டானியல் அன்ரனி: சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள் பற்றிய எனது உரையின் காணொலி

ஏப்ரல் 20, 2024 அன்று Zoom ஊடாக இலக்கியவெளி ஒருங்கிணைத்திருந்த இணையவெளி கலந்துரையாடல் 37இல் டானியல் அன்ரனி: சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள் நூல் பற்றிய எனது உரையின் காணொலிவடிவம். https://www.youtube.com/embed/C98rbo4cog8?si=CtwbAx240Erir412 நன்றி - இலக்கியவெளி

விதை குழுமம் தொடர்பான குற்றச்சாற்றுகளும் எனது நிலைப்பாடும்

விதை குழுமம் தொடர்பாகவும் அதன் செயற்பாட்டாளர்கள் சிலர் தொடர்பாகவும் பாலியல் சுரண்டல், நிதி மோசடி உள்ளிட்ட குற்றச்சாற்றுகள் பெப்ரவரி, 2024  இறுதியில் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டிருந்தன.  விதை குழுமத்திலும் அதன் அமைப்புகளான புதிய சொல், கூட்டு வேலைத்திட்டமான தொன்ம யாத்திரை ஆகியவற்றில் அங்கம் வகித்தவன் என்றவகையிலும் அவை சார்பாக பலருடன் உரையாடியவன், கூட்டு வேலைகளை முன்னெடுத்தவன் என்றவகையிலும் இவற்றுக்குப் பதில் சொல்லவும் பொறுப்புக் கூறவும் நான் கடமைப்பட்டுள்ளவன் என நினைக்கிறேன்.   விதை குழுமத்தைச் சேர்ந்தவர்களுடன் 2015 தொடக்கம் முதலே எனக்குத் தொடர்புகள் இருந்தபோதும் அமைப்புரீதியாக விதை குழுமத்தில் இணைந்து... Continue Reading →

ஒக்ரோபர் 2023 முகநூல் குறிப்புகள்

ஒக்ரோபர் 16, 2023 பலஸ்தீனத்தில் தற்போது நடந்துகொண்டிருக்கின்ற இனப்படுகொலை பற்றிய வரலாற்றுப் பின்னணியை சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்தச் சந்திப்பில் மீநிலங்கோ வெளிப்படுத்துகின்றார். பார்க்கவேண்டியதோர் காணொலி.  பலஸ்தீனத்தில் இந்தச் சந்திப்பில்  மீநிலங்கோ இரண்டு புத்தகங்களைப் பரிந்துரைத்திருப்பார்.  அதுபோல சில ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர் பிரகாஷ் வெங்கடேசன் புத்தகமொன்றினை எனக்குப் பரிசாகக் கொடுத்தனுப்பியிருந்தார்.  மூன்று புத்தகங்களையும் ஆர்வமுள்ளவர்களுக்காக இங்கே பகிர்ந்துகொள்கின்றேன். https://www.youtube.com/watch?v=MxMOTkzgqX4&si=VaAeLUaym2NVtGNN&fbclid=IwAR1INog1zHZzruY98JrG_dFdSvromOAKGHr81Bexq9O34WucYHuPkzuDJwM ஒக்ரோபர் 21, 2023 தமிழ் இலக்கியத்தில் அறம் என்கிற தலைப்பிலான ஜெயமோகனின் உரை ஒன்று தமிழ் இலக்கியத்... Continue Reading →

செப்ரம்பர் 2023 முகநூல் குறிப்புகள்

செப்ரம்பர் 12, 2023 பாரதி இறப்புக் குறித்து… பாரதியார் செப்ரம்பர் 12, 1921 அன்று அதிகாலை 1 மணிக்கு இறந்தார், இதனை செப்ரம்பர் 11 என்று குறிப்பிட்டுவருகின்றார்கள். உண்மையில் பாரதியார் இறந்தது செப்ரம்பர் 12, 1921 என்பதே சரியானது.  அதுமட்டுமல்ல, பாரதியார் யானையால் தாக்கப்பட்டு அதிலிருந்து மீளமுடியாமல் விரைவில் இறந்தார் என்றும், அவர் யானையால் தாக்கப்பட்டது ஜூன் 1921 என்பதால் யானையால் தாக்கப்பட்டு 3 மாதங்களின் பின்னர் இறந்தார் என்றும் இருவிதக் கருத்துகளே தொடர்ந்தும் கூறப்பட்டு வந்தது. ... Continue Reading →

ஓகஸ்ட் 2023 முகநூல் குறிப்புகள்

ஓகஸ்ட் 3, 2023 சீமானும் அவர் பேசும் விடயங்கள் சமூகநீதிக்கு எதிரான, மானுட விரோதமானவையாகவே பல ஆண்டுகளாக இருக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணம் வெளியிடப்பட்டபோது அதில் உள்ள பாசிசக் கருத்துகள் குறித்த உரையாடல்கள் நடந்தன. அவை கீற்று இணையத்தளத்தில் வெளியாகி இருந்தன. பின்னர் ஆழி பதிப்பகம் அவற்றைத் தொகுத்து “எங்கே செல்கிறது நாம் தமிழர் கட்சி” என்ற நூலாக வெளியிட்டும் இருந்தது. நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணம் ஒரு பாசிச அறிக்கை என்பதைக்... Continue Reading →

வயல் மாதா முகநூல் உரையாடலின் பதிவு

“வயல் மாதா” சிறுகதைத் தொகுப்பிற்கான எதிர்ப்புகள் குறித்து நான் பதிவுசெய்த கருத்து பின்வருமாறு; “வயல் மாதா” சிறுகதைத் தொகுப்பிற்கான எதிர்ப்புகளை எழுத்தாளரின் படைப்புச் சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல் என்கிற வகையிலேயே பலரும் அணுகியிருந்தார்கள்.  தற்போது, அதிலுள்ள வயல் மாதா கதை, அந்தக் கதையை எழுதிய எழுத்தாளரின் ஊரில் நடந்த விடயத்தை, அதில் சம்பந்தப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களை அடையாளங்காணக்கூடிய விதத்திலேயே எழுதப்பட்டிருக்கின்றது என்று தெரிகின்றது.  இந்த இடத்தில் எழுத்தாளரின் பொறுப்புணர்வு பற்றியே நாம் பேசவேண்டி இருக்கின்றது.  மானுட நேயத்தையும் பாதிக்கப்பட்டவர்கள் மீதான... Continue Reading →

பெரியார் தாத்தா நூல் அறிமுகம்

தமிழ் ஸ்டூடியோ அருணின் செயற்பாடுகளை மிக நீண்டகாலமாக ஆர்வத்துடன் பார்த்துவருகின்றேன்.  பேசாமொழி என்கிற இணைய இதழ், Pure Cinema என்கிற புத்தக விற்பனைக்கான இணையத்தளம், படச்சுருள் என்கிற திரைப்படம் குறித்த சிற்றிதழ், திரைப்பட திரையிடல்கள், திரைப்படம் குறித்தும், திரை ஆளுமைகளுடனும் உரையாடல்கள் என்று பல்வேறு வேலைத்திட்டங்களின் மூலமாக தனது நோக்குகளை நோக்கிய பயணத்தைத் தளர்வில்லாமல் முன்னெடுப்பவர் அவர்.  அந்தப் பயணத்தினதும் அவரது வேலைத் திட்டத்தினதும் தொடர்ச்சியாகவே அவர் எழுதி “மகிழ்” வெளியீடாக வந்துள்ள பெரியார் தாத்தா என்கிற... Continue Reading →

அன்று வந்ததும் அதே நிலா; இன்று வந்ததும் அதே நிலா

தனது சமீபத்திய அமெரிக்கப் பயணத்தின் பின்னர் வழமையான தெனாவெட்டுடன் ஜெயமோகன் எழுதியிருக்கும் கட்டுரைகள் தொடர்பாக பி.கே. சிவகுமார் எழுதிய “ஓர் அமெரிக்கத் தமிழனின் சிந்தனைகள்” என்ற கட்டுரை திண்ணையில் வெளியாகி இருக்கின்றது.  இந்தக் கட்டுரையை வாசித்த போது, 2011 இல் கனடாவிற்கு வந்திருந்த ஜெயமோகன் ரொரன்ரோவில் இடம்பெற்ற குறும்பட விழாவில் கலந்துகொண்ட பின்னர் அவரது உரையில் கனடாவுக்கு சிறுவயதில் வந்து இங்கேயே படித்த இளைஞர்களை நோக்கி நீங்கள் ஜானகிராமனை படித்திருக்கின்றீர்களா என்று கேட்டு தி. ஜானகிராமன் உட்படச்... Continue Reading →

பெரியாரின் திருக்குறள் குறித்த கருத்துகள் தொடர்பாக

பெரியாருடைய எழுத்துகள், பேச்சுகள், செயற்பாடுகள் சுயமரியாதை என்பதை நோக்கியதாகவே இருந்தன. அந்த வகையில் மொழி குறித்த பெரியாரின் கருத்துகள் பெருமிதத்தாலோ, வெறுப்பினாலோ எழுந்தவை அல்ல; அவை சுயமரியாதையை நோக்கிய அவரது பயணத்தில் குறித்த காலகட்டங்களில் மொழி, இலக்கியம், பழந்தமிழ் நூல்கள் என்பனவும் அவற்றை எழுதியோரும் தாங்கி நிற்கும் கருத்துகள் மக்களின் சுயமரியாதை உணர்வில் எவ்விதத் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்கிற வகையிலான விமர்சனங்களே. தமிழ்மொழி மீது இந்தி, சமஸ்கிருதம் என்பன திணிக்கப்பட்டபோது மொழியை உரிமை என்கிற வகையில் பிரக்ஞைபூர்வமாக... Continue Reading →

ஈழப்போராட்டம் குறித்த பிரச்சனைகள்

ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு அரசியல் பிரச்சனைகள், ஈழப்போராட்டத்தின் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனைகள், ஈழப்போராட்டத்தின் மூலோபாய தந்திரோபாய பிரச்சனைகள் என்கிற மூன்று நூல்களைக் கொண்ட நூற்தொகுதி ரகுமான் ஜான் அவர்கள் தொகுத்து, வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது.  இந்த நூல்களுக்குள் நுழையமுன்னர் நூலின் தொகுப்பாசிரியர் ரகுமான் ஜான் குறித்து இந்நூலிலேயே தரப்பட்டுள்ள அறிமுகத்தைப் பார்ப்போம், ரகுமான் ஜான் தமிழீழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவர், ஈழப்போராட்டத்தை அதன் குறுகிய எல்லைகளைக் கடந்து ஒடுக்கப்பட்ட மக்கள் தரப்பில் அரசியல் தலையீடு செய்யவேண்டும் என்பதில் தீவிரமாக... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑