அறமுற்றுகை குறும்படமும் ஏமாற்றத்தின் சுவடுகளும்

மயன் காந்தன் எழுதி இயக்கிய அறமுற்றுகை என்கிற குறும்படத்தினை சென்ற டிசம்பர் மத்தியில், அந்தக் குறும்படத்தின் இணைத் தயாரிப்பாளர்களான Master screen Jaffna தமது உத்தியோக பூர்வமான யூ ட்யூப் தளத்தில் பதிவேற்றியபோதே பார்த்திருந்தேன்.  ஈழத்துத் திரைக்கலைஞர்களில் எனது விருப்பத்துக்குரியவரான மதி சுதா நடித்திருந்த குறும்படம் என்பதனை முகநூல் ஊடாகத் தெரிந்துகொண்டதால் இந்தக் குறும்படத்தினை ஆவலுடன் பார்த்தேன் என்றே சொல்லவேண்டும். குறிப்பாக மதி சுதா, ஈழத்துத் திரைப்படங்கள் என்பதை பிரக்ஞையுடன் அணுகி அதில் தொடர்ந்து ஈடுபடுபவர்.  தான்... Continue Reading →

UN LOCK குறும்படம் திரையிடல்

Toronto Reel Asia International Film Festival இல் திரையிட தெரிவான Unlock குறும்படத்தின் இயக்குனர் நிரு நடராஜா மேற்படி திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக ரொரன்றோ வந்திருந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் அக்குறும்படத்தினைப் பார்க்கும் வாய்ப்பும் கிட்டியது. Unlock அவரது முதலாவது திரைப்பட முயற்சி என்றபோதும் திரைத்துறையில் அவரது பங்கேற்பு ஏற்கனவே இருந்திருக்கின்றது.  மூங்கில் நிலா என்கிற ஒரு இசைத் தொகுப்பினை 2000 ஆம் ஆண்டளவில் வெளியிட்டிருந்த நிரு, பின்னர் கலாபக் காதலன், ராமேஸ்வரம் ஆகிய தென்னிந்தியத்... Continue Reading →

Happy Together திரைப்பட அறிமுகம்

In the mood for love திரைப்படத்தின் இயக்குனர் என்றே எனக்கு அறிமுகமான Wong Kar-wai, அதற்கு முன்னதாகவே இயக்கிய முக்கியமான திரைப்படமான Happy Together 1997 இல் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றது.  1997 ஆம் ஆண்டுக்குரிய கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விருதை வொங் கார்-வைக்குப் பெற்றுத்தந்த  இத்திரைப்படத்தில் பிரதான பாத்திரத்தில் Tony Leung Chiu-wai, Leslie Cheung, Chang Chen ஆகியோர்  நடித்திருக்கின்றார்கள்.  ஹொங்கொங்கில் இருந்து ஆஜெந்தீனாவிற்குப் புலம்பெயர்ந்திருக்கின்ற ஆண் இணைகளான... Continue Reading →

நியோகா : சில பகிர்தல்கள்

ஏப்ரல் இரண்டாம் திகதி கனடாவுக்கான நியோகா திரைப்படத்தின் முதலாவது திரையிடலில் கலந்துகொள்ளும் வாய்ப்புக்கிடைத்தது.  இத்திரைப்படம் கனடாவில் வாழும் எழுத்தாளரும் நாடகரும் குறும்பட இயக்குனருமான சுமதி பலராமின் முதலாவது முழுநீளத் திரைப்படமாகும்.  பெரும்பாலும் கனடாவிலேயே படப்பிடிப்பு நடந்த இத்திரைப்படத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்களும்  தொழினுட்பக் கலைஞர்களும் கனடாவைச் சேர்ந்தவர்கள்.  ஆயினும் இத்திரைப்படம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற  சர்வதேசதிரைப்பட விழாவிலும், இத்தாலி லுமினியர் திரைப்பட விழாவிலும், லொஸ் ஏஞ்சல்ஸில் இடம்பெற்ற திரைப்படவிழாவிலும், யகார்த்தாவில் இடம்பெற்ற பெண்கள் திரைப்பட விழாவிலும் ஆக வெவ்வேறு... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑