நற்சான்றுப் பத்திரம்

முற்குறிப்பு: இந்தப் பதிவிற்கான தொடக்கமாக https://goo.gl/b5Qtoq என்கிற என் முகநூல் பதிவு அமைந்தது.  இந்தப் பதிவில் Kanaga Sivakumar அவர்கள் இட்டிருந்த பின்னூட்டங்களிற்கான பதில் ஒரே பின்னூட்டமாகப் போட முடியாத அளவில் அமைந்தமையால் அதனைத் தனிப்பதிவாகவே இங்கே பதிவுசெய்கின்றேன். இங்கே பகிரப்பட்டுள்ள காணொலி மறவன்புலவு சச்சிதானந்தின் பேச்சிற்கான எதிர்வினையாகவும், அவருக்கு சரியான பதிலடி என்பதாகக் குறிப்பிட்டும் பகிரப்பட்டிருந்தது.  அவ்வாறு இந்தக் காணொலியைப் பகிர்வதில் இருக்கக் கூடிய அறப்பிறழ்வையும் அபத்தத்தையும் சுட்டிக்காட்டும் முகமாகவே இந்தப் பதிவினை முகநூலில் எழுதினேன்.  அதனடிப்படையில் இந்தப் பேச்சிலே... Continue Reading →

மனுநீதிச் சோழன் யார்? அல்லது எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா?

Good Governance: Who Is Responsible? என்கிற Upali Cooray எழுதிய கட்டுரை ஒன்று கொழும்பு ரெலிலிகிராப் இணைய இதழில் மார்ச் 11, 2015 அன்று வெளியாகியிருந்தது.  அதில் கிமு 205 முதல் கிமு 161 வரை அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்ட எலார (எல்லாளன் என்று தமிழில் நாம் அழைக்கும் மன்னன் மகாவம்சத்தில் எலார என்றே குறிப்பிடப்படுகின்றான்) என்ற சோழ மன்னன் தன் அரண்மனையில் அவனிடம் நீதி வேண்டிவருவோர் ஒலிக்கவிடவேண்டிய மணி ஒன்றினை பேணியதாகவும், மன்னனின் மகன்... Continue Reading →

நமக்கான வரலாற்றை நாமே எழுதுவோம்!

யாழ்ப்பாணத்து நினைவுகள் என்ற பெயரில் கடந்த சில வாரங்களாக நான் எழுதிவந்த சில கட்டுரைகளை, போர் சூழ்ந்த அன்றைய யாழ்ப்பாணத்தில் குறிப்பாக 90க்கும் 96க்கும் இடைப்பட்ட காலப்பகுதிகளில் வாழ்ந்த பதின்மவயதுகளைச் சேர்ந்த ஒருவனின் நினைவுகளின் பதிவுகளாகவே பதிவுசெய்தேன். வெறும் நனவிடைதோய்தலாக மாத்திரமல்லாமல், அன்றைய காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நிலவிய வாழ்வியலின் ஒரு பகுதியை இப்பதிவுகள் பதிவுசெய்திருக்கும் என்பது என் நம்பிக்கை. இதேபோல, இன்னும் பலரும் தம் அனுபவங்களை ஆவணப்படுத்தும்போது அவை மிகப்பெரிய வரலாற்று ஆவணமாக மாறும். உதாரணமாக இக்கட்டுரைகளை... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑