ஈழத்தில் பரவும் இந்திய ஆதிக்கம்

அவருக்கு கிட்டத்தட்ட 70 வயது இருக்கும். நான் வேலை செய்யும் அதே நிறுவனத்தில் இன்னொரு பிரிவில் வேலை செய்பவர்.  அவ்வப்பொழுது காணும்போதெல்லாம் நலம் விசாரிப்புகளுடனும், காலநிலை குறித்து முறைப்பாடுகளுடனும், அண்மைக்காலமாக கொரனா குறித்த ஏதாவது ஒரு சில வார்த்தைகளுடனும் கடந்துபோவார்.  இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரைக் கண்டபோது அவர் உற்சாகமான மனநிலையுடனும் மலர்ந்த முகத்துடனும் இருக்கின்றார் என்பதை கொரனாக் காலத்துக்காக அணிந்திருக்கின்ற முகவுறையூடாகவும் கண்டுகொண்டேன்.  தம்பி, எங்களுக்கு ஒரு விடிவு வந்திட்டுதுபோல இருக்கு என்றார்; என்ன கொரனாவுக்கு... Continue Reading →

ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு

பண்பாட்டுப் படையெடுப்பு என்பது பற்றிப் பலதடவைகள் வெவ்வேறு இடங்களில் பேசியிருக்கின்றோம் என்றாலும் இப்போதையை சூழலில் இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு என்றால் என்னவென்பதைப் பற்றி நாங்கள் சற்று ஆழமாக யோசிக்க வேண்டி இருக்கின்றது.  நாங்கள் ஒருபோதும் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு அந்தப் பண்பாட்டுப் படையெடுப்பின் தாக்கங்களும் அதன் விளைவுகளும் புலம்பெயர் நாடுகளிலும் ஈழத்திலும் தீவிரடைந்து இருப்பதை அண்மைக் காலங்களில் நிகழும் சம்பவங்கள் ஊடாக நம்மால் உணர்ந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. பொதுவாக படையெடுப்பு என்கிறபோது அதை போர் சம்பந்தமாகவும் ராணுவத்துடன்... Continue Reading →

ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு

ரகரொன்றோவில் இடம்பெற்ற 48வது இலக்கியச் சந்திப்பின் இரண்டாம் நாள் நிகழ்வின் நான்காவது அமர்வு ஈழத்தின் சமகாலப் பிரச்சினைகள் என்கிற தலைப்பில் இடம்பெற்றது.  எஸ்.கே. விக்னேஸ்வரன் அவர்கள் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வில் ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு என்கிற தலைப்பில் ஆற்றிய உரையின் காணொலி.  

Website Powered by WordPress.com.

Up ↑