செல்வினின் உரைகளும் அவற்றின் தேவைகளும்

போருக்குப் பிந்தைய காலத்தில் அபிவிருத்தி, மக்கள் நல உதவித்திட்டம், கல்விக்கான உதவி, மக்கள் எதிர்கொள்ளும் சமகாலப் பிரச்சனைகள் குறித்து தொடர்ச்சியாக பல்வேறு கவனப்படுத்தல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.  அவைகுறித்து நேர்மறை / எதிர்மறையான பார்வைகளும் கேள்விகளும் உரையாடல்களுக்கான தேவைகளும் இருக்கின்றன.  ஆயினும் சமூக பொருளாதார அடிப்படையிலான நோக்குகளும் ஆய்வுகளும் பொதுத்தளத்தில் நடப்பது மிகவும் குறைவாகவே இருக்கின்றது.  போருக்குப் பின்னைய காலத்தில் மட்டும்தான் இந்த நிலைமை என்றில்லாமல், அதற்குமுன்னரும் கூட இந்த உரையாடல்கள் பரவலாக்கப்படவில்லை என்றே சொல்லமுடியும்.  உள்ளூர்ப் பொருளாதாரம் பற்றிய... Continue Reading →

தோழமை என்றொரு சொல்: ரொரன்றோவில் இடம்பெற்ற செழியன் நினைவு நாளை முன்வைத்து…

நேற்றுக் கலந்துகொண்ட செழியனின் நினைவு நிகழ்வு பற்றியதாகவே சிந்தனை இருக்கின்றது.  செழியன் என்ற ஆளுமையை ஒட்டுமொத்தமாக எப்படிப் பார்ப்பது? செழியன் எப்படியானவராக இருந்தார்? அவர் சமூகத்துடன் எப்படி உறவாடினார்? செழியன் போன்ற மனிதர்களை இந்த சமூகம் எப்படிக் கையாண்டிருக்கின்றது? என்பதாகச் சிந்தனைகள் செழியன் குறித்தும் இறந்துபோன இன்னும் சில நண்பர்கள், ஆளுமைகள் குறித்ததுமாக மாறி மாறி வந்துபோய்க்கொண்டே இருந்தன.   (1) செழியனின் இறப்பின் பின்னர் பலரும் எழுதிய குறிப்புகள் செழியனின் வீழ்ச்சியையும் தொட்டுச் சென்றனவாகவே இருந்தன. ... Continue Reading →

புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற சங்கங்களும் அமைப்புக்களும் கவனத்திற் கொள்ளவேண்டியவை

- சில கருத்துப் பகிர்வுகள் கனடாவுக்கான ஈழத்தமிழர்களின் வருகை பற்றிய பதிவுகள் 1950களின் நடுப்பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெறுகின்றன.  ஆயினும் ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வானது சடுதியாக அதிகரித்த ஆண்டாக 1983 இனையும் அதற்குரிய பிரதான காரணியாக 1983 இல் பௌத்த சிங்களப் பேரினவாத இலங்கை அரசின் பின்புலத்துடன் இடம்பெற்ற ஆடிக்கலவரத்தையும் குறிப்பிடலாம்.  ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்ற நாடான கனடாவில் தமிழர்கள் அதிகம் வாழ்கின்ற மாகாணங்களாக ஒன்ராரியோவும் கியூபெக்கும் இருக்கின்றன.  1983 வரை சில நூறுகளிலேயே தமிழர்களின் சனத்தொகை... Continue Reading →

லண்டன்காரர்: அறிமுக உரை

ஈழத்து இலக்கியம், ஈழத்தவர் அடையாளம், அவர்கள் வாழ்வியல் பற்றிய கேள்விகளும் உரையாடல்களும் பெருமளவில் அண்மைக்காலமாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.  அண்மைக்காலமாக ஈழத்தவர்களது நாவல்களாகவும், குறுநாவல்களாகவும் பல்வேறு வெளியீடுகளையும் வாசிக்கக் கிடைத்திருக்கின்றது.  இவற்றின் பொதுத்தன்மையை எடுத்துக்கொண்டால் இவற்றில் பெரும்பாலனவை ஈழப்போரின் பிந்தைய காலகட்டங்களில் வெளியானவை, ஓரளவு சுய அனுபவக் குறிப்புகளை உள்வாங்கியவை.  அது தவறானதும் அல்ல.  கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியான அரசியல் குழப்பங்களும், இடது சாரிய புரட்சிகர நடவடிக்கைகளிற்கான முயற்சிகளும், சாதி ஒழிப்பு உள்ளிட்ட சமூகப் போராட்டங்களும் 30... Continue Reading →

“தமிழரின் வாழ்வியற்கலையே சிலம்பம்!”

பழந்தமிழரின் ஆதிக்கலைகளில் முக்கியமானது சிலம்பம்.  சிலம்பல் என்கிற சொல்லுக்கு ஓசை என்பது பொருள்.  இன்றும் கூட வழக்கத்தில் தண்ணீருக்குள் கையையோ காலையோ வீசு சிறுவர்கள் ஓசை எழுப்புகின்றபோது “சிலம்பாதே” என்று பெரியோர்கள் கூறுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.  சிலம்ப விளையாட்டில் கம்பினை வேகமாக வீசும்போது அது காற்றைக் கிழித்து ஓசை எழுப்புவதாலும், கம்புகள் ஒன்றுடன் ஒன்று மோதி ஓசை எழுப்புவதனாலும் அதற்கு சிலம்பம் என்கிற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.  மலைகளில் தொடர்ச்சியாக அருவிகளதும், பறவைகளதும் மிருகங்களதும் ஓசைகள் கேட்டுக்கொண்டிருப்பதால்... Continue Reading →

அதனிலும் கொடிது முதுமையில் தனிமை

ஆரஞ்சு மிட்டாய் படம் பார்த்தேன்.  இன்றைய அவசர உலகில் உறவுகளின் அபத்தம், தனிமனிதத் தேர்வுகளின் மீது லௌதீக காரணிகள் திணிக்கும் தாக்கம் அல்லது நெருக்கடிகள் பற்றி இத்திரைப்ப்டம் விவரிக்க முயலுகின்றது.  நன்றாக எடுத்திருக்கக் கூடிய கதை.  ஆனால் திரைக்கதையின் பலவீனத்தாலும், கதையை நகர்த்திச் செல்வதில் ஓரளவு வெளிப்படையாகவே தெரிந்த குழப்பத்தாலும், பொறுத்தமற்ற பாத்திரத் தேர்வுகளாலும் சற்றே தள்ளாடித் தள்ளாடி.... ஆயினும் நல்ல திரைப்படம் ஒன்றைக் கொடுக்கவேண்டும் என்ற ஆர்வம் விஜய் சேதுபதியிடமும், பிஜூ விஸ்வநாத்திடமும் இருப்பது வெளிப்படையாகத்... Continue Reading →

17வது அரங்காடல் ஒரு பார்வை

ரொரன்றோவில் வெகுஜனக் கலாசாரத்தின் மத்தியில் சீரிய நாடகங்களை நோக்கி பார்வையாளர்களை இழுக்கும் நோக்குடன் நாடகம் மீது அக்கறை கொண்ட நண்பர்கள் பலர் இணைந்து 1996 இல் உருவாக்கிய அமைப்பே மனவெளி கலையாற்றுக் குழு ஆகும்.  பொதுவாக மனவெளி கலையாற்றுக் குழுவினர் வருடாந்தம் “அரங்காடல்” என்ற பெயரில் நாடகவிழாக்களை ரொரன்றோவில் நடத்துவது உண்டு.  அந்த வகையில் அதன் 17வது அரங்காடல் ஏப்ரல் 26ம் திகதி “ஃப்ளேடோ மார்க்கம் தியேட்டர்” இல் நடத்துவதாக திட்டமிட்டிருந்தனர். மனவெளி கலையாற்றுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில்... Continue Reading →

தொலைத்த எம்மை மீட்டல்

சென்ற ஞாயிற்றுக் கிழமை ரொரன்ரோ ஸ்ரார் பத்திரிகையின் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற Drinking in the Basement என்கிற Samantha Craggs எழுதிய சிறுகதை ஒன்றை யதேச்சையாகப் படித்தேன்.  பெரியளவில் சிலாகித்துச் சொல்ல முடியாத கதையென்றாலும் அந்தக் கதையில் வருகின்றது போன்ற வாழ்க்கை முறைகளைப் பல இடங்களிலும் பார்திருக்கின்றேன்.  போதை, பொருப்பின்மை, சிதையும் நம்பிக்கைகல் பற்றிக் கதை பேசுகின்றது.  மதுபானப் பாவனைக்கு நான் ஒரு போதும் எதிர்க்குரல் எழுப்புவதில்லை.  ஆனால் தம்மைத் தாமே வாழ்க்கையை... Continue Reading →

புலம்பெயர் நாடுகளின் அரசியலும், புலம்பெயர் தமிழர்களும்: செய்யவேண்டியது என்ன

கனேடிய பாராளுமன்றத் தேர்தல்கள் நிறைவுபெற்று ஹார்பர் தலைமையின் கீழான வலதுசாரி பழமைவாதக் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியக் கைப்பற்றி இருக்கின்றது.  அதே நேரம் புதிய ஜன நாயகக் கட்சி (NDP) கனேடியப் பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றிலேயே முதன் முறையாக இரண்டாவது அதிக இருக்கைகளைக் கைப்பற்றி, உத்தியோகபூர்வமான எதிர்க்கட்சியாக தெரிவாகியுள்ளது.  தொடர்ச்சியாக NDP கட்சியை அவதானித்துவந்ததன் அடிப்படையில் தனிப்பட்ட முறையில் எனது விருப்பத்துக்குரிய கட்சியாகவும்  NDPயினரே இருந்துவந்துள்ளனர்.  இதுவரை காலமும் நிறைய இடங்களில் என்டிபி கட்சியனர் பற்றிக் கூறியபோதெல்லாம்,... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑