என். செல்வராஜாவின் நமக்கென்றொரு பெட்டகமும் நூலகச் சிந்தனைகளும்

செல்வராஜா அவர்கள் - பெரும்பாலானவர்களுக்கு அறிமுகமானது போல - எனக்கும் நூல் தேட்டம் செல்வராஜா என்றே அறிமுகமானவர்.  புலம்பெயர்ந்து கனடாவிற்கு வந்து நான் புத்தக வாசிப்பிற்கு மீண்டும் திரும்பிக்கொண்டிருந்த காலப்பகுதியில் இலங்கையில் இருந்து வெளிவந்துகொண்டிருக்கும் புத்தகங்களைப் பற்றி அறிந்துகொள்வது என்பதே மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.   இப்பொழுது ரொரன்றோவில் தமிழ்ப் புத்தகக் கடையென்று ஒன்றுதான் இருக்கின்றது.  ஆனால் அந்தக் காலப்பகுதியில் 5 புத்தகக் கடைகள் இருந்தன.  இவற்றைத் தவிர தனிப்பட்ட முயற்சிகளால் புத்தகங்களை எடுத்து விற்பவர்களும் இருந்தனர். ... Continue Reading →

எங்கட புத்தகங்கள் இதழ் குறித்து…

எங்கட புத்தகங்கள் முதலாவது இதழ் வாசித்து முடித்தேன்.  கச்சிதமாக வெளிவந்திருக்கின்றது.  வாசிப்பினையும் வாசிப்புப் பழக்கத்தையும் பரவலாக்கம் செய்யவேண்டும் என்ற நோக்குநிலையுடனான ஒரு செயற்பாட்டு வாதத்தை எங்கட புத்தகங்கள் முன்னெடுத்திருப்பது குறித்து நன்றியும் மகிழ்ச்சியும்.  நாம் எதை நோக்கி வேலை செய்கின்றோமோ அந்த எல்லையை சென்றடைவதற்குத் தேவையான எல்லாக் கருவிகளையும் நாம் கைவசம் கொள்ளவும் கையாளும் பக்குவம் கொள்ளுவதும் அவசியம்.  எங்கட புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியினைத் தொடர்ந்து, எங்கட புத்தகங்கள் இதழும் வெளிவந்திருப்பது அவர்கள் அதனை செவ்வனே உணர்ந்திருக்கின்றார்கள்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑