கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்னர், 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஶ்ரீஸ்கந்தன் அவர்கள் எழுதிய “மனசுலாவிய வானம்”, அரியாலையூர் நாடக ஆளுமைகள் ஆகிய இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா கனடாவில் இடம்பெற்றிருந்தது. அதில் வெளியிடப்பட்ட “மனசுலாவிய வானம்” இன்றும் எனக்கு மிகப்பிடித்த புத்தகங்களில் ஒன்றாக இருக்கின்றது. அதற்கான முக்கிய காரணமாக, அந்த நூலில் தனது நினைவுகளைப் பதிவுசெய்வதன் மூலம், அன்றைய வாழ்க்கையை, நிலவிய பண்பாட்டை, வரலாற்றை ஸ்ரீஸ்கந்தன் பதிவுசெய்திருப்பார். அதுபோலவே ”அரியாலையூர் நாடக ஆளுமைகள்” நூலும் கூட,... Continue Reading →
ஶ்ரீஸ்கந்தனின் இரண்டு நூல்கள் : அரியாலை ஊரை ஆவணப்படுத்தும் முயற்சிகள்
சென்ற கோடைகாலத்தின் தொடக்கத்தில் ஸ்ரீஸ்கந்தன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது பல்வேறு சஞ்சிகைகளிலும், இதழ்களிலும் தொடர்ச்சியாக தான் எழுதிய கட்டுரைகளில் இருந்து தேர்ந்தெடுத்த சில கட்டுரைகளை அரியாலையூர் நாடகக் கலைஞர்கள் பற்றிய ஒரு தொகுப்பாகவும், தனது அனுபவங்களை, நினைவுப்பதிவுகளை, அவரே சொன்ன வார்த்தையையில் குறிப்பிட்டால் முசுப்பாத்திகளை ஒரு தொகுப்பாகவும் ஆக இரண்டு புத்தகங்களாக்கும் எண்ணம் இருப்பதாகவும் கூறினார். அடடே, நல்ல விஷயம் தானே. அது முக்கியமானதும் கூட என்று எனது ஆர்வத்தை வெளிப்படுத்தி இருந்தேன். நினைவுப்பதிவுகளாகவும், அனுபவப் பகிர்வுகளாகவும், நனவிடை... Continue Reading →