ஓவியர் / வரைகலை நிபுணர் / புகைப்படக் கலைஞர் கருணாவுடனான உரையாடல்

//ஈழத்தின் தனித்துவமான ஓவியர்களில் ஒருவரும் வளமான ஓவியர்கள் பலருக்கு ஓவியக்கலையைப் பயிற்றுவித்தவருமான மாற்கு அவர்களின் மாணவர்களில் கருணாவும் ஒருவர்.  இவரது சொந்தப் பெயர் இயூஜின் வின்சென்ற் என்பதாகும்.  தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கனடாவுக்கு வந்த கருணா, கனடாவிலும் வரைகலை தொடர்பான தொழினுட்பங்கள் சிலவற்றை முறையாகக் கற்றுக்கொண்டார்.  1992/93 காலப்பகுதிகளில் இருந்து டிஜிற்றல் முறையில் ஓவியங்களை வரைந்துவருகின்ற கருணாவே, ஈழத்தமிழர்களில் டிஜிற்றல் முறைகளில் ஓவியங்களை முதன்முதலில் வரைய ஆரம்பித்தவருமாவார்.  புலம்பெயர் நாடுகளில் இருந்து வெளிவந்த, வெளிவந்துகொண்டிருக்கின்ற இதழ்கள், மலர்கள், சிற்றிதழ்கள்... Continue Reading →

கருணாவின் ஓவியக் கண்காட்சி

ஈழத்தின் வடபகுதியில் இருக்கின்ற கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்போது கனடாவில் வசித்துவருகின்ற கருணாவின் ஓவியக் கண்காட்சி ஜனவரி மாதம் 14 ஆம், 15 ஆம் திகதிகளில் மார்க்கம் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.  சமகாலத்தின் முக்கியமான ஓவியர்களில் ஒருவரும், வரைகலை நிபுணரும், புகைப்படக் கலைஞருமான கருணா அதற்கும் அப்பால் இதழ்கள், நாடகங்கள், அரங்க நிர்மாணம், இலக்கியம் என்று கலையின் பல்வேறு பரிமாணங்களிலும் முக்கிய பங்களிப்புகளை வழங்குகின்ற ஆளுமையும் ஆவார்.  கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி கனடாவில்... Continue Reading →

காலச்சுவடு: கருணா பற்றிய கட்டுரைக்கு ஒரு எதிர்வினை

தொடர்ச்சியாக திணிக்கப்பட்ட ஒரு கட்டாய ஓய்வுக்குப் பின்னர், ஒரு முழு மூச்சுடன் வாசிப்பில நான் இறங்கியபோது தீவிர இலக்கிய இதழ்கள் மீது பெரும் காதலுடன் தான் அவற்றை அணுகினேன். தொடர்ச்சியான வாசகர் ஆதரிப்பில் தமிழில் ஓரளவு நிலைத்துவிட்ட தீவிர இலக்கிய இதழ்கள் என்ற நிலையை காலச்சுவடு, உயிர்மை இதழ்கள் அடைந்திருந்தாலும் காலச்சுவடை என்னளவில் ஒரு மாற்றாந்தாய் மனப்பாங்குடனேயே அணுக முடிந்தது. இதற்கு நான் வாசிப்பில் இறங்கிய அந்த நாட்களில் கண்ணன் தலைமையில் காலச்சுவடு செய்த சில இலக்கியத்துக்கு... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑