//ஈழத்தின் தனித்துவமான ஓவியர்களில் ஒருவரும் வளமான ஓவியர்கள் பலருக்கு ஓவியக்கலையைப் பயிற்றுவித்தவருமான மாற்கு அவர்களின் மாணவர்களில் கருணாவும் ஒருவர். இவரது சொந்தப் பெயர் இயூஜின் வின்சென்ற் என்பதாகும். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கனடாவுக்கு வந்த கருணா, கனடாவிலும் வரைகலை தொடர்பான தொழினுட்பங்கள் சிலவற்றை முறையாகக் கற்றுக்கொண்டார். 1992/93 காலப்பகுதிகளில் இருந்து டிஜிற்றல் முறையில் ஓவியங்களை வரைந்துவருகின்ற கருணாவே, ஈழத்தமிழர்களில் டிஜிற்றல் முறைகளில் ஓவியங்களை முதன்முதலில் வரைய ஆரம்பித்தவருமாவார். புலம்பெயர் நாடுகளில் இருந்து வெளிவந்த, வெளிவந்துகொண்டிருக்கின்ற இதழ்கள், மலர்கள், சிற்றிதழ்கள் மற்றும் இதர பிரசுரங்கள் பலவற்றில் கருணாவின் கணிசமான பங்களிப்பும் நிறைந்திருக்கும். ஒரு தேர்ந்த வாசகருமாகவும் தொடர்ச்சியான தேடல்களில் ஈடுபடுபவருமாக கருணா இருப்பதனால் அவரது படைப்புகள் எப்போதும் உயிரோட்டம் கொண்டனவாக இருக்கின்றன.//
என்கிற குறிப்பொன்றினை கருணாவின் ஓவியக் கண்காட்சி பற்றி எழுதிய முன்னைய குறிப்பொன்றில் பகிர்ந்திருந்தேன். அதனை https://goo.gl/b6Kkcu என்கிற இணைப்பில் வாசிக்கலாம். இவ்வாரம் ரொரன்றோவில் இயங்குகின்ற ரிவிஐ தொலைக்காட்சி கருணாவின் நேர்காணல் ஒன்றினை ஒளிபரப்பியிருந்தது. அதன் காணொலித் துண்டினை இத்துடன் பகிர்கின்றேன்.
Thank you for sharing.
Sabes Sugunasabesan
LikeLike