யாழ்ப்பாணம் அம்பனைப் பிறப்பிடமாகக் கொண்ட எஸ்.கே. விக்னேஸ்வரன் அரசியல், கலை இலக்கியச் செயற்பாடுகள், இதழியல் போன்ற பல்வேறு துறைகளில் ஆழங்காற்பட்டவர். சிறுவயதிலிருந்தே வாசிப்பில் ஆர்வம் காட்டிய எஸ்.கே. விக்னேஸ்வரன், வாசிப்பினூடாக இடதுசாரிக் கருத்தியல் நோக்கி நகர்கின்றார். இலங்கையில் இடதுசாரிக்கட்சிகள் செல்வாக்குடன் இருந்த எழுபதுகளில் மாணவராக அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கிய இவர், தேசிய இனப்பிரச்சனை பிரதான பிரச்சனையாக உருவெடுத்த காலப்பகுதியில் தேசிய இன விடுதலைப் போராட்டத்திலும் நேரடியாக ஈடுபட்டவர். ”ஆயுதப்போராட்டம் தேசிய விடுதலைப் போராட்டத்தை வரலாறாக்கிவிடத்... Continue Reading →
ஓகஸ்ட் 2023 முகநூல் குறிப்புகள்
ஓகஸ்ட் 3, 2023 சீமானும் அவர் பேசும் விடயங்கள் சமூகநீதிக்கு எதிரான, மானுட விரோதமானவையாகவே பல ஆண்டுகளாக இருக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணம் வெளியிடப்பட்டபோது அதில் உள்ள பாசிசக் கருத்துகள் குறித்த உரையாடல்கள் நடந்தன. அவை கீற்று இணையத்தளத்தில் வெளியாகி இருந்தன. பின்னர் ஆழி பதிப்பகம் அவற்றைத் தொகுத்து “எங்கே செல்கிறது நாம் தமிழர் கட்சி” என்ற நூலாக வெளியிட்டும் இருந்தது. நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணம் ஒரு பாசிச அறிக்கை என்பதைக்... Continue Reading →
தாயகக் கனவு நோக்கிய ஒரு மாற்றத்துக்கான குரல்! – எஸ்.கே. விக்னேஸ்வரன்
2013 இல் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து வந்தபோது, இனி நான் வாழப்போகிற இந்த நாடு எப்படிப்பட்டது, இங்குள்ள மக்கள் என்ன செய்கிறார்கள், இலங்கையிலிருந்து இங்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பவை பற்றிய எத்தகைய ஒரு விரிவான புரிதலும் என்னிடம் இருக்கவில்லை. தாயகம் பத்திரிகை, தாய்வீடு இதழ், காலம் சஞ்சிகை என்ற இந்த மூன்றையும் தவிர கனடாவில் இருந்து வெளிவரும் வேறெந்த இதழ்களையும் நான் அறிந்திருக்கவில்லை. மனவெளி நாடகக் குழுபற்றி அறிந்திருந்தேன்; தேடகம் அமைப்புப்... Continue Reading →