வாழிடத்தைக் காக்கும் வெஞ்சினம் கொண்ட குருவி

தமிழின் முக்கியமான கதைசொல்லிகளில் ஒருவரான தேவகாந்தன் தனித்துவமான மொழியாலும், தேர்வுசெய்யும் வித்தியாசமான களங்களாலும், தனது புனைவுகளூடாக சம்பவங்களையும் கருத்தியலையும் ஊடுநூலும் பாவுநூலுமாய்க் கலந்துபின்னும் ஆற்றலாலும் அறியப்பட்டவர்.  காவியங்கள் மீதான அவரது தாடனத்தையும் அவற்றை ஈடுபாட்டோடு கற்றுத் தெளிவதற்கான அவரது முனைப்புகளையும் அவருடனான உரையாடல்களின் வழியே அறிந்திருக்கின்றேன்.  கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக எழுதிவரும் தேவகாந்தன், மிகுந்த தேடலுடன் தொடர்ச்சியாக தத்துவங்களையும், கோட்பாடுகளையும், அபுனைவு நூல்களையும் தொடர்ந்து தேடித்தேடி வாசித்தும் வருபவர்.  தேவகாந்தன் எழுதி இதுவரை 12... Continue Reading →

தேவகாந்தனின் எதிர்க்குரல்கள் பற்றிய உரை

இலக்கிய வெளி அமைப்பினர் ஒழுங்குசெய்த தேவகாந்தனின் நான்கு நூல்களின் விமர்சன அரங்கு நவம்பர் 28, 2021 அன்று சூம் தளத்தினுடாக இடம்பெற்றது. சு. குணேஸ்வரனின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் எதிர்க்குரல்கள் என்கிற நூல்குறித்து நான் ஆற்றிய உரையின் காணொலி வடிவினை இலக்கியவெளியின் யூட்யூப் பக்கத்தில் இருந்து பகிர்ந்துகொள்கின்றேன். நிகழ்வில் “லவ் இன் த டைம் ஒஃப் கொரனாவும் சில கதைகளும்” நூல் குறித்து உடுவில் அரவிந்தனும், ”திகம்பர நினைவுகள்” குறித்து வேல்கண்ணனும் ”காற்று மரங்களை அசைக்கிறது” நூல்... Continue Reading →

கதாகாலம்: மகாபாரத மறுவாசிப்பு

  அரசர்களும் ராஜ்யங்களும் நிறைந்த அரச கதைகள் கேட்பதென்பது எல்லாருக்கும் சிறு வயதில் பிடித்தமானதொன்றே.  எனக்கும் என் பத்தாவது வயதில் ஏற்பட்டிருந்த இந்த மோகத்துக்கு அம்புலிமாமாவும் அதில் வெளியாகி வந்த அரசகதைகளும் தீனியிட்டு வளர்த்துவந்தன.   அதே நேரம் எமக்குப் பாடமாக இருந்த வரலாறும் அதனை சுவாரஸ்யமாக கற்றுத்தந்த ஆசிரியர்களான சண்முகராஜாவும், கோபியும் கூட வரலாற்றுப் புதினங்களை வாசிப்பதில் பெரும் ஆவலை தூண்டியிருந்தார்கள்.   இதன் தொடர்ச்சியாக அப்போது ஏதோ வெறி பிடித்ததுபோல பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், வேங்கையின் மைந்தன்,... Continue Reading →

தேவகாந்தனின் கனவுச்சிறை : அறிமுக உரை

ஈழத்துப் படைப்பாளிகளில் மிக நீண்டகாலமாகவும், தொடர்ச்சியாகவும் இயங்கிக்கொண்டிருப்பவர்கள் அரிது.  மிக அருமையான படைப்பிலக்கியங்களை ஆக்கிய பலர் இள வயதிலேயே மரணித்துள்ளார்கள்.  இன்னும் பலர் மிகச் சில படைப்புகளுடன் தம் எழுத்துகளை மட்டுப்படுத்திக்கொண்டுவிட்டார்கள்.  இந்த நிலையில், நீண்டகாலமாகவும், தொடர்ச்சியாகவும் எழுதிக்கொண்டிருக்கின்ற காத்திரமான படைப்பாளிகளுள் ஒருவர் தேவகாந்தன். “எங்கள் குடும்பம் அடிஅடியாக தமிழ்ப் புலவர் பரம்பரையில் வந்தது என்று என் தாயார் சொல்லக் கேட்டிருக்கிறேன்” என்று மின்னம்பலத்துக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தேவகாந்தன் குறிப்பிட்டிருக்கின்றார்.  தனது எழுத்துலகப் பிரவேசம் குறித்த... Continue Reading →

மகாபாரதக் கதையின் அரசியல் என்ன?

மகாபாரதக் கதையின் அரசியல் என்ன என்கிற கேள்வியொன்றினை அண்மையில் முகநூலில் மீராபாரதி அவர்கள் எழுப்பி இருந்தார்.  மகாபாரதம் சிறுவயது முதலே எனக்கு மிகவும் பிடித்த காவியம்.  இராமாயணத்தைவிடவும் கூட.  அதிலும் குறிப்பாக நான் யாழ்ப்பாணத்தில் இருந்த 1990 – 96 வரையான காலப்பகுதியில் அனேகமான ஆலயங்களில் திருவிழாக்காலங்களில் கம்பராமாயண சொற்பொழிவு தொடர்ச்சியாக நடைபெற்றுவந்தது.  பெரும்பாலும் கம்பன் கழகத்தைச் சேர்ந்தவர்களாலும், சில தனிப்பட்டவர்களாலும் இச்சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன.  ஆயினும், மகாபாரதம் போல இராமாயணம் ஒருபோதும் நெருக்கமானதாக இருந்ததில்லை.   மகாபாரதம்... Continue Reading →

தற்பாலினர் குறித்து தேவகாந்தன் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை – அருண்மொழிவர்மன்

முன்பொரு முறை அ. மார்க்ஸ் பற்றி எழுதிய கட்டுரை ஒன்றில்  “ஒருவர் ஓரிடத்தில் சரியான அல்லது தெளிவான பார்வையுடன் இருக்கிறார் என்றால் அவர் எல்லா இடத்தும் அப்படி இருக்கவேண்டும் என்பது இல்லை. எழுத்தாளர்கள் உள்ளிட்ட நிறைய ஆளுமைகளை அணுகும்போது இதே கருத்துடன் அணுகுவதே எனது வழக்கம்” என்று குறிப்பிடிருந்தேன்.  துரதிஸ்டவசமாக இதே மேற்கோளை எனக்கு அதிகம் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான தேவகாந்தனுடனும் இணைத்துப் பார்க்கவேண்டிய நிலையை அடைந்துள்ளேன்.  கனடாவில் இருந்து வெளிவருகின்ற “தாய்வீடு” என்கிற பத்திரிகையில் தேவகாந்தன்... Continue Reading →

விதிக்கப்பட்ட வாழ்க்கையும் வீழ்ந்து சென்ற நம்பிக்கைகளும் – தேவகாந்தனின் விதி நாவல் பற்றிய சில அனுபவங்கள்

விதி என்றால் விதிக்கப்பட்டது என்று எமக்கும் பத்தாம் ஆண்டில் படிப்பிக்கப்பட்டிருக்கின்றது. அதே பத்தாம் ஆண்டில் தான் 'நாடென்ப நாடா வளத்த, நாடல்ல நாட வளம் தரும் நாடு' என்பதும் படிப்பிக்கப்பட்டிருந்தது.  ஆனால் தேவகாந்தன் தனது விதி நாவலில், நாடியும் வளம் தந்து விடாத நாடொன்றில் பிறந்து வளர்ந்தவர்களின் கதையைச் சொல்லுவதன் மூலம் புதிய விதி பற்றிச் சொல்லுகின்றார். "ஒரு காலத்தில கடவுளால படைக்கப்பட்டது விதி என்ற ஒரு கருத்து இருந்தது.  பிறகு ஒவ்வொருவரும் தாங்கள் தாங்கள் செய்கிற... Continue Reading →

அத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்

அரசர்களும் ராஜ்யங்களும் நிறைந்த அரச கதைகள் கேட்பதென்பது எல்லாருக்கும் சிறு வயதில் பிடித்தமானதொன்றே. எனக்கும் என் பத்தாவது வயதில் ஏற்பட்டிருந்த இந்த மோகத்துக்கு அம்புலிமாமாவும் அதில் வெளியாகி வந்த அரச கதைகளும் பெருந்துணை செய்தன. அதே நேரம் எமக்கும் பாடமாக இருந்த வரலாறும் அதனை சுவாரஸ்யமாக கற்றுத்தந்த ஆசிரியர்கள் சண்முகராஜாவும், கோபியும் வரலாற்றுப் புதினங்களை வாசிப்பதில் பெரும் ஆவலை தூண்டியிருந்தார்கள். இதன் தொடர்ச்சியாக அப்போது ஏதோ வெறி பிடித்ததுபோல பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், வேங்கையின் மைந்தன்,... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑