழங்குதல் என்பவற்றில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் தமிழ்த்தாய் மன்றம் ஒழுங்குசெய்திருந்த முதலாவது இலக்கிய நிகழ்வு இது என்று நிகழ்விலேயே குறிப்பிட்டிருந்தார்கள். இந்த நிகழ்வில் அம்புலியின் “மீண்டும் பிறக்கின்றோம்”, கப்ரன் கஸ்தூரியின் “வல்லரசுகள்” மேஜர் பாரதியின் “விடிவிற்காய் எழுவோம்”, வியாசனின் (புதுவை... Continue Reading →

வெற்றிச்செல்வியின் “ஒரு போராளியின் காதலி”

ஒரு போராளியின் காதலி என்கிற இந்த நாவலானது ஈழப்போரின் இறுதிக்கட்டங்களின் நடந்த சம்பவங்களை வைத்து எழுதப்பட்டிருக்கின்றது.  இதனை எழுதிய வெற்றிச்செல்வி மன்னாரில் 1974 இல் பிறந்து 1991 இலேயே விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தன்னை இணைத்து ஈழப்போராட்டத்தில் ஈடுபட்டவர்.  வெடிவிபத்தொன்றில் தனது வலது கண்ணையும் வலது கையையும் இழந்த வெற்றிச்செல்வி தொடர்ந்தும் ஊடகத்துறையில் நிதர்சனம், புலிகளின் குரல், சுதந்திரப் பறவைகள் ஆகியவற்றில் தனது பங்களிப்புகளைத் தொடர்ந்து செய்துள்ளார்.  ஆரம்பத்தில் வலது கைப் பழக்கமுள்ளவராக இருந்தபோதும் பின்னர் இடது கையால்... Continue Reading →

அகாலம் கட்டுரை தொடர்பான புஷ்பராணியின் முகநூல் பதிவிற்கான பதில்

புஷ்பராணி அவர்களுக்கு, அகாலம் குறித்து நான் வாசித்த கட்டுரை தொடர்பான உங்களது கருத்துக்களைப் பகிர்ந்திருந்தீர்கள்.  நன்றி.  அவை தொடர்பாக எனது விளக்கங்கள். அகாலத்தை ஒரு அனுபவப்பிரதியாக எழுதி இருந்தீர்கள்.  எனவே நீங்கள் எவ்விதம் உணருகின்றீர்களோ அல்லது உங்கள் நிலைப்பாடு எவ்விதம் இருக்கின்றதோ அதுவே உங்கள் பிரதியில் பதிவாகும்.  அதே நேரம் அகாலத்தை மட்டுமல்லாமல் ஈழப்போராட்டம் தொடர்பான அனைத்துப் பிரதிகளையும் ஆர்வமுடம் படிப்பதும், அவை பற்றிய உரையாடல்களில் ஈடுபடுவதும் ஒருவிதத்தில் ஈழப்போராட்டம் தொடர்பான case study ஒன்றுக்கான எனது... Continue Reading →

புஷ்பராணியின் “அகாலம்”

ஈழத்தில் மயிலிட்டி என்கிற சிறிய கிராமத்தில் 1950 ல் பிறந்த புஷ்பராணி ஈழவிதலைப் போராட்டம் ஆயுதப்  போராட்டமாக உருவெடுத்தபோது அதில் பங்கெடுத்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்.  தமிழ் இளைஞர் பேரவையிலும், தமிழீழ விடுதலை இயக்கத்திலும் அதன் ஆரம்ப காலம் தொட்டு பங்கெடுத்தவர்.  ஈழப்போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியபோது சிறை சென்ற முதல் பெண்போராளியும் ஆவார்.  அந்த வகையில் புஷ்பராணி எழுதிய அகாலம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக ஓரு பெண் சைக்கிள் ஓடுவதே அதிசயமாகப் பார்க்கப்பட்ட ஒரு காலத்தில்,... Continue Reading →

நாம் தமிழர் கட்சி ஆவணம் : ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளப்போகும் ஆகப்பெரிய சவால்

கட்டுரையை வாசிக்கும் முன்னான சிறுகுறிப்பு : 2012ம் ஆண்டு மேமாதம் அளவில் நாம் தமிழர் கட்சியினர் தமது கட்சியின் அறிக்கையை வெளியிட்டனர்.  இவ் ஆவணத்தில் இருக்கின்ற கருத்திய ரீதியிலான முரண்கள் தொடர்பான விமர்சனங்கள் இணையத்தளங்களில் குறிப்பாக சமூக வலைத் தளங்களில் நடைபெறுகின்றன.  அந்நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் / அமைப்பாளர் சீமான் மற்றும் அவர் அரசியல் குறித்த பல்வேறு விமர்சனங்கள் எனக்கு இருந்தாலும், அவருக்கான ஆதரவான போக்கென்பது என்னுடன் இருந்தே வந்தது.  அந்த அடிப்படையில் நாம்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑